ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

 எங்கள் இல்ல காதணி விழா (PNS வேரின் விழுதுகள் )

எங்கள் அண்ணன் கே .முருகேசன் மல்லீஸ்வரி அவர்களின் பேத்திகள் 

எங்கள் மகன் அருண் மோகனப்ரியா தம்பதிகள் மகள்கள் 

சஞ்சனா ஸ்ரீ சன்வித ஸ்ரீ ஆகியோர் காதணி விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது ..விழாவில்  நீண்டகாலமாக பார்க்க பேச இயலாத சொந்தங்களை பார்த்து பேசி என் 5 ஐந்து தலைமுறை சொந்தங்களின் குழுவில் இணைத்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு பொருளாதாரம் .கல்வி ..நம் முன்னேர்களின் குலதெய்வ கோவில் வரலாறு களை கொண்டு செல்வதற்கு மிகவும் உதவியாக அமைந்தது ..

இன்றைய கால கட்டம் ..ஒரு சிறு சொத்து சேர்ந்த உடன் உடன் பிறந்த சொந்தங்களையும் ,பழகும் சொந்தங்களும் பாதியிலேயே விட்டும் செல்லும் காலகட்டத்தில் ...

உறவு தான் முக்கியம் சொத்து எல்லாம் அடுத்தது தான் என்றும் சொல்லும் சொந்தங்கள் எனக்கு கிடைத்த என் வாழ்வின் மிக பெரிய பொக்கிஷமான அருமையான சொந்தங்கள் இந்த காதணி விழாவில் கிடைத்தது ...

விழாவில் என் மகன்களை PNS வேரின் விழுதுகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர்களே என்னை அடையாளம் கண்டுகொண்டு கல்வி சார்ந்து சிறு சிறு ஆலோசனைகளை கேட்டுக்கொண்டனர் ..தற்பொழுது கல்லூரிகளில் படித்து கொண்டு இருக்கும் எனது மகன்கள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு பற்றி கேட்டு தெரிந்து கொண்டு எனது மொபைல் என்னை வாங்கி கொண்டனர் ..அவர்கள் உருவாக்கி இருக்கும் வாட்சப் குழுவில் என்னையும் இணைத்துக்கொண்டனர் இது எனக்கு கிடைத்த என் குலதெய்வம்(M.... ) மூலம் கொடுத்த வரம் ....இனி அவர்களுக்காக என் வாழ்க்கை தொடரும் ..இது எனக்கு என் முன்னோர்கள் கொடுத்த பணியாக கொண்டுசெல்வது எனது கடமையும் ,பொறுப்பும் கூட ...இனி அவர்களின் குழந்தை செல்வங்களுக்கு கல்வி ..வேலைவாய்ப்பு சார்ந்து நேரம் காலம் பார்க்காமல் பணி செய்வதே ....

எங்கள் வங்கபாளையம் குலதெய்வ கோவில் என் உடன் பிறந்த சொந்தங்களை பார்த்து பேசி ..கோவில் வரலாறுகளை புத்தகமாக கொண்டு வருவதற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறேன் ..அவர்களையும் குழுவில் இணைத்து கொண்டு அதற்கான பணிகளை அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு பயணத்தை மேற்கொள்ளவேண்டும் ....

கோவையில் அடுத்த கட்ட நிகழ்வுகள் இருந்ததால் விழாவில் சில சொந்தங்களை பார்த்து சரியாக பேச நேரம் கிடைக்காமல் போனது கொஞ்சம் வருத்தம் ..அடுத்த விழாவில் பார்த்து பேசிக்கொள்ளலாம் பிரிய மனமில்லாமல் விடைபெற்று என் மூச்சு காற்று கோவையை நோக்கி பயணத்தை மகிழ்ச்சியாக தொடங்கினேன் ...

குறிப்பு :அடுத்த நிகழ்வு எங்கள் இல்ல திருமண விழா பாரமடையூர் .....என்றும் அதே அன்புடன் அதே பாசத்துடன் நேசத்துடன் நான் கொண்டாடும் பாலமன்னா குலம்  சிஞ்சுவடி அரண்மனை சொந்தம் காதணி விழாவில் என்றும் என் வாழ்வில் மனதில் இடம் பிடித்த பெரிய பாப்பானுத்து திருமண மண்டபத்தில் சந்திப்போம் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.....நிதி ஆலோசகர் ....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக