புதன், 29 ஜூலை, 2020

கேள்வி : அகநோக்கம் (Introvert) உள்ளவர்களை பற்றி ஒரு நீண்ட விளக்கம் கூற முடியுமா?

என் பதில் :


இவர்களைத் தனிமை விரும்பிகள் என்பதை விட தனிமை சுதந்திர விரும்பிகள் எனலாம்.

பெரும்பாலோர் ' தனிமை ' என்றவுடன் , இவர் மன உளைச்சலில் இருக்கிறாரோ, காதல் தோல்வியோ என நினைக்கின்றனர். ஆனால், இவர்கள் மனம் தனிமையில் காற்றாடி போல் இலகுவாக பறந்துக் கொண்டு இருக்கும். நீங்கள் நினைக்கும்படி கவலை எல்லாம் இருக்காது.

பிற மனிதர்களை வெறுப்பவர்கள் அல்ல. ஆனால் அதை விட அவர்களுடைய உலகை அவர்கள் விரும்புபவர்கள்.

இவர்கள் கைப்பேசி எப்போதும் silent அல்லது vibrate மோடில் இருக்கும். பல அழைப்புகளை வேண்டுமென்றே நிராகரிப்பர். கொஞ்ச நேரம் கழித்து குறுந்தகவல் அனுப்புவர்.

இவர்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள் எனக் கூறுவது அபத்தம். புற நோக்குடைய (Extrovert) நண்பர்களும் இவர்களுக்கு இருப்பார்கள். "Introverts don't hate people; they hate shallow socializing "

வெள்ளிக்கிழமைக்கு அனைவரும் ஏங்குவது போல் இவர்களும் ஏங்குவார்கள். நண்பர்களுடன் பொழுது போக்க அல்ல, தன்னுடைய உலகில் இரண்டு நாள் முழுதும் மூழ்கி இருக்க.

பொதுவாக அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் , சரியான நபருடன் சரியான கருத்து மாற்றலில்,ஆழ்ந்த உரையாடலில் அவர்கள் ஈடுபடுவார்கள். இதனால் இவர்கள் வீண் கதை பேச மாட்டார்கள். புரளி எல்லாம் இவர்களிடம் பலிக்காது.

என் முகநூல் ..வாட்ஸாப் .இல் .நண்பர்கள் சொந்தங்கள்  நிறைய introverts இருக்கிறார்கள். தமிழை விட ஆங்கிலத்தில் அதிகம் பார்த்திருக்கிறேன்.
இவர்கள் எழுத்தளவில் பேசுவதை நம்பி விட வேண்டாம். நேரில் அமைதியே மிஞ்சும். ஆனால் நீங்கள் பேசுவதை நன்கு கவனிப்பர்.

'Solitude is bliss' என்பதை இவர்களைப் போல் அதை ஆழ்ந்து அறிந்தவர் யாருமில்லை.

இவர்களின் எண்ணங்கள் தெளிவாக இருக்கும். ஆலோசனை வேண்டினால் உங்களுக்கு ஏற்றவற்றை எடுத்துக் கூறுவார்கள்.

இவர்களுக்கு படைப்புத் திறன் அதிகமாக இருக்கும் . புத்தகம், இசை, செல்லப் பிராணியுடன் விளையாடுவது, தோட்டக்கலை, ஓவியம் போன்று தன்னிச்சையாக இயங்கும் வேலையிலும் பொழுது போக்கிலும் மட்டும் தான் விரும்பி செயல் படுவார்கள்.

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை எளிதாக கணித்து வைத்துக் கொள்வார்கள்.
கூட்டமோ அல்லது அதிக இரைச்சலோ இவர்களுக்கு சுத்தமாக ஆகாது. கல்யாண வீடோ, பிறந்தநாள் விழாவோ , அழைப்பு வந்தால் எவ்வாறு தவிர்க்கலாம் என்று தான் சிந்தனை ஓடும். அங்கே அவர்கள் அசவுகரியமாக உணர்வார்கள்.

Introvert- களுக்கு extrovert வாழ்க்கைத்துணை/காதல் தான் பெரும்பாலும் அமையும். இரு துருவங்களாக இருப்பினும் அழகாய் பொருந்துவார்கள்.

இவ்வளவு பேசியுள்ள நானும் ஒரு INTROVERT 😁

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக