வியாழன், 9 ஜூலை, 2020

கேள்வி : ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு ஏற்படும் நிலையில் எந்நேரம் வேண்டுமானாலும் உறவாக மாறக்கூடும் என்பது உளவியல் உண்மை - அவ்வாறு இருக்கையில் முதலில் இருந்து கடைசி வரை எதிர்பாலின நட்பிடம் நட்பாக மட்டும் பழக என்னென்ன விதத்தில் முனைகிறீர்கள் ?

என் பதில் :..

நட்பில் ஆண் பெண் பேதமில்லை. ஆனால் எதிர்பாலின நட்புக்கு என்று சில வரைமுறைகள் வகுத்து விடுவோம். உண்மையா சொல்லணும் என்றால் "அப்படி பேச கூடாது…இதை பேச கூடாது" என்று மனதளவில் கட்டுப்பாடு ஒன்று இருக்கும்.

உண்மையில் ஆண்களுக்கு கட்டுப்பாடு எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. சில நேரங்களில் "அவள் என்னை விரும்புவாளோ" என்ற எண்ணம் தானாகவே பிறக்கும். ஏன் என்றால் எதிர்பாலரின் செயல்கள் அவ்வாறு இருக்கும்போது அந்த எண்ணம் எழும். அதுதான் இயற்கை. அப்ப மட்டும் கொஞ்சம் தெளிவான முடிவு எடுத்து அந்த நட்பு தப்பிச்சா தப்பிச்சபடி . இல்லை என்றால் நட்புக்கு "அரோகரா" தான்.

பெண்கள் இதில் கில்லாடிகள். "தோசையை ஊத்தி எண்ணெயை தெளிச்ச மாதிரியும் இருக்கணும்.எண்ணையை ஊத்தின மாதிரியும் இருக்கணும்". பட்டும் படாமல் விருப்பம் என்று சொல்ற மாதிரியே பேசுவார்கள். "எதுக்குப்பா தேவையில்லாமல் இப்ப இந்த நேரத்தில் இந்த டயலாக்?" என்று அழுத்தி கேட்டால் தோசையை திருப்பி போட்டு விடுவார்கள். "புஸ்ஸ்ஸ்ஸ்".

கடினமான நட்பா, இல்லை அதுக்கும் மேலயா என்று முடிவு எடுக்க வேண்டிய சூழலில் ஒன்றை மட்டும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். " நம்ம ஒரு உதவாக்கரை. நம்மளோட சேர்ந்த இவ ஒரு உதவாக்கரை.. இதெல்லாம் வாழ்க்கைக்கு செட் ஆகாது " என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்து கொண்டால் அந்த நட்பு நீடிக்கும்.

இதையெல்லாம் மீறி ஒன்று நடப்பது இயற்கையான ஈர்ப்பு.. plus*minus=always Minus தான்.

எதிர்பாலின நட்பில் திருமண முன்,திருமண பின் என்று கொஞ்சம் கடினமான நட்பு சூழல் இருக்கும். அதுவும் இயற்கை.

நட்பூக்கள் அதிசயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக