ஞாயிறு, 26 ஏப்ரல், 2020



கேள்வி :.தமிழகத்தில் விவாகரத்து அதிகமாக நடப்பதற்கு என்ன காரணம்?

பதில் :...

விவாகம் தான்.

விவேகம் இல்லாத விவாகம் விவாதத்தில் முடிந்து விவகாரமாகி ரத்து வரை செல்கிறது.

Moral science வகுப்புகள் பள்ளிகளில் நின்றது

கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போயே தீருவேன்.. என்று ஒற்றை காலில் நிற்பது

ஒரே குழந்தையுடன் நிறுத்தி அது கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து பொம்மை வளர்ப்பது

பணப்பேய் பிடித்து வாட்டுவது

அகங்காரம் மமதை ஆதிக்கவெறி பிடுங்கித்தின்னும் பிக்காளித்தனம் காரியம் ஆனதும் கழட்டிவிடுவதில் மாஸ்ட்ரி அடுத்த ஜென் பற்றிய மைக்ரோ சிந்தனை கூட இல்லாத நானோ சைஸ் அறிவு முதலிலிருந்தே பெற்றோர் சொல் கேளாமை தன்னைப்பற்றிய அளவுக்குமீறிய உயர்ந்த அபிப்ராயம் பிறர் பற்றிய அக்கறையின்மை உடம்பு அலுங்க வேலை செய்யாமை சோம்பேறித்தனம் தவறான ஊக்குவிப்பு

இப்படி பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணம் எல்லாவற்றையும் மிஞ்சிவிடுகிறது. அது

அன்பின்மை.

அன்பு இருத்தல் அவசியமோ இல்லையோ அன்பின்மை இல்லாதிருத்தல் அவசியம்.

உறவுகள் முறியக்காரணம் அன்பின்மை தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக