புதன், 29 ஜூலை, 2020

கேள்வி : உங்களுக்குத் தெரிந்த வாழ்க்கைக்கு உபயோகமான உளவியல் உண்மைகள் எவை?.

என் பதில் :


சின்ன சின்ன விஷயத்திற்காக கோபப்படும் மனிதர்கள் அன்புக்காக ஏங்க கூடிய மனிதர்களாகவே இருப்பார்கள்.

உண்மையில் அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

வேகமாக அதே நேரம் மிகக் குறைவாக பேசுபவர்கள் தங்களுடன் அதிக ரகசியங்கள் உடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

உங்களது அன்பு நிராகரிக்கப்பட்டால்இழப்பு உங்களுக்கு அல்ல அது உங்களை நிராகரிக்கும் நபருக்கே என்பதை உணருங்கள்.

ஒருவர் மீது வெறும் நான்கே நிமிடங்களில் நாம் காதலில் விழுந்து விடுவதாக ஆய்வுகள் உணர்த்துகிறது.

பப்பிள் கம்கள் நம் மன அழுத்தத்தை போக்க கூடிய ஒரு பொருள் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.

நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.

மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.


வாழ்க்கைக்கு உபயோகமான உளவியல் உண்மைகள் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக