கேள்வி :
இ.ஐ.ஏ 2020 என்றால் என்ன? இது மிகவும் ஆபத்தானதா? இ.ஐ.ஏ 2020 எனும் சட்டம் நம் நாட்டிற்கு நல்லதா? கெட்டதா?
என் பதில் :..
தமிழகத்தில் கோயம்பத்தூரில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒரு ப்ராஜெக்ட்டை தனியார் நிறுவனம், கொண்டு வருகிறது என வைத்துக் கொள்வோம்.
இது நல்ல ப்ரோஜெக்டா??
ப்ரொஜெக்ட்டை செயல்படுத்த தேவைப்படும் இடம் போதுமானதா?அல்லது அதிகமாக உள்ளதா?
இதை அமைப்பதன் மூலம் சுற்று சூழல் ரீதியாக ஏதேனும் பிரச்னை வருமா?
சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் மனித-சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துமா??
இதையெல்லாம் முன்கூட்டியே கணக்கிட பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA). அதாவது முன்மொழியப்பட்ட திட்டம் அல்லது அதன் வளர்ச்சியின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையாகும்.
மேலும் அந்த திட்டத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
சரி அந்த ப்ராஜெக்ட் வேண்டாம் என்றால் அதற்கு மாற்றாக வேறு ஏதேனும் உள்ளதா? அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களை ஒப்பிட்டு எது சிறந்தது எனவும் என பார்க்கும் முறைகளும் இதில் அடக்கம்.
மனிதன் வளர்ச்சி அடைய வேண்டுமானால் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க முடியாது. விவசாயம் செய்து உணவு விளைவிக்க, காடுகளை அழித்தது, அந்த விவசாய நிலங்களை அழித்து வீடு கட்டுவது, மரங்களை அளிப்பது, என எந்த ஒரு வளர்ச்சி செயல்பாடுகளும் சிறிதளவேனும் சுற்று சூழலில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது..
நமது வளர்ச்சி திட்டங்கள் மனிதனுக்கு மட்டும் பயன்படுவதாக இல்லாமல், சுற்று சூழல் அழிவையும் ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த EIA கொண்டு வரப்பட்டது.
என்னென்ன ப்ராஜெக்ட்களுக்கு இந்த EIA பயன்படுத்தப்படுகிறது?
நிலக்கரி மற்றும் பிறப்பொருட்களின் சுரங்கம் தொடர்பான திட்டங்கள்(Mining of coal and other materials)
உள்கட்டமைப்பு மேம்பாடு(Infrastructure Development)
வெப்ப, அணு, நீர் மின் திட்டங்கள் (Thermal, nuclear, hydro power projects)
ரியல் எஸ்டேட்
தொழில்துறை திட்டங்கள் (Industrial projects)
குறிக்கோள்கள்:
வளர்ச்சி நடவடிக்கைகளின் பொருளாதார, சுற்றுசூழல் மற்றும் சமூக தாக்கங்களை அடையாளம் காணுதல்.
சுற்றுசூழல் விளைவுகள் பற்றிய தகவல்களை வழங்குதல்.(for decision making).
பொருத்தமான மாற்று மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடையாளம் காணுதல். அதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
வரலாறு:
EIA என்பது இந்தியாவில் 1976–77 ஆம் ஆண்டில் திட்டக்கமிஷன், நதி பள்ளத்தாக்கு திட்டங்களை(river valley projects) சுற்றுச்சூழலின் பார்வையில் மதிப்பீடு செய்யுமாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு அறிவுறுத்திய போது உருவாக்கப்பட்டது.
பின்னர், பொது முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல் தேவைப்படும் அனைத்து திட்டங்களுக்கும் இது நீட்டிக்கப்பட்டது.
பின், 1986 ஆம் ஆண்டு சுற்றுசூழல் பாதுகாப்பு(Environment(protection) Act 1986) சட்டத்தை இயற்றியது.இச்சட்டம் EIAஐ சட்டப்பூர்வமாக்கியது.
மேலும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் கீழ், இந்தியா தனது முதல் EIA விதிமுறைகளை 1994 இல் அறிவித்தது. இயற்கை வளங்களை பயன்படுத்துதல் மற்றும் பாதிக்கும் (மாசுபடுத்தும்) நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட கட்டமைப்பை அமைத்தது. ஒவ்வொரு வளர்ச்சி திட்டமும் முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்கு EIA செயல்முறைக்கு செல்ல வேண்டும்.
1994 EIA அறிவிப்பு, 2006 இல் மாற்றியமைக்கப்பட்ட வரைவுடன் மாற்றப்பட்டது. அந்த ஆண்டின் தொடக்கத்தில், EIA செயல்முறை மிகவும் வெளிப்படையான மற்றும் விரைவானதாக மாற்றுவதற்கும் அரசாங்கம் அதை மீண்டும் வடிவமைத்தது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) 2020 என்பது 2006 பதிப்பிலிருந்து மாற்றியமைக்கபட்ட ஒன்று.
இந்த புதிய EIA 2020 வரைவில் என்ன பிரச்னை??
புதிய வரைவு, "தொழில்களுக்கு சாதகமாக இருப்பதாகவும்நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையிலான சமநிலையை பெரும்பாலும் புறக்கணிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையை பலவீனப்படுத்தும் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களை அமைதியாக்கும் முயற்சி" என ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதற்கு மாறாக, புதிய வரைவு வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் செயல்முறையை விரைவுபடுத்தும் என்று மத்திய அரசாங்கம் வாதிடுகிறது.
வரைவு EIA 2020 இல் உள்ள ஓட்டைகள்:
EIA புதிய வரைவு 2020 post-facto clearance-ஐ அனுமதிக்கிறது. இதன் பொருள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லாமல் அல்லது சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஒரு திட்டம் வந்திருந்தாலும், அது புதிய வரைவு EIA 2020 இன் கீழ் செயல்பட முடியும்.
இது பேரழிவு தரக்கூடியது. நம்மிடம் ஏற்கனவே பல திட்டங்கள் EIA அனுமதி இல்லாமல் இயங்குகின்றன. விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் ஆலை ஒரு உதாரணம். மே 7 அன்று ஸ்டைரீன் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த ஆலை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது அந்த விபத்திற்கு பின்னர் தான் தெரியவந்தது.
இதேபோன்ற ஒரு சம்பவம் மே 27 அன்று நடந்தது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால், கிழக்கு அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு வெடித்து தீப்பிடித்தது. அசாம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதியைப் பெறாமல் எண்ணெய் ஆலை 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாக வாரியம் தெரிவித்துள்ளது.
புதிய வரைவு, சமூகங்களிலிருந்து அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கும் இரண்டு முக்கியமான வழிகளும் உள்ளன.
முதலாவதாக,
இது பொதுமக்கள் பங்கேற்புக்கான இடத்தைக் குறைக்கிறது. இதற்கு முன்னால் இருந்த EIA வழிமுறை செயல்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது மற்றும் சமூகங்கள் தங்கள் பகுதிகளில் முன்மொழியப்படும் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெறுவது மட்டுமல்லாமல், திட்டங்கள் தொடர்பான அவர்களின் கவலைகள் குறித்துப் பேசவும் கணிசமாக உதவியுள்ளன.ஆனால் இப்போது அது இல்லை.
நவீனமயமாக்கல் அல்லது நீர்ப்பாசனத் திட்டங்கள், அனைத்து கட்டிட நிர்மாணங்கள் மற்றும் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் அல்லது அகலப்படுத்தல், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து திட்டங்களும், புதிய வரைவில் பொதுமக்கள் பங்களிப்பிலிருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது
செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக பொது விசாரணைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது,
ஏற்கனவே பெரும் தீங்கு விளைவித்த மற்றும் EIA இன் ஒப்புதல் இல்லாமல் செயல்பட்டு வரும் திட்டங்களை சட்டப்பூர்வமாக்குவதாகும்.
இத்தகைய திட்டங்களை EIA செயல்பாட்டின் கீழ் எடுக்க அனுமதிப்பதன் மூலம், அரசாங்கம் சட்டவிரோத திட்டங்களுக்கு அடிப்படையில் அனுமதி அளிக்கிறது.
சுருக்கமாக, புதிய வரைவு EIA 2020 சுற்றுச்சூழல் எதிர்ப்பு மற்றும் மக்கள் விரோத சட்டம். பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மீறல்களை முறைப்படுத்த இது ஒரு தந்திரம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், இயற்கை வளங்கள் மிகவும் தேவைப்படும் ஏழைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கும் நமக்கு மிகவும் வலுவான சட்டங்கள் தேவை.
ஆதிவாசிகள், விவசாயிகள் மற்றும் கடலோர மற்றும் மீனவர் சமூகங்கள் போன்ற ஏராளமான சமூகங்கள் உள்ளன. அவற்றின் வாழ்க்கை முக்கியமாக சுற்றுச்சூழலின் நிலையைப் பொறுத்தது. EIA இன் எந்தவொரு கடுமையான மாற்றங்களும் இந்த மக்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சுற்றுச்சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக