கேள்வி : சித் ஸ்ரீராம் பாடிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
என் பதில் :..
வேறு வழியில்லை, தமிழில் ஒன்று தெலுங்கில் ஒன்றாக தந்தே ஆக வேண்டிய இக்கட்டு எனக்கு!
தமிழ்:
ஒருமுறை நண்பர் குழாமுடன் சுற்றுலா கொடைக்கானலுக்கு !
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இந்தப்பாடலை தங்கும் விடுதி ஒலிப்பான்களில் ஒலிக்க விட்டனர்.
ஆரம்பமே சித் குரல் தான்!
குரலின் இனிமையும் பாடலின் சுரமும் உடனடி ஈர்ப்பு!
எதேச்சையாக நமக்கு பிடித்தாற்போல் ஒரு அழகான பெண்ணை எதிரே பார்க்க நேர்ந்தால் அப்படியே மனது கட்டிப்போட்டது போல இருக்குமே, அப்படி இருந்தது!
உடனேயே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க மனம் செல்லவில்லை. கையை உயர்த்தி அவர்களை அமைதியாக இருக்கும்படி செய்துவிட்டு, உடனேயே அலைபேசி எடுத்து "shazam" செயலியை கேட்க வைத்து, என்ன பாடல் என்று கண்டுபிடித்து விட்டேன்.
https://youtu.be/gB1gPmtDohY
தெலுங்கு:
"ரஷ்மிகா"வின் நெளிவு சுழிவுக்காக இந்தப்பாடல் பெரும்பாலானோருக்கு பரிச்சயம் என்றாலும், எனக்கேனோ "சித் ஸ்ரீராமி"ன் குரலில் உள்ள நெளிவு சுழிவும் அதற்கேற்றபடி "பாஸ் கிடாரை" நெளிவு சுழிவோடு உபயோகித்த இசையமைப்பாளர் கோபி சுந்தரின் திறமைக்காகவுமே விருப்பம்.
காதிசைக்கருவி கொண்டு கேட்டால் அந்த பாஸ் கிடாரின் ஏற்ற இறக்கங்கள் நன்கு அறியலாம்.
எனது பாடல் விருப்பப்பட்டியலில் எப்போதும் இருக்கும், திரும்ப திரும்ப கேட்கும் பாடல் இதுவே!
ரகுமான், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் இசையில்லாமல் ஹிட் அடித்த பாடல்கள் இவை. அதற்கு முக்கிய காரணம் "சித்"தின் குரல்!

https://youtu.be/v0gNfzHLeKA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக