கேள்வி : தந்தைக்கு ஈடான பாசத்தை கணவனால் கொடுக்க முடியுமா?
என் பதில் :.
தந்தைக்கு ஈடான பாசத்தை கணவனால் கொடுக்க முடியாது. அதே போல தாய்க்கு இணையான பாசத்தை மனைவியால் தர முடியாது.
ஒவ்வொரு ஆணும் ஏதாவது பெண்ணை சார்ந்துதான் வாழ வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆண் சார்ந்து தான் வாழ வேண்டும். அது இயற்கை விதி. அந்த புரிதலை எவ்வாறு கொண்டு செல்கிறோமோ அதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. ( இல்லறத்தில் நாட்டம் உள்ள நபர்களுக்கு மட்டும்)
தந்தை மகள் உறவு இதயத்தோடு இணைந்த ஆத்மார்த்தமானது. ஒரு பெண்ணின் மனது ஒரு கடினமான சூழலில், "இந்த சூழலில் அப்பா இருந்தால் என்ன சொல்லி இருப்பார்?' என்று தான் யோசிக்கும். ஏன் என்றால் உலகத்தின் முதல் ஆண் சொந்தம் பெண்ணுக்கு தந்தை தான்.
ஒரு ஆணின் அர்த்தமுள்ள வாழ்வு அவன் தந்தை ஸ்தானம் அடையும் போது தான் ஆரம்பமாகிறது. புதிய அத்தியாயம் பிறக்கிறது.
மகளிடம் மிகவும் செல்லம் கொடுத்து , அச்சு வெல்லம் போல வாழ்க்கையை வாழ கற்று கொடுத்து , தன்னிலை மறக்கிறான் ஒரு தந்தை.
மகள் ஆசைப்பட்டது எட்டா கனியாக இருந்தாலும், அதை எட்டி பிடிக்க முற்படுவான் தந்தை.
கணவனால் ஒரு நல்ல புரிதலான நட்புடன் கூடிய பாசத்தை கொடுக்க முடியும். அதை புரிந்து கொள்ள மனைவி முற்பட்டால்.
ஆண் பெண் என்ற பேதமில்லாமல் , யார் இறங்கி போவது என்பதில்தான் குடும்ப வாழ்க்கையின் அடுத்த நகர்வு இருக்கும்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
கணவன் அமைவதெல்லாம் மனைவி அமைக்கும் வரம்.
பாசத்தில் தந்தை தான். பாசத்தை கணவரிடம் பெறலாம். பம்பரம் சுற்றும் சாட்டை மனைவி தங்கள் கைவசம் இருக்கும் போது, பம்பரம் சுற்றாதா என்ன?
நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக