கேள்வி : படிப்பறிவு இல்லாத பெண்களை மணப்பது சரியா? அவர்கள் குணாதிசயங்கள் எப்படியிருக்கும்?
என் பதில் :..
இந்த கேள்விக்கு மிகச்சிறந்த உதாரணமாக பல படிக்காத ஆனால் மிகவும் திறமைசாலிகள் உள்ளனர். படிப்பறிவை மட்டும் வைத்து பெண்களை எடை போடக்கூடாது.
முதலாவது பீஹார் முதல்மந்திரியாக ஆக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் அவர்களின் மனைவி, ராப்ரி தேவி. சிறைசெல்ல வேண்டிய கட்டாயத்தில் லாலு ஒரே இரவில் அவரை முதல்மந்திரியாக ஆக்கிவிட்டார். யாருமே எதிர்பாராத விதத்தில் ராப்ரி தேவி மிக விரைவில் அரசியல் கடிவாளத்தை பிடித்து லாலுவின் சிறை வாழ்வின் போது அந்த மாநிலத்தை ஆண்டார். பீஹார் அரசியல் என்பது ஒரு கட்டுக்கடங்கா காட்டு குதிரை போன்றது. அங்குள்ள அரசியல்வாதிகளை சமாளிப்பதில் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட நிதீஷ் குமார் போன்றவர்களே திண்டாடுவார்கள்.
இரண்டாவது அதற்கு முன்பான கதை. கொள்ளைக்காரர்கள் தங்கள் சாமராஜ்யமாக அமைத்துக்கொண்ட இடம் சம்பல் பள்ளத்தாக்கு. ஷோலே படத்து கப்பர்சிங் போல அங்கு ஆயிரம் கப்பர் சிங். அவர்களுக்கு இடையே படிப்பறிவு இல்லாத பூலன் தேவி, ஒரு கொள்ளை கூட்டத்தை உருவாக்கி அங்கிருந்த மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். பிறகு அத்தொழிலை கைவிட்டு, அரசியலில் புகுந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
படிப்புக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. எனவே ஒரு பெண்ணை மணக்க படிப்பை ஒரு காரணியாக்கக்கூடாது. ஒரு பட்டதாரியைத்தான் மணப்பேன் என்ற என் நண்பரின் மகன் இன்றும் ஒரு கட்டை பிரம்மச்சாரி.
இந்த உலகில் பெண்ணின் குணாதிசயங்களை முன்கூட்டியே அறிந்துகொண்டு எத்தனை பேர் மணம் புரிந்து கொள்கின்றனர்? அப்படி அறிந்து மணந்தவர்கள் என்றால் இன்று ஏன் இவ்வளவு விவாகரத்து நடக்கிறது? கடையில் போய் கத்தரிக்காய் வாங்குவது போல, வெளித் தோற்றத்தை கண்டு மயங்கி மணப்பது இல்லையா?
இருவர் மனம் ஒப்பி ஒருவருக்கொருவர் அனுசரித்து நடத்துவதே வாழ்க்கை. அமைந்த குணாதிசயங்களை மாற்றிக்கொண்டால் தான் வாழ்வில் நிம்மதி.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக