சனி, 11 ஏப்ரல், 2020

கேள்வி :..தமிழர்கள் அக்காவின் மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். இந்த பழக்கத்தின் தோற்றம் என்ன? இது சரியா?

பதில் :..

குருதி உறவு, இரத்த சம்பந்தம், இரத்த பாத்தியம், உறவின் முறை, உதிரக் கலப்பு - Consanguinity : இன்றைய விவரம் தெரிந்த நகர்ப்புறத்து இளைய தலைமுறை பிள்ளைகள் அக்கா, அத்தை, மாமன் வழி திருமணங்களை தவிர்க்கின்றனர், எதிர்க்கின்றனர். ஆனால் சிற்றூர்களிலும், கிராமங்களிலும் இன்னும் வழக்கில் உள்ளது.

பழக்கத்தின் தோற்றம்: 1)சொத்து குடும்ப வட்டத்திற்குள் இருத்தி வைத்தல், 2)நெருங்கிய உறவாயிருப்பதால் குடும்பப் பின்னணி, பிள்ளைகளின் குணநலன்கள் பற்றிய புலனாய்வு தேவையில்லை, 3) சண்டை, சச்சரவு என்றேதேனும் வந்தால் பெரியவர்கள் உரிமையோடு தலையிட்டு தீர்வு காண்பது எளிது.

உறவின் முறை / குருதி உறவு (First Cousins) திருமணங்களைப் பற்றி மரபணு(genetic) ஆராய்ச்சியாளர்களிடம் மாறுபட்ட விவாதங்கள் நடைபெற்ற போதிலும் மேலை நாடுகளில் இத்தகைய பிணப்பை கூடாபாலுறவு/முறை தகா உறவு(Incest) என்றும், அத்தகைய உறவில் பிறக்கும் குழந்தைகள் மரபணு நோய் (genetic disease), மரபணு சீர்குலைவு(genetic disorder) உள்ளாவார்கள் என்ற கருத்து நிலவுகிறது.

சங்க காலத் தமிழகத்தில் இத்தகைய திருமணங்கள் வழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் என் கண்களில் தென்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக