நாடி ....
எனது உயிர் மூச்சு தந்தையின் இறப்பு ...திங்களன்று இரவு 11.00 மணி ...நான் காலையில் பணியின் காரணமாக கோவைக்கு கிளம்பும் போது எப்பொழுதும் அப்பா போய்ட்டுவந்துருவேன் என்று முகத்தை பார்த்து செல்வேன் ..ஏனோ தெரியவில்லை ..அப்பாவின் கைபிடித்து பக்கத்தில் உட்கார்ந்து அப்பாவின் தலையை தடவி ..கைபிடித்து ..சீக்கரம் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு கோவை கிளம்பினேன் ...மதியம் 3 மணியளவில் வீடு வந்து அப்பாவின் முகத்தை பார்க்கும்பொழுது தன் இறுதிப்பயணத்திற்கு தயாராகவிட்டார் என்று தோன்றியது ..உடனே நம் தினமலர் செந்தில் மாப்பிளையை தான் முதலில் அழைத்தேன் ..மாப்பிள ..டாக்டர் யாரவது இருக்கிறார்களா என்று விசாரத்திவிட்டு ..வழக்கறிஞர் முருகராஜ் அவர்களை தொடர்பு கொண்டேன் ..நாடி பாருங்கள் என்று சொன்னார் ...தம்பி போட்டோ ராஜேந்திரன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு அப்பாவிற்கு என்ன ஆச்சு என்று கேட்டு நமது சொந்தம் பழனிசாமி மருத்துவரிடம் பணிபுரிகிறார் ..அவரை அழைக்கலாம் என்று அவரை அழைத்து வந்து ..அப்பாவின் நாடி பார்த்த பொழுது ..நாடி துடிப்பு ..விட்டு விட்டு துடிக்கிறது என்றார் ....6 மணியளவில் எங்கள் குடும்ப டாக்டர் நிலைமையை சொன்னேன் ..அவரும் இனி மருந்துகள் தரவேண்டாம் ...தண்ணீர் மட்டும் கொஞ்சம் கொடுங்கள் ...அம்மாவிடம் சொல்லிவிட்டேன் ...மூன்று அல்லது நான்கு நாள் தான் அப்பாவின் இறுதி மூச்சு ...நாடி துடுப்பு அப்படி தான் இருந்தது ...அம்மா உங்களிடம் சொல்லவில்லையா என்று கேட்டார் ..என்னிடம் சொன்னால் மகன் அழுது விடுவான் ..என்று அம்மா என்னிடம் சொல்லிக்கொண்டு தான் வந்தார்கள் என்றார் ..அம்மாவின் மனதைரியம் ...எப்படி இருந்துருக்கும் ..இரவு 8 மணி ..எங்கள் பக்கத்து வீட்டு ராணி அக்கா ..20 செவிலியர் ..அவரும் ஓடுஓடி வந்து அப்பாவின் நாடி பிடித்து பார்த்தார்கள் ..அவரும் இன்னும் ஒருமணிநேரம் தான் ..இப்பொழுது இருப்பது மூளை மட்டும் இயங்குகிறது ..என்றார் ....நானும் ,வழக்கறிஞர் ,எனது தம்பி ..எனது நண்பர் ஜேபி என்று அழைக்கும் மருத்துவரிடம் சென்றோம் ..அப்பா இப்பொழுது இந்த நிலையில் உள்ளார் ..மறுபடியும் திரும்ப கொண்டு வந்துவிடலாமா ..கேட்டுக்கொண்டிருக்கும் போதே ...தம்பியின் செல் ..முருகராஜ் அவர்களின் செல் ..அப்பாவின் வாழ்க்கை பயணம் முடிந்தது என்று சொன்னவுடன் ...எனது கண்கள் கொஞ்சம் சில மணித்துளிகள் இருண்டு திரும்பியது ....😢😢😢😢😢

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக