கேள்வி : தனியார் கம்பெனியில் வேலை செய்பவன் நான். எந்த மாதிரியான தொழில்களை என்னுடைய இரண்டாம் வருமானத்திற்காக செய்ய முடியும்? நேரமின்மையால் என்னால் நேரடியாக தொழில் செய்ய முடியாது. கூலிக்கு ஆள் வைத்து செய்வது சரிவருமா?
என் பதில் :..
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போ உள்ள விலைவாசிக்கு இரண்டாம் வருமானம் அவசியம் தான். ஏதாவது தொழில் செய்ய வேண்டுமானால் முதலீடு அவசியம்.
ஆனால் ஆள் வைத்து வேலை செய்தால் அவர் உண்மையானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆள் கிடைப்பது கஷ்டம்.
ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடலாம். ஆட்டோ ஓட்டுநர் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
நம்பிக்கையான பையனுக்கு பெட்டி கடை வைத்து கொடுக்கலாம்.
நல்ல மாஸ்டர் வைத்து மாலை நேர பரோட்டா ஸ்டால் நடத்தலாம்.
கட்டிட வேலைக்கு தேவையான எல்லா வித சாமான்களையும் சப்ளை செய்யலாம்.
காலை, மாலைகளில் காய்கறி, பால் வியாபாரம் செய்யலாம்.
ஆவின் பால் ஏஜென்ட் ஆகலாம்.
இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாம்.
பங்கு சந்தை பற்றியோ, மீச்சுவல் நிதி பற்றிய அடிப்படை மற்றும் தெளிவான கண்ணோட்டம் இல்லாமல் அதில் இறங்கினால் அவ்வளவு தான்.
ஏகப்பட்ட நஷ்டத்தில் கொண்டு போய் விட்டு விடும். அதிக மனக்கஷ்டமும் குடும்ப சண்டையும் நிச்சயம். மாற்றி வீட்டுக் கொண்டே இருக்க தெரிந்திருக்க வேண்டும். இது ஒரு சூதாட்டம் தான். நீண்ட பொறுமையும் நேரமும் அவசியம். ஒவ்வொரு மாற்றுதலுக்கும் தனி கட்டணம். பங்கு சந்தை எப்போது கைகொடுக்கும் எப்போது காலை முழுமையாக வாரி குழியில் தள்ளும் என்று எந்த ஜாம்பான்களாலும் சொல்ல முடியாது. அது ஒரு இரகசியங்கள் நிறைந்த குகை, உள்ளே போனால் வெளியே வருவது மிக கஷ்டம். லாபம் வரும்போது முடித்து கொள்ளலாம் என்று நினைப்போம். அது நஷ்டத்தை நோக்கி போய்க்கொண்டே இருக்கும். தினமும் இணைய தளத்தில் உங்களுடைய முதலீட்டின் நிலைமையை பார்த்து கண் பூத்து போவது தான் மிச்சம். அப்படி லாபம் சிறிதளவு வந்தாலும், தற்போதைய சட்டங்களின் படி வருமான வரி மற்றும் மற்ற வரி தொல்லைகள். போதும் போதும் என்றாகி விடும். தனி வருமான வரி பாரம் சமர்ப்பிக்க வேண்டும். அதெல்லாம் உபரியாக பணம் இருக்கிறவங்களுக்கும் அதே வேலையாக இருக்கிறவர்களுக்கும் தான் சரிப்பட்டு வரும்.
சிந்தித்து செயல் படுங்கள் .
நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக