வெளுத்துக் கட்டு எனும் பெயரில் துணிகளை வெளுத்துக் கொடுக்கும் தொழிலை சிறப்பாகச் செய்யும் தமிழ்செல்வன் .A
வளரும் நாகரிக உலகில் ஒவ்வொரு மனிதனும் தன்னை நாகரிகமாகவும், அழகியலாகவும், தோற்றத்தில் மிடுக்காகவும் காட்டிக்கொள்ள இவர், அவர் என வேறுபாடு இல்லாமல் அனைவருமே விரும்புவர்.
அவ்வாறே ஒவ்வொருவரும் தன்னுடைய உடைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து உடையணிந்து தோற்றமளிக்கின்றனர். ஒரு நாள் போட்ட துணிகளை மறுநாள் போடுவதில்லை.
இந்த வளர்ந்து வரும் உலகில் தன்னுடைய துணிகளை தாமே துவைத்து அதனை தேய்த்து போடுவதென்பது இயலாத காரியம். பழங்காலத்தில் இதற்கென ஒரு சமூகம் இருந்தது. காலப்போக்கில் அது மாறி இந்த சலவை செய்யும் தொழிலை அனைவருமே செய்து வருகின்றனர்.
உதாரணமாக பியூட்டிசியன் என்ற பெயரில் முடிவெட்டும் தொழில் நாகரிகமாகி மிகப்பெரும் கார்ப்பொரேட் மயமாகி ஐ.டி. படித்த மாணவர்களும் இந்தத் தொழிலை இப்போது செய்து வருகின்றனர். இதில் ஏஜென்சி, முகமை போன்று குறிப்பிட்ட பிராண்ட் அடையாளத்தின் கீழ் ஒவ்வொரு பெரு நகரங்களிலும், மாநகரங்களிலும், வளர்ந்து வரும் நகரங்களிலும் இந்தத் தொழில் நல்ல இலாபத்தோடு மிகப்பெரும் தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளது என்றால் மிகையில்லை.
அவ்வாறே துணி வெளுக்கும் தொழிலை செய்யும் குறிப்பிட்ட சமூகத்தார் தவிர பிற சமூகத்தவரும் தற்போது செய்து வருவதும் அதன் ஒரு பகுதியாக உடுமலை அருகே கரட்டுமடம் பகுதியில் வெளுத்துக்கட்டு எனும் பெயரில் கழுதை வாகனத்தை படமாக்கி ஒரு துணி வெளுப்பவரின் படத்தைப் போட்டு மிகவும் சிறப்பாக செய்து வருகிறார் தமிழ்செல்வன் . குறிப்பாக இவர் அந்த சமூகத்தைச் சார்ந்தவர் இல்லை என்பதே இங்கு முக்கியமான செய்தி.
இந்த வெளுத்துக்கட்டு எனும் பெயரில் துணிகளை வாங்கி துவைத்து அதனை இஸ்திரி எனும் பெட்டிபோட்டு தேய்த்து கொடுக்கின்றார். இதற்காக அவர் வாங்கும் தொகை மிகவும் குறைவு. ஒரு துணிக்கு 30 முதல் 50 வரை பெறுகின்றார். கடினமான பெட்சீட் துணிக்குக் கூட இதே தொகையினை பெறுகிறார்.
இந்தத் தொழிலை அவர் செய்வதில் இழிவாகக் கருதவில்லை. ஆனால் இவர் கொங்கு பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினர் என்பதால் இவரை நோக்கி சொந்த பந்தங்களே அதிகமாகத் துணிகளை கொடுத்து வெளுத்துத்தரச் சொல்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் அவர்களே கொண்டு வந்து கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.
கிராமப் பகுதியில் துணி வெளுக்கும் தொழிலை செய்யும் சமூகத்தைச் சேர்ந்தோர் இல்லாமலிருப்பதும், அவர்கள் இறந்து விட்டால் அவர்களின் குழந்தைகள் அந்தக் குலத்தொழிலை செய்யாமல் விடுவதும், இவர்களுக்கு உதவியாக இருக்கின்றது.
உடுமலை மடத்துக்குளம் பொள்ளாச்சி தெற்கு பகுதிகளிலிருந்து மட்டும் தற்போதைக்கு துணிகள் வருவதும் இதனை செய்து கொடுக்கவே தற்போது சரியாக இருப்பதையும் அடுத்த கட்டமாக இதனை ஒரு கார்ப்பொரேட் நிறுவனமாக உயர்த்தி செய்வதையே தன்னுடைய இலட்சியமாகக் கூறுகிறார் தமிழ்செல்வன்
உடுமலையிலிருந்து ஆனைமலை செல்லும்சாலையில் கரட்டுமடம் பகுதியில் இந்த வெளுத்துக்கட்டு லாண்டரிகடை இருப்பதால் உடுமலையிலிருந்து பொள்ளாச்சியிலிருந்தும், ஆனைமலை பகுதியிலிருந்தும் துணிகள் நிறைய வருவதாகக் கூறுகிறார்.
இந்த துணி வெளுக்கும் தொழிலை மிகவும் ஈர்ப்போடு செய்யும் செல்வராஜ் ஒரு வேதியியல் பட்டதாரி என்பது மிக முக்கியமானதாகும். இவருக்கு மகள் அமெரிக்காவில் மனிதர்களை பாதிக்கும் மிக மோசமான நோய்களுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பிரிவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார், மகன் வெளிநாட்டில் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகின்றனர். . கல்லூரி படிப்பு முடிந்து நேரடியாக விவசாயம் துறையில் இறங்கி சுமார் 25 ஆண்டு காலம் விவசாயம் பார்த்து பின்பு அதை விட்டு விலகி தற்போது இந்த சலவை துறையில் இறங்கி பணி செய்து வருகிறேன்
இந்தத் தொழிலை பற்றி தமிழ்செல்வன் கூறும்போது இந்த வெளுத்துக்கட்டு பேரைக் கேட்டாலே துணி வெளுக்கும் சமூகத்தினரைத்தான் இது வரையிலும் இந்த சமூகம் பார்;த்து வந்தது. முதன் முறையாக என்னால் இது மாற்றப்பட்டுள்ளது என்கிறார். மேலும், கழுதையின் முதுகில் துணி மூட்டையோடு இருப்பதால் இது இயல்பாக மக்களிடம்சென்று சேரும் வகையில் இந்த லோகோவைஅமைத்துள்ளதாகக் கூறுகிறார்.
மேலும், துணிகளை வெளுப்பதற்கு நல்ல உயர்தரமான வாசிங்மெசின் வைத்து அதிலேதான் துணி வெளுக்கப்படுகிறது. இதற்கென தனியாக கூடாரம் அமைத்து நிழல் படும் வகையிலும், வெயிலில் காயும் வகையிலும் கூடாரம் அமைத்துள்ளார்.
3 எச்.பி. சர்வீஸ் மின் இணைப்பு பெற்று 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இந்த பணிகளை செய்து வருகிறார். மின்சார வெட்டு, இயந்திரம் பழுது என்ற சிறு சிறு காரணங்களைக் கூட உன்னிப்பாகக் கவனித்து பெரும்பான்மையான பணிகளை சிறு சிறு மின்சார பணிகள், துணிகளை வெளுக்கும் போது தற்காலிகமாக ஏற்படும் இடர்களை இவரே முன்னின்று செய்கிறார்.
இந்த வெளுத்துக்கட்டு நிறுவனத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட ;பணியாளர்கள் (தற்போதைக்கு ஒரு சிப்ட்) பணியாற்றினாலும் வரும்காலத்தில் இரண்டு மூன்று சிப்ட்களாகப் பிரித்து இதனை செய்யவும் துணிந்துள்ளார்.
அதே போல் துணிகளைக் காயப்போடுவதற்கும் பறவைகள் வராத வகையில் மிகவும் நுண்ணிய கம்பி வேலிகள் அமைத்து பாதுகாப்பாக எச்சரிக்கை உணர்வோடு செய்து வருகிறார்.
துணி வெளுக்கும் லாண்டரி தொழிலை கேவலமாக எண்ணாமல் இருந்தாலும் இவருக்கு 20 ஏக்கர் நல்லவேளாண் நிலம் இருந்தாலும் இவரது உறவினர்கள் இவரை ஒரு சில சமயங்களில் கிண்டலாகவும் கேலியாகவும் பேசுவதை நகைச்சுவையோடு கடந்து செல்கிறார்.
உதாரணத்திற்கு யாரேனும் இறந்துவிட்டால் பந்தம் பிடிக்க ஆள் அனுப்ப இயலுமா என்று கேட்டு தொலைபேசிகள் வருவதையும் குறிப்பிட்டு சொன்னார். அதே போல் கழுதையோடு இருக்கும் மனிதர் படத்தை இவரது பங்காளிகள் , உறவினர்கள் பார்த்து 'ஏனுங்க மாப்ள, அந்தக் கழுதை பக்கத்துல உங்க படம் இருந்தா இன்னும் நல்லா இருக்குங்கோ' என்று தம் காதுபட பேசுவதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார் தமிழ்செல்வன்
எதிர்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் காம்போ எனப்படும் முறையில் தம் குடும்பத்தில் பயன்படுத்தும் அனைத்துத் துணிமணிகளையும் வாரமொருமுறை அல்லது மாதமிருமுறை வாங்கித் துவைத்து தேய்த்து கொடுப்பதும் , அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பெற்றுக்கொள்வதுமாக இந்தத் தொழிலை இன்னமும் சிறப்பாகவும் மேம்படுத்தும் வகையில் செய்வதுமாகவும் கூறுகிறார்..
இந்த துணிகள் வெளுக்கும் தொழிலை செய்வதற்கு அரசு சிறு தொழில் அடிப்படையில் வங்கியில் கடனும் மாவட்டத் தொழில் மையம் வழியாகக் கடனுதவி வழங்கப்படுகிறது.
இந்த தமிழ்செல்வன் பொள்ளாச்சி பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் லாண்டரி நிறுவனத்தைப்பார்த்து தாம் இதை செய்யத் துணிந்ததாகவும், ஒரு தொழிலைச் செய்வதில் கேவலம் இல்லை எனவும், இந்தத் தொழில் தமக்கு மிகவும் விருப்பமாகவும், அர்ப்பணிப்புடன் செய்வதாகவும் கூறுகிறார்.
இந்தத் துணி வெளுக்கும் தொழிலில் துணிகளை வாங்கி துவைத்து தேய்த்து அதனை முறையாக மடித்து அவர்களுக்கு உரிய பைகளைப் போட்டுத் தரும் வரைக்கும் உள்ள நடைமுறைகளையும் அதில் உள்ள அனைத்து நடைமுறை சிக்கல்களையும் தம் ஒருவரால் கண்டிப்பாக செய்து விட முடியும் என்று மிகுந்த தன்னம்பிககையோடு கூறுகிறார் வெளுத்துக் கட்டு தமிழ்செல்வன்
இவர் வெளுப்பது துணிகளை மட்டுமல்ல, சமூகத்தையும் என்று அவரது துணிவான பேச்சிலிருந்தும் செய்யும் தொழிலிலிருந்து தெரிய வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக