புதன், 29 ஜூலை, 2020

கேள்வி : பொதுவாகவே படிக்காத கணவன்மார்களை நன்கு படித்த மனைவிமார்கள் மதிப்பதுமில்லை விட்டுகொடுப்பதுமில்லை. ஏன்?

என் பதில் :.

தான் படித்தவன் பெரும்பாலானோருக்கு மமதை வருவது உண்மைதான். அது ஆணோ பெண்ணோ இருவருக்கும் வரும். இங்கு பிரச்சினை ஆணுக்கு மமதை வந்தாலும் அதை ஏற்க பெண் தயார் ஏனென்றால் கணவன் என்னும் ஓடத்தில் துடுப்பு போட்டு குடும்பத்தை கட்டுப்படுத்துவது மனைவி. எனவே ஆணும் அவனுக்கு எவ்வளவுதான் தான் படித்தவன் என்ற கர்வம் இருந்தாலும் மனைவியிற்கும் குழந்தைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை அவன் மீறுவதில்லை இதுவே உண்மை ஏனென்றால் அவனது படிப்பு முழுக்க சிலவாக போவது அந்த குடும்பத்திற்காக மட்டுமே.

ஆனால் ஒரு பெண் தான் ஆணை விட உயர்ந்தவன் என்று ஏதாவது ஒரு விடயம் கிடைத்தாலும் அதை வைத்து அதிகம் சந்தோசப்பட்டு கொள்வர் இதுவே பெருமையாக மாறிவிடுகிறது.அது கல்வியில் மட்டுமல்ல அழகு ,செல்வம் இதிலும் அவள் கர்வம் அதிகரிக்கும். நீ அழகுதான்பா நான் அதற்கு அடிமை என்று கணவன் ஏற்றுக் கொண்டு விட்டால் இப்படியானவர்கள் அடக்கவே பார்ப்பர் இன்னும். ஆனால் பல பெண்கள் தான் அழகானவள் கணவரை விட படித்தவள் என்றாலும் அவர்கள் இயல்பு அடிப்படையிலேயே கணவனையே சுற்றி சுற்றி வருவதால் அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் எவ்வளவு கற்றாலும் கணவனையே உயர்வான சொத்தாக பார்ப்பார்கள். எனவே அது ஒவ்வொருவர் வளர்ந்த விதத்தில் அது அமைகிறது.

கணவன் மீது அதிக அன்பு ,அக்கறை ,தேவை உள்ள பெண்ணுக்கு ஒரு நாளும் தான் படித்தவர் என்ற மமதை கணவனுக்கு முன்பு தோன்றவே தோன்றாது.

நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக