வியாழன், 24 செப்டம்பர், 2026

இதற்கான வழிகாட்டுகிறார் வேதியியல் பட்டதாரி தமிழ்ச்செல்வன்*

 *வெளுத்துக்கட்டு என்பது சாதாரணமாக தோன்றலாம் இதில் உள்ள இடர்பாடுகளை நாம் புரிந்து கொண்டு முயற்சித்தால் நாமும் வாழ்க்கையில் மேம்படலாம்* 


*

 உடுமலை செப் 24-
உடுமலை அருகே ஆனைமலை ரோட்டில் உள்ள உள்ள கரட்டுமடம் பகுதியில்
வெளுத்துக்கட்டு என்ற பெயரில் துணிகளை வெளுத்து கொடுக்கும் தொழிலை சிறப்பாகக் செய்து வரும் தமிழ்ச்செல்வன் தனித்துவமாக தெரிகிறார்.சலவை பணியாளர்கள் மட்டுமே செய்து வரும் இந்த தொழிலை மாற்று சமூகத்தவர்கள் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை ஆனால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கழுதை வாகனத்தை படமாக்கி ஒரு துணி வெளுப்பவரின் படத்தை போட்ட லோகோவுடன் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். வேதியியல் பட்டதாரி யான இவருக்கு ஒரு மகன் ஐடி  துறையில்பணி பணியாற்றி வருகிறார்.மகள் அமெரிக்காவில் மனிதர்களை பாதிக்கும் மிக மோசமான நோய்களுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பிரிவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.
   இது குறித்து தமிழ்ச்செல்வன் கூறும் போது இந்த வெளுத்து கட்டு பெயரை கேட்டாலே துணி துவைக்கும் சமூகத்தினரை தான் இதுவரையிலும் இந்த சமூகம் பார்த்து வந்தது .முதல் முறையாக என்னால் இது மாற்றப்பட்டுள்ளது. என்கிறார் மேலும் கழுதையின் முதுகில் துணிமூட்டையோடு இருப்பதால் இது இயல்பாகவே மக்களிடம் சென்று சேரும் வகையில் *லோகோவை* அமைத்துள்ளதாக கூறுகிறார். மேலும் துணிகளை வெறுப்பதற்கு நல்ல உயர்தரமான வாஷிங் மெஷின் வைத்து அதிலே தான் துணி துவைக்கப்படுகிறது. அதற்கான தனியாக கூடாரம் அமைத்து நிழல் படும் வகையில் வெயிலில் காயும் வரை கூட அமைத்துள்ளார். 3 எச்பி சர்வீஸ் மின் இணைப்பு பெற்று 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இந்த பணிகளை செய்து வருகிறார். மின்சார வெட்டு இயந்திர பழுது என்ற சிறு சிறு பணிகளைக் கூட கூட உன்னிப்பாக கவனித்து பெரும்பான்மையான துணிகளை வெளுக்கும்போது ஏற்படும் இடர்களை இவரை முன் நின்று செய்கிறார். .இந்த வெளுத்துக்கட்டு நிறுவனத்தில் ஐந்துக்கும் மேற்ப்பட் பணியாளர்கள் தற்போது ஒரு சிப்ட் பணியாற்றினாலும் வரும் காலத்தில் இரண்டு மூன்று ஷிப்டுகளாக பிரித்து இதனை செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார். இதேபோல் துணிகளை காய போடுவதற்கும் பறவைகள் வராத வகையில் மிகவும் நுண்ணிய கம்பி வேலிகளை அமைத்து பாதுகாக்கவும் எச்சரிக்கையோடும் இப்பணிகளை செய்து வருகிறார். துணிதுவைக்கும் லாண்டரி தொழிலை கேவலமாக எண்ணாமல் இவருக்கு   நல்ல வேளாண் நிலம் உடல்நிலை காரணமாக அவைகளை பராமரிப்பது இல்லை  இவரது உறவினர்கள் இவரை ஒரு சில சமயங்களை கிண்டலாக வும் கேலியாகவும் பேசுவதை நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார் உதாரணமாக யாரேனும் இறந்து விட்டால் பந்தம் பிடிக்க ஆள் அனுப்ப இயலுமா என்று கேட்டு தொலைபேசியில் கூப்பிட்டு வருவதையும் குறிப்பிட்டு சொன்னார். அதேபோல் கழுதையோடு இருக்கும் மனிதர் படத்தை வேறு பங்காளிகள் உறவினர்கள் பார்த்து அவற்றோடு இவரையும் இணைத்து பேசுவதையும் நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார். 
    எதிர்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் காம்போ எனப்படும் முறையில் தம் குடும்பத்தில் பயன்படுத்தும் அனைத்து துணி களையும் வாரம் ஒரு முறை  துவைத்து நேரடியாக  வாங்கி கொடுப்பதும் அதற்கு குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொள்வதுமாக இந்த தொழிலை இன்னும் சிறப்பாக மேம்படுத்தும் வகையில் செய்வதுமாக கூறுகிறார். இந்த துணிகளை வெளுக்கும் தொழிலை செய்வதற்கு அவர் அரசு சிறு தொழில் அடிப்படையில் வங்கியில் கடன் மாவட்ட தொழில் மையம் வழியாக கடன் உதவி வழங்கப்படுகிறது. 
   தமிழ்ச்செல்வன் கூறும்போது கேரளா கொழிஞ்சாம்பாறை பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் வரும் லாண்டரி நிறுவனத்தை பார்த்து தாம் இதை செய்யத் துணிந்தாகவும் இந்த  தொழிலை செய்வதில் கேவலம் இல்லை என்றும் தொழிலில் தனக்கு மிகவும் விருப்பமானதாகவும் அர்ப்பணிப்புடன் செய்வதாகவும் தெரிவிக்கிறார். 
இந்த தொழிலில் துணிகளை வாங்கிட்டு வைத்து தேய்த்து அதனை முறைப்படி மடித்து அவர்கள் கூறிய பைகளை போட்டு தரும் வரைக்கும் உள்ள நடைமுறைகளையும் அதில் உள்ள அனைத்து நடைமுறை சிக்கல்களையும் தாம் ஒருவரால் கண்டிப்பாக செய்துவிட முடியும் என்று மிகுந்த நம்பிக்கை ஒரு கூறுகிறார். வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்கள் துணி வகைகளை பெற்றுக்கொண்டு துவைத்தல் கஞ்சி இடுதல் அயன் செய்து தருதல் இந்த பணிகளையும் முடித்து அவர்களது வீட்டுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் தருவதாக தெரிவிக்கிறார். மேலும் தான் மாற்று சமூகம் என்றாலும் இந்த பணியின் மூலம் பணியின் மூலம் எனக்கு  மன நிறைவு ஏற்படுகிறது. மேலும் தொழிலில்எதிர்கால வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் சுய முன்னேற்றத்தின் மூலம் முன்னேற விரும்புபவர்கள் இத்தொழிலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் எனவும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
இவரை  99 76 94 30 69 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக