வியாழன், 24 செப்டம்பர், 2026

இதற்கான வழிகாட்டுகிறார் வேதியியல் பட்டதாரி தமிழ்ச்செல்வன்*

 *வெளுத்துக்கட்டு என்பது சாதாரணமாக தோன்றலாம் இதில் உள்ள இடர்பாடுகளை நாம் புரிந்து கொண்டு முயற்சித்தால் நாமும் வாழ்க்கையில் மேம்படலாம்* 


*

 உடுமலை செப் 24-
உடுமலை அருகே ஆனைமலை ரோட்டில் உள்ள உள்ள கரட்டுமடம் பகுதியில்
வெளுத்துக்கட்டு என்ற பெயரில் துணிகளை வெளுத்து கொடுக்கும் தொழிலை சிறப்பாகக் செய்து வரும் தமிழ்ச்செல்வன் தனித்துவமாக தெரிகிறார்.சலவை பணியாளர்கள் மட்டுமே செய்து வரும் இந்த தொழிலை மாற்று சமூகத்தவர்கள் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை ஆனால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கழுதை வாகனத்தை படமாக்கி ஒரு துணி வெளுப்பவரின் படத்தை போட்ட லோகோவுடன் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். வேதியியல் பட்டதாரி யான இவருக்கு ஒரு மகன் ஐடி  துறையில்பணி பணியாற்றி வருகிறார்.மகள் அமெரிக்காவில் மனிதர்களை பாதிக்கும் மிக மோசமான நோய்களுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பிரிவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.
   இது குறித்து தமிழ்ச்செல்வன் கூறும் போது இந்த வெளுத்து கட்டு பெயரை கேட்டாலே துணி துவைக்கும் சமூகத்தினரை தான் இதுவரையிலும் இந்த சமூகம் பார்த்து வந்தது .முதல் முறையாக என்னால் இது மாற்றப்பட்டுள்ளது. என்கிறார் மேலும் கழுதையின் முதுகில் துணிமூட்டையோடு இருப்பதால் இது இயல்பாகவே மக்களிடம் சென்று சேரும் வகையில் *லோகோவை* அமைத்துள்ளதாக கூறுகிறார். மேலும் துணிகளை வெறுப்பதற்கு நல்ல உயர்தரமான வாஷிங் மெஷின் வைத்து அதிலே தான் துணி துவைக்கப்படுகிறது. அதற்கான தனியாக கூடாரம் அமைத்து நிழல் படும் வகையில் வெயிலில் காயும் வரை கூட அமைத்துள்ளார். 3 எச்பி சர்வீஸ் மின் இணைப்பு பெற்று 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இந்த பணிகளை செய்து வருகிறார். மின்சார வெட்டு இயந்திர பழுது என்ற சிறு சிறு பணிகளைக் கூட கூட உன்னிப்பாக கவனித்து பெரும்பான்மையான துணிகளை வெளுக்கும்போது ஏற்படும் இடர்களை இவரை முன் நின்று செய்கிறார். .இந்த வெளுத்துக்கட்டு நிறுவனத்தில் ஐந்துக்கும் மேற்ப்பட் பணியாளர்கள் தற்போது ஒரு சிப்ட் பணியாற்றினாலும் வரும் காலத்தில் இரண்டு மூன்று ஷிப்டுகளாக பிரித்து இதனை செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார். இதேபோல் துணிகளை காய போடுவதற்கும் பறவைகள் வராத வகையில் மிகவும் நுண்ணிய கம்பி வேலிகளை அமைத்து பாதுகாக்கவும் எச்சரிக்கையோடும் இப்பணிகளை செய்து வருகிறார். துணிதுவைக்கும் லாண்டரி தொழிலை கேவலமாக எண்ணாமல் இவருக்கு   நல்ல வேளாண் நிலம் உடல்நிலை காரணமாக அவைகளை பராமரிப்பது இல்லை  இவரது உறவினர்கள் இவரை ஒரு சில சமயங்களை கிண்டலாக வும் கேலியாகவும் பேசுவதை நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார் உதாரணமாக யாரேனும் இறந்து விட்டால் பந்தம் பிடிக்க ஆள் அனுப்ப இயலுமா என்று கேட்டு தொலைபேசியில் கூப்பிட்டு வருவதையும் குறிப்பிட்டு சொன்னார். அதேபோல் கழுதையோடு இருக்கும் மனிதர் படத்தை வேறு பங்காளிகள் உறவினர்கள் பார்த்து அவற்றோடு இவரையும் இணைத்து பேசுவதையும் நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார். 
    எதிர்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் காம்போ எனப்படும் முறையில் தம் குடும்பத்தில் பயன்படுத்தும் அனைத்து துணி களையும் வாரம் ஒரு முறை  துவைத்து நேரடியாக  வாங்கி கொடுப்பதும் அதற்கு குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொள்வதுமாக இந்த தொழிலை இன்னும் சிறப்பாக மேம்படுத்தும் வகையில் செய்வதுமாக கூறுகிறார். இந்த துணிகளை வெளுக்கும் தொழிலை செய்வதற்கு அவர் அரசு சிறு தொழில் அடிப்படையில் வங்கியில் கடன் மாவட்ட தொழில் மையம் வழியாக கடன் உதவி வழங்கப்படுகிறது. 
   தமிழ்ச்செல்வன் கூறும்போது கேரளா கொழிஞ்சாம்பாறை பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் வரும் லாண்டரி நிறுவனத்தை பார்த்து தாம் இதை செய்யத் துணிந்தாகவும் இந்த  தொழிலை செய்வதில் கேவலம் இல்லை என்றும் தொழிலில் தனக்கு மிகவும் விருப்பமானதாகவும் அர்ப்பணிப்புடன் செய்வதாகவும் தெரிவிக்கிறார். 
இந்த தொழிலில் துணிகளை வாங்கிட்டு வைத்து தேய்த்து அதனை முறைப்படி மடித்து அவர்கள் கூறிய பைகளை போட்டு தரும் வரைக்கும் உள்ள நடைமுறைகளையும் அதில் உள்ள அனைத்து நடைமுறை சிக்கல்களையும் தாம் ஒருவரால் கண்டிப்பாக செய்துவிட முடியும் என்று மிகுந்த நம்பிக்கை ஒரு கூறுகிறார். வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்கள் துணி வகைகளை பெற்றுக்கொண்டு துவைத்தல் கஞ்சி இடுதல் அயன் செய்து தருதல் இந்த பணிகளையும் முடித்து அவர்களது வீட்டுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் தருவதாக தெரிவிக்கிறார். மேலும் தான் மாற்று சமூகம் என்றாலும் இந்த பணியின் மூலம் பணியின் மூலம் எனக்கு  மன நிறைவு ஏற்படுகிறது. மேலும் தொழிலில்எதிர்கால வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் சுய முன்னேற்றத்தின் மூலம் முன்னேற விரும்புபவர்கள் இத்தொழிலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் எனவும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
இவரை  99 76 94 30 69 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

புதன், 23 செப்டம்பர், 2026

வெளுத்துக் கட்டு எனும் பெயரில் துணிகளை வெளுத்துக் கொடுக்கும் தொழிலை சிறப்பாகச் செய்யும் தமிழ்செல்வன் .A

 வெளுத்துக் கட்டு எனும் பெயரில் துணிகளை வெளுத்துக் கொடுக்கும் தொழிலை சிறப்பாகச் செய்யும் தமிழ்செல்வன் .A 

வளரும் நாகரிக உலகில் ஒவ்வொரு மனிதனும் தன்னை நாகரிகமாகவும், அழகியலாகவும், தோற்றத்தில் மிடுக்காகவும் காட்டிக்கொள்ள இவர், அவர் என வேறுபாடு இல்லாமல் அனைவருமே விரும்புவர். 
அவ்வாறே ஒவ்வொருவரும் தன்னுடைய உடைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து  உடையணிந்து தோற்றமளிக்கின்றனர். ஒரு நாள் போட்ட துணிகளை மறுநாள் போடுவதில்லை. 
இந்த வளர்ந்து வரும் உலகில் தன்னுடைய துணிகளை தாமே துவைத்து அதனை தேய்த்து  போடுவதென்பது இயலாத காரியம். பழங்காலத்தில் இதற்கென ஒரு சமூகம் இருந்தது.  காலப்போக்கில்  அது மாறி இந்த சலவை செய்யும் தொழிலை அனைவருமே செய்து வருகின்றனர்.
உதாரணமாக பியூட்டிசியன் என்ற பெயரில் முடிவெட்டும் தொழில் நாகரிகமாகி  மிகப்பெரும் கார்ப்பொரேட் மயமாகி  ஐ.டி. படித்த மாணவர்களும் இந்தத் தொழிலை  இப்போது செய்து வருகின்றனர். இதில் ஏஜென்சி, முகமை போன்று குறிப்பிட்ட பிராண்ட் அடையாளத்தின் கீழ் ஒவ்வொரு பெரு நகரங்களிலும், மாநகரங்களிலும், வளர்ந்து வரும் நகரங்களிலும் இந்தத் தொழில் நல்ல இலாபத்தோடு மிகப்பெரும் தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளது என்றால் மிகையில்லை. 
அவ்வாறே துணி வெளுக்கும் தொழிலை செய்யும் குறிப்பிட்ட சமூகத்தார் தவிர பிற சமூகத்தவரும் தற்போது செய்து வருவதும் அதன் ஒரு பகுதியாக உடுமலை அருகே கரட்டுமடம் பகுதியில் வெளுத்துக்கட்டு எனும் பெயரில்  கழுதை வாகனத்தை படமாக்கி ஒரு துணி வெளுப்பவரின் படத்தைப் போட்டு மிகவும் சிறப்பாக செய்து வருகிறார் தமிழ்செல்வன் . குறிப்பாக இவர் அந்த சமூகத்தைச் சார்ந்தவர் இல்லை என்பதே இங்கு முக்கியமான செய்தி. 
இந்த வெளுத்துக்கட்டு எனும் பெயரில் துணிகளை வாங்கி துவைத்து அதனை இஸ்திரி எனும் பெட்டிபோட்டு தேய்த்து கொடுக்கின்றார். இதற்காக அவர் வாங்கும் தொகை  மிகவும் குறைவு. ஒரு துணிக்கு  30 முதல் 50 வரை பெறுகின்றார். கடினமான பெட்சீட் துணிக்குக் கூட இதே தொகையினை பெறுகிறார். 
இந்தத் தொழிலை அவர் செய்வதில் இழிவாகக் கருதவில்லை. ஆனால் இவர் கொங்கு பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினர்  என்பதால் இவரை நோக்கி சொந்த பந்தங்களே அதிகமாகத் துணிகளை கொடுத்து  வெளுத்துத்தரச் சொல்கின்றனர். 
பெரும்பாலான மக்கள் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் அவர்களே கொண்டு வந்து கொடுத்து வாங்கிச்செல்கின்றனர். 
கிராமப் பகுதியில் துணி வெளுக்கும் தொழிலை செய்யும் சமூகத்தைச் சேர்ந்தோர் இல்லாமலிருப்பதும், அவர்கள் இறந்து விட்டால் அவர்களின் குழந்தைகள் அந்தக் குலத்தொழிலை செய்யாமல் விடுவதும்,  இவர்களுக்கு உதவியாக இருக்கின்றது. 
உடுமலை மடத்துக்குளம் பொள்ளாச்சி தெற்கு பகுதிகளிலிருந்து மட்டும் தற்போதைக்கு துணிகள் வருவதும் இதனை செய்து கொடுக்கவே தற்போது  சரியாக இருப்பதையும் அடுத்த கட்டமாக இதனை ஒரு கார்ப்பொரேட் நிறுவனமாக உயர்த்தி செய்வதையே தன்னுடைய இலட்சியமாகக் கூறுகிறார் தமிழ்செல்வன் 
உடுமலையிலிருந்து ஆனைமலை செல்லும்சாலையில் கரட்டுமடம் பகுதியில் இந்த வெளுத்துக்கட்டு லாண்டரிகடை இருப்பதால்  உடுமலையிலிருந்து பொள்ளாச்சியிலிருந்தும், ஆனைமலை பகுதியிலிருந்தும்  துணிகள் நிறைய வருவதாகக் கூறுகிறார். 
இந்த துணி வெளுக்கும் தொழிலை மிகவும் ஈர்ப்போடு செய்யும் செல்வராஜ் ஒரு வேதியியல் பட்டதாரி என்பது மிக முக்கியமானதாகும். இவருக்கு  மகள் அமெரிக்காவில் மனிதர்களை பாதிக்கும் மிக மோசமான நோய்களுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பிரிவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்,  மகன்  வெளிநாட்டில் ஐ.டி. துறையில்  பணியாற்றி வருகின்றனர். . கல்லூரி படிப்பு முடிந்து நேரடியாக விவசாயம் துறையில் இறங்கி சுமார் 25 ஆண்டு காலம் விவசாயம் பார்த்து பின்பு அதை விட்டு விலகி தற்போது இந்த சலவை துறையில் இறங்கி பணி செய்து வருகிறேன்
இந்தத் தொழிலை பற்றி தமிழ்செல்வன்  கூறும்போது இந்த வெளுத்துக்கட்டு  பேரைக் கேட்டாலே துணி வெளுக்கும் சமூகத்தினரைத்தான் இது வரையிலும் இந்த சமூகம் பார்;த்து வந்தது. முதன் முறையாக என்னால் இது மாற்றப்பட்டுள்ளது என்கிறார். மேலும், கழுதையின் முதுகில் துணி மூட்டையோடு இருப்பதால் இது இயல்பாக மக்களிடம்சென்று சேரும் வகையில் இந்த லோகோவைஅமைத்துள்ளதாகக் கூறுகிறார்.
மேலும், துணிகளை வெளுப்பதற்கு நல்ல உயர்தரமான வாசிங்மெசின் வைத்து அதிலேதான் துணி வெளுக்கப்படுகிறது. இதற்கென தனியாக கூடாரம் அமைத்து நிழல் படும் வகையிலும், வெயிலில் காயும் வகையிலும் கூடாரம் அமைத்துள்ளார்.
3 எச்.பி. சர்வீஸ் மின் இணைப்பு பெற்று 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இந்த பணிகளை செய்து வருகிறார். மின்சார வெட்டு, இயந்திரம் பழுது என்ற சிறு சிறு காரணங்களைக் கூட உன்னிப்பாகக் கவனித்து பெரும்பான்மையான பணிகளை சிறு சிறு மின்சார பணிகள், துணிகளை வெளுக்கும் போது தற்காலிகமாக ஏற்படும் இடர்களை இவரே முன்னின்று செய்கிறார். 
இந்த வெளுத்துக்கட்டு நிறுவனத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட ;பணியாளர்கள்  (தற்போதைக்கு ஒரு சிப்ட்) பணியாற்றினாலும் வரும்காலத்தில்  இரண்டு மூன்று சிப்ட்களாகப் பிரித்து இதனை செய்யவும் துணிந்துள்ளார். 
அதே போல் துணிகளைக் காயப்போடுவதற்கும்  பறவைகள் வராத வகையில் மிகவும் நுண்ணிய கம்பி வேலிகள் அமைத்து பாதுகாப்பாக எச்சரிக்கை உணர்வோடு செய்து வருகிறார். 
துணி வெளுக்கும் லாண்டரி தொழிலை  கேவலமாக எண்ணாமல் இருந்தாலும் இவருக்கு 20 ஏக்கர் நல்லவேளாண் நிலம் இருந்தாலும் இவரது உறவினர்கள் இவரை ஒரு சில சமயங்களில் கிண்டலாகவும் கேலியாகவும் பேசுவதை நகைச்சுவையோடு கடந்து செல்கிறார்.
உதாரணத்திற்கு யாரேனும் இறந்துவிட்டால் பந்தம் பிடிக்க ஆள் அனுப்ப இயலுமா என்று கேட்டு தொலைபேசிகள் வருவதையும் குறிப்பிட்டு சொன்னார். அதே போல் கழுதையோடு இருக்கும் மனிதர் படத்தை  இவரது பங்காளிகள் , உறவினர்கள் பார்த்து 'ஏனுங்க மாப்ள,  அந்தக் கழுதை பக்கத்துல உங்க படம் இருந்தா இன்னும் நல்லா இருக்குங்கோ' என்று தம் காதுபட பேசுவதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார் தமிழ்செல்வன் 
எதிர்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் காம்போ எனப்படும் முறையில் தம் குடும்பத்தில் பயன்படுத்தும் அனைத்துத் துணிமணிகளையும் வாரமொருமுறை அல்லது மாதமிருமுறை வாங்கித் துவைத்து தேய்த்து கொடுப்பதும் , அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பெற்றுக்கொள்வதுமாக இந்தத் தொழிலை இன்னமும் சிறப்பாகவும் மேம்படுத்தும் வகையில் செய்வதுமாகவும் கூறுகிறார்..
இந்த துணிகள் வெளுக்கும் தொழிலை செய்வதற்கு அரசு சிறு தொழில் அடிப்படையில்  வங்கியில் கடனும் மாவட்டத் தொழில் மையம் வழியாகக் கடனுதவி வழங்கப்படுகிறது. 
இந்த தமிழ்செல்வன்   பொள்ளாச்சி பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் லாண்டரி நிறுவனத்தைப்பார்த்து தாம் இதை செய்யத் துணிந்ததாகவும், ஒரு தொழிலைச் செய்வதில்  கேவலம் இல்லை எனவும், இந்தத் தொழில் தமக்கு மிகவும் விருப்பமாகவும், அர்ப்பணிப்புடன் செய்வதாகவும் கூறுகிறார். 
இந்தத் துணி வெளுக்கும் தொழிலில்  துணிகளை வாங்கி துவைத்து தேய்த்து அதனை முறையாக மடித்து அவர்களுக்கு உரிய  பைகளைப் போட்டுத் தரும் வரைக்கும் உள்ள நடைமுறைகளையும் அதில் உள்ள அனைத்து நடைமுறை சிக்கல்களையும்  தம் ஒருவரால் கண்டிப்பாக செய்து விட முடியும் என்று மிகுந்த தன்னம்பிககையோடு கூறுகிறார் வெளுத்துக் கட்டு தமிழ்செல்வன் 
இவர் வெளுப்பது துணிகளை மட்டுமல்ல, சமூகத்தையும் என்று அவரது துணிவான பேச்சிலிருந்தும் செய்யும் தொழிலிலிருந்து தெரிய வருகிறது.

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

தமிழ்நாட்டில் ஒரு சலவைச் சேவைத் தொழிலைத் தொடங்குவதற்கு,

 

தமிழ்நாட்டில் ஒரு சலவைச் சேவைத் தொழிலைத் தொடங்குவதற்கு, உபகரணங்களை வாங்குவது அல்லது ஒரு கடையை வாடகைக்கு எடுப்பது என்பதைத் தாண்டி, ஒரு முறையான திட்டமிடல் தேவைப்படுகிறது. இதில் பொருத்தமான வணிக மாதிரியைத் தேர்ந்தெடுப்பது, தொடக்கச் செலவுகளை மதிப்பிடுவது, உரிய பதிவுகளை நிறைவு செய்வது, நிலையான வாடிக்கையாளர் தேவை உள்ள ஓர் இடத்தைக் கண்டறிவது, மற்றும் வணிகத் தேவைகளின் அடிப்படையில் நிதியுதவியை ஏற்பாடு செய்வது ஆகியவை அடங்கும்.

 

இந்த வழிகாட்டி, தமிழ்நாட்டில் சலவைச் சேவைத் தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதை விளக்குகிறது. இதில் வணிக மாதிரிகள், மதிப்பிடப்பட்ட முதலீடு, உரிமத் தேவைகள், இடத் தேர்வுகள், மற்றும் வணிகக் கடன்கள் போன்ற நிதியுதவி விருப்பங்கள் ஆகியவை அடங்கும்.

சலவை சேவைகளுக்கு தமிழ்நாடு ஏன் ஒரு சிறந்த சந்தையாக உள்ளது

தமிழ்நாட்டில் ஒரு பெரிய நகர்ப்புற மக்கள் தொகை, ஒரு வலுவான தொழில்துறை அடித்தளம், மற்றும் பல கல்வி மற்றும் தொழில்நுட்ப மையங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட சலவை சேவைகளுக்கான தொடர்ச்சியான தேவைக்கு பங்களிக்கின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி (திருச்சி), சேலம் மற்றும் திருப்பூர் போன்ற நகரங்களில் வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகள், அலுவலகக் குழுமங்கள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் வசதியான ஆடைப் பராமரிப்புத் தீர்வுகளை அதிகளவில் நாடுகின்றனர்.

 

நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறைகள் காரணமாக, பணிபுரியும் வல்லுநர்கள், மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்கள் பெரும்பாலும் சலவை, இஸ்திரி மற்றும் உலர் சலவை சேவைகளை வெளிப்பணியாகக் கொடுக்க விரும்புகின்றனர். ஹோட்டல்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் சேவை அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக சலவை வழங்குநர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

 

முக்கிய தேவைக் காரணிகள் பின்வருமாறு:

 

குடியிருப்பு வளாகங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் விரிவாக்கம்

சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக மாவட்டங்கள்

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கை

விருந்தோம்பல், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சி

வீட்டு வாசலிலேயே பொருட்களைப் பெற்றுக்கொண்டு திரும்ப வழங்கும் சேவைகளுக்கான விருப்பம் அதிகரித்தல்

மக்கள் அடர்த்தி, போட்டி மற்றும் வாடிக்கையாளர் விருப்பங்களைப் பொறுத்து, சலவை சேவைகளுக்கான தேவை வெவ்வேறு பகுதிகளில் வேறுபடலாம். பொருத்தமான இடத்தையும் சேவை மாதிரியையும் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான வணிக முடிவாகும்.

 

குறிப்பு: சந்தைக் கண்காணிப்புகள் பொதுவில் கிடைக்கும் தொழில் துறைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் இவை ஒரு வழிகாட்டுதலாக மட்டுமே உள்ளன. உண்மையான வணிகச் செயல்திறன், இடம், விலை நிர்ணயம், வாடிக்கையாளர் தேவை, செயல்பாட்டுத் திறன் மற்றும் போட்டி போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளது.

சுயசேவை சலவையகம்

இந்தியாவில் உள்ள ஒரு சுயசேவை சலவையக மாதிரியானது, நாணயம், அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் வணிக ரீதியான சலவை மற்றும் உலர்த்தும் இயந்திரங்களைத் தாங்களாகவே இயக்க அனுமதிக்கிறது. இந்த நிலையங்களுக்கு பொதுவாக அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படும், ஆனால் குறைவான பணியாளர்களே இருப்பார்கள். மேலும், தொடர்ந்து வாடிக்கையாளர் வருகை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் அல்லது கல்லூரிகளுக்கு அருகில் இவை பொருத்தமானதாக இருக்கலாம்.

 

முழுச்சேவை ஒப்படைத்தல் மற்றும் திரும்பப் பெறுதல்

ஒரு முழுச்சேவை சலவை நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து ஆடைகளைப் பெற்று, சலவை செய்தல், உலர்த்துதல், மடித்தல் மற்றும் விருப்பப்பட்டால் இஸ்திரி செய்தல் ஆகியவற்றை முடித்து, துவைத்த ஆடைகளை வாடிக்கையாளர் வந்து பெற்றுச் செல்வதற்காகத் திருப்பித் தருகிறது. இந்த மாதிரியானது பொதுவாக அதிக தொழிலாளர் செலவுகளை உள்ளடக்கியது, ஆனால் பரந்த சேவை விருப்பங்களை வழங்கக்கூடும். இது பொதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகிறது.

 

எடுத்துச் செல்லுதல் மற்றும் திரும்ப ஒப்படைத்தல் சேவை

ஒரு சலவை எடுத்துச் செல்லுதல் மற்றும் திரும்ப ஒப்படைத்தல் சேவையானது, வாடிக்கையாளர்களிடமிருந்து ஆடைகளைச் சேகரித்து, சுத்தம் செய்த பிறகு அவற்றைத் திரும்ப ஒப்படைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. முன்பதிவுகள் பொதுவாக தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி செயலிகள் அல்லது ஆன்லைன் தளங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த மாதிரியானது ஒரு பாரம்பரியக் கடையை விட குறைந்த வாடகைச் செலவுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் பொதுவாக கூடுதல் தளவாட மற்றும் போக்குவரத்துச் செலவுகளை உள்ளடக்கியது.

 

தமிழ்நாட்டில் ஒரு சலவைத் தொழிலைத் தொடங்குவதற்கான செலவுகள்

தமிழ்நாட்டில் சலவைச் சேவைத் தொழிலின் செலவு, வணிக மாதிரி, உபகரணங்களின் தரம், இடம், கடையின் அளவு, பணியாளர் தேவைகள் மற்றும் செயல்பாட்டு அளவு போன்ற காரணிகளைப் பொறுத்து அமைகிறது. ஒரு சிறிய பிக்-அப் மற்றும் டெலிவரி அல்லது அடிப்படை முழு-சேவை அமைப்புக்கு சுமார் ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை மதிப்பிடப்பட்ட முதலீடு தேவைப்படலாம், அதேசமயம், சொத்து வாங்குதல் செலவைத் தவிர்த்து, சென்னையில் உள்ள ஒரு பெரிய முழு-சேவை விற்பனை நிலையம் அல்லது வணிகங்களுக்குச் சேவை செய்யும் ஒரு வர்த்தக சலவை நிலையத்திற்கு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாகத் தேவைப்படலாம்.

 

தமிழ்நாட்டில் தேவைப்படும் உரிமங்கள் மற்றும் பதிவுகள்

செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன், தொழில்முனைவோர் தாங்கள் தேர்ந்தெடுத்த வணிக அமைப்பு மற்றும் சேவை மாதிரிக்கு பொதுவாகப் பொருந்தக்கூடிய பதிவுகளையும் ஒப்புதல்களையும் முடிக்க வேண்டும். சரியான தேவைகள், இடம் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம்.

 

வணிகப் பதிவு

செயல்பாட்டு மற்றும் உரிமைத் தேவைகளின் அடிப்படையில், தனி உரிமையாளர் நிறுவனம், கூட்டாண்மை, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (LLP) அல்லது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் போன்ற பொருத்தமான அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

 

ஜிஎஸ்டி பதிவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பொருந்தக்கூடிய வரம்பை ஆண்டு விற்றுமுதல் தாண்டினால், ஜிஎஸ்டி பதிவு தேவைப்படலாம். தகுதியுள்ள வணிகங்கள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் தாமாக முன்வந்தும் பதிவு செய்துகொள்ளலாம்.

 

கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு

வணிக நிறுவனங்கள் பொதுவாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் மூலம், பொருந்தக்கூடிய கடைகள் மற்றும் நிறுவனங்கள் கட்டமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உத்யம் பதிவு

தகுதியுள்ள வணிகங்கள், அரசு ஆதரவுத் திட்டங்கள், எளிதான கடன் வாய்ப்புகள் மற்றும் பிற MSME தொடர்பான பலன்களைப் பெறுவதற்கு உத்யம் பதிவைப் பெறலாம்.

 

வர்த்தக உரிமம்

வணிகச் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்திலிருந்து வர்த்தக உரிமம் தேவைப்படலாம்.

 

மாசுக் கட்டுப்பாட்டு அனுமதி

இரசாயன உலர் சலவைக் கரைப்பான்கள் அல்லது சிறப்புச் செயலாக்க முறைகளைப் பயன்படுத்தும் வணிகங்களுக்கு, அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து ஒப்புதல்கள் தேவைப்படலாம்.

 

செல்லுபடியாகும் பதிவுகளைப் பராமரிப்பதும், தேவைப்படும் இடங்களில் உரிமங்களைப் புதுப்பிப்பதும், தடையற்ற வணிகச் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க உதவும்.

 

குறிப்பு: பதிவு மற்றும் உரிமத் தேவைகள் காலப்போக்கில் மாறக்கூடும் மற்றும் உள்ளூர் அதிகார வரம்பைப் பொறுத்து மாறுபடலாம். தொழில்முனைவோர், செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமீபத்திய தேவைகளைச் சரிபார்க்க வேண்டும்.

 சிஞ்சுவாடி பாளையக்காரர் இல்ல காதணி விழாவிற்கு ...

மெட்ராத்தி பாளையக்காரர் விஜயக்குமார் அவர்கள் 

பெரிய பாப்பானுத்து வருகை ....மகிழ்ச்சி ..

என்றும்  உடுமலை சிவக்குமார் -9944066681

திங்கள், 14 செப்டம்பர், 2026

 என்றும் அன்புடன் உடுமலை சிவா வின் தன்னம்பிக்கை தொடர் .கட்டுரை 

கல்வி மற்றும் பொருளாதாரம் சார்ந்த  தன்னம்பிக்கை தொடர் .கட்டுரை ..விரைவில் ......

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..


ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

 எங்கள் இல்ல காதணி விழா (PNS வேரின் விழுதுகள் )

எங்கள் அண்ணன் கே .முருகேசன் மல்லீஸ்வரி அவர்களின் பேத்திகள் 

எங்கள் மகன் அருண் மோகனப்ரியா தம்பதிகள் மகள்கள் 

சஞ்சனா ஸ்ரீ சன்வித ஸ்ரீ ஆகியோர் காதணி விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது ..விழாவில்  நீண்டகாலமாக பார்க்க பேச இயலாத சொந்தங்களை பார்த்து பேசி என் 5 ஐந்து தலைமுறை சொந்தங்களின் குழுவில் இணைத்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு பொருளாதாரம் .கல்வி ..நம் முன்னேர்களின் குலதெய்வ கோவில் வரலாறு களை கொண்டு செல்வதற்கு மிகவும் உதவியாக அமைந்தது ..

இன்றைய கால கட்டம் ..ஒரு சிறு சொத்து சேர்ந்த உடன் உடன் பிறந்த சொந்தங்களையும் ,பழகும் சொந்தங்களும் பாதியிலேயே விட்டும் செல்லும் காலகட்டத்தில் ...

உறவு தான் முக்கியம் சொத்து எல்லாம் அடுத்தது தான் என்றும் சொல்லும் சொந்தங்கள் எனக்கு கிடைத்த என் வாழ்வின் மிக பெரிய பொக்கிஷமான அருமையான சொந்தங்கள் இந்த காதணி விழாவில் கிடைத்தது ...

விழாவில் என் மகன்களை PNS வேரின் விழுதுகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர்களே என்னை அடையாளம் கண்டுகொண்டு கல்வி சார்ந்து சிறு சிறு ஆலோசனைகளை கேட்டுக்கொண்டனர் ..தற்பொழுது கல்லூரிகளில் படித்து கொண்டு இருக்கும் எனது மகன்கள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு பற்றி கேட்டு தெரிந்து கொண்டு எனது மொபைல் என்னை வாங்கி கொண்டனர் ..அவர்கள் உருவாக்கி இருக்கும் வாட்சப் குழுவில் என்னையும் இணைத்துக்கொண்டனர் இது எனக்கு கிடைத்த என் குலதெய்வம்(M.... ) மூலம் கொடுத்த வரம் ....இனி அவர்களுக்காக என் வாழ்க்கை தொடரும் ..இது எனக்கு என் முன்னோர்கள் கொடுத்த பணியாக கொண்டுசெல்வது எனது கடமையும் ,பொறுப்பும் கூட ...இனி அவர்களின் குழந்தை செல்வங்களுக்கு கல்வி ..வேலைவாய்ப்பு சார்ந்து நேரம் காலம் பார்க்காமல் பணி செய்வதே ....

எங்கள் வங்கபாளையம் குலதெய்வ கோவில் என் உடன் பிறந்த சொந்தங்களை பார்த்து பேசி ..கோவில் வரலாறுகளை புத்தகமாக கொண்டு வருவதற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறேன் ..அவர்களையும் குழுவில் இணைத்து கொண்டு அதற்கான பணிகளை அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு பயணத்தை மேற்கொள்ளவேண்டும் ....

கோவையில் அடுத்த கட்ட நிகழ்வுகள் இருந்ததால் விழாவில் சில சொந்தங்களை பார்த்து சரியாக பேச நேரம் கிடைக்காமல் போனது கொஞ்சம் வருத்தம் ..அடுத்த விழாவில் பார்த்து பேசிக்கொள்ளலாம் பிரிய மனமில்லாமல் விடைபெற்று என் மூச்சு காற்று கோவையை நோக்கி பயணத்தை மகிழ்ச்சியாக தொடங்கினேன் ...

குறிப்பு :அடுத்த நிகழ்வு எங்கள் இல்ல திருமண விழா பாரமடையூர் .....என்றும் அதே அன்புடன் அதே பாசத்துடன் நேசத்துடன் நான் கொண்டாடும் பாலமன்னா குலம்  சிஞ்சுவடி அரண்மனை சொந்தம் காதணி விழாவில் என்றும் என் வாழ்வில் மனதில் இடம் பிடித்த பெரிய பாப்பானுத்து திருமண மண்டபத்தில் சந்திப்போம் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.....நிதி ஆலோசகர் ....



வெள்ளி, 11 செப்டம்பர், 2026

இன்றைய சந்திப்பு .. கொடிங்கியம் சாலையூர் செங்கல் தொழிலதிபர் அண்ணன் மயில்சாமீ அவர்களை சந்தித்தேன்

 இன்றைய சந்திப்பு ..

கொடிங்கியம் சாலையூர் செங்கல் தொழிலதிபர் அண்ணன் மயில்சாமீ அவர்களை சந்தித்தேன் ..இன்றைய கட்டிட களநிலவரம் பற்றியும் ..செங்கல் தேவை எப்படி உள்ளது கலந்துரையாடியது பயனுள்ள தகவல்களை பின்வருமாறு தெரிந்து கொண்டேன் ..

செங்கல் தேவையின் தற்போதைய நிலை (2026) பொதுவாக நிலையானதாகவும், சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளின் வேகத்தைப் பொறுத்து அதிகரித்தும் காணப்படுகிறது.
தற்போதைய செங்கல் சந்தையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. தற்போதைய தேவை (Demand Status)
  • கட்டுமானப் பணிகள் அதிகரிப்பு: புதிய வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு உள்கட்டமைப்பு திட்டங்கள் (Infrastructure Projects) தொடர்ந்து நடைபெறுவதால் செங்கற்களுக்கான தேவை எப்போதும் உள்ளது.
  • பருவகால மாற்றம்: மழைக்காலம் முடிந்து கோடைகாலம் அல்லது பனிக்காலம் தொடங்கும் போது கட்டுமானப் பணிகள் வேகம் எடுக்கும். அந்த சமயங்களில் செங்கல் தேவை கணிசமாக உயரும்.
2. செங்கல் வகைகள் மற்றும் மக்களின் விருப்பம் (Types & Trends)
தற்போது பாரம்பரிய களிமண் செங்கற்களுடன், மாற்று செங்கற்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது:
  • நாட்டுச் செங்கல் (Chamber Bricks): பாரம்பரிய கட்டுமானங்களுக்கு இன்னமும் இதன் தேவை அதிகமாகவே உள்ளது.
  • ஃப்ளை ஆஷ் செங்கல் (Fly Ash Bricks): சாம்பல் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகை செங்கற்கள் குறைந்த விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக வணிகரீதியான கட்டடங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
  • இன்டர்லாக் செங்கல் (Interlocking Bricks): சிமெண்ட் பூச்சு தேவையில்லை என்பதால், செலவைக் குறைக்க நினைப்பவர்கள் இதைத் தேர்வு செய்கிறார்கள்.
3. சவால்கள் (Challenges in Supply)
  • மூலப்பொருள் தட்டுப்பாடு: களிமண் எடுப்பதற்கான அரசு விதிமுறைகள் மற்றும் மணல் தட்டுப்பாடு காரணமாக சில நேரங்களில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
  • விலை ஏற்ற இறக்கம்: நிலக்கரி விலை, விறகு விலை மற்றும் தொழிலாளர் கூலி உயர்வைப் பொறுத்து செங்கல் விலை அவ்வப்போது மாறுபடுகிறது....
  • என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் -வீட்டுக்கடன் -9944066681...