சனி, 11 ஜூலை, 2020

கேள்வி : நீங்கள் வெளியில் எங்கு சென்றாலும் எடுத்து செல்லக்கூடிய ஒரு பொருள் என்ன?

என் பதில் :

ஒரு பொருள் அல்ல, இரு பொருட்கள். பெரும்பாலான நண்பர்களுக்கும் ,சொந்தங்களுக்கும்  என்னைப்பற்றி தெரிந்ததை விட இந்த நோட்டுக்கும் பேனாவுக்கும் அதிகம் தெரியும். குளியலறை தவிர அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் இரு பொருட்கள் இவை தான்.

சில சமயம் மிக முக்கியமான யோசனைகள் தேநீர் கடைகளிலோ, ஒரு பயணத்தின் போதோ அல்லது தூக்கம் வரும் சில வினாடிகள் முன்போ தான் தோன்றும். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் அது காற்றோடு போய் விடும்.

நூலகத்தில் படிக்கும் விடயங்களில் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்களை குறிப்பெடுத்துக்கொண்டு பிறகு கூகுளில் தேடி அறிந்துகொள்வேன்.
சில பாடல்களை கேட்டால் அதை பின்னர் பதிவிறக்கம் செய்ய இதில் தான் எழுதிக்கொள்வேன்.
இன்று செய்ய வேண்டிய முக்கிய செயல்களை இதில் காலையே குறித்துக்கொள்வேன். பின்னர் அதை முடித்தவுடன் அதை அடித்து விட்டுவிடுவேன்.
புத்தகம் வாசிக்கும் பொழுதோ அல்லது ஒரு திரைப்படம் பார்க்கும் பொழுதோ என்னை கவர்ந்த வாக்கியங்கள் வந்தால் அதை குறிப்பிடும் இடமும் இது தான்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டும் பொழுது தோன்றிய யோசனைகளை வாகனத்தை நிறுத்தி எழுதிய நிகழ்வுகளும் உண்டு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக