கேள்வி :..உங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல நீங்கள் தைரியமாக எடுத்து வைத்த முதல் அடி என்ன? அந்த செயலால் உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறியது?
பதில் :
JEISON, Motivational Speaker & Social Media Influencer 📚
மனதில் இருப்பதை அப்படியே கூறுகிறேன்!!
உங்கள் நிகழ்காலம், உங்களின் எதிர்காலத்தைக் குறித்த உங்களுடைய கனவு இரண்டிற்கும் நடுவில் இருப்பது அதற்காக நீங்கள் எடுத்து வைக்கப்போகும் உங்களுடைய முதல் அடிதான்.
பலரும் அந்த முதலடியை எடுக்க தயங்கி பல வருடங்களாக தங்கள் மனதிற்குள்ளேயே தேவையற்ற சிந்தனைகளாலும் மிகச் சிறிய பயங்களும் அதை விட்டுவிடுகிறார்கள் அந்தத் தவறை நீங்கள் கண்டிப்பாக செய்யாதீர்கள்.
நான் என் வாழ்க்கையில் நான் மனதளவில் பெருமைப்படும் ஒரு வெற்றியை அடைந்துள்ளேன். கல்லூரி முடிந்த பின் சுயமேம்பாடு மற்றும் மோட்டிவேஷன் பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பேஞ் ஆரம்பித்தேன். ஒரு வருடம் ஆகிறது இன்று எனக்கு 35,000+ பாலோவர்கள் இருக்கிறார்கள். நான் மோட்டிவேஷன் சுய மேம்பாடு கருத்துக்களை பதிவு செய்வதால் பலரும் அவர்களுக்கு அந்த கருத்துக்கள் வாழ்க்கையில் மிகவும் உதவுவதாகவும் நிறைய நண்பர்கள் மிக அன்பாக என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
இது என்னை பொருத்தவரை இது நான் பெருமைப்படும் ஒரு விஷயம் நான் இதை நிச்சயமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் சரியான முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் அந்த பக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக நான் தேவையற்ற விஷயங்களை நினைத்து மிகவும் பயந்து போயிருந்தேன், நான் பல வருடங்கள் கழித்து வயதானபின் நான் அதை செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயமாக நான் என்னைக் குறித்து வருத்தப்படுவேன் என்று நினைத்தேன். இன்று என் கையில் அந்த நேரம் இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் அதை செய்வதாக தள்ளிப்போடுவதை நிறுத்திவிட்டு இன்றைக்கு அதற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்ற ஒரு தைரியமாக அதனுடைய முதல் அடியை எடுத்து வைத்தேன். என்னுடைய கருத்துக்களை தெளிவாக மற்றவருக்கு புரியும் வகையில் எடுத்துவைக்க ஆரம்பித்தேன் முதலில் மற்றவர்களிடம் இருந்து பெரிய ஆதரவு ஏதும் வராவிட்டாலும் நான் என்னுடைய சுய மேம்பாட்டிற்கான செய்திகளை மற்றவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இல்லாமல் என்னுடைய சுய கனவுகளுக்காக நான் அதை செய்தேன்.
அதனால் மற்றவர்களின் ஆதரவு இல்லாமலும் கூட என்னால் நிறைய அதை செய்ய முடிந்தது ஒருகட்டத்தில் அனைவருக்கும் என்னுடைய கருத்துக்கள் பிடிக்க ஆரம்பித்து விட்டன. அதனால் பலரும் என்னை இதுபோன்ற கருத்துக்கள் இன்னும் நிறைய பதிவிடுங்கள் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு நிறைய நாட்கள் எடுத்துக் கொண்டது. இன்னும் சொல்லப்போனால் பல மாதங்கள் எடுத்துக் கொண்டன.
நான் சொல்ல வருவதெல்லாம் இந்த ஒரு விஷயம் தான் உங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயம் தேவை என்றால் அதை நீங்கள்தான் சென்று எடுத்துக்கொள்ள வேண்டும் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களுக்காக அதை செய்ய முடியாது. இன்னொருவர் உங்களை உற்சாகப்படுத்தி உற்சாகப்படுத்தி நீங்கள் கீழே விழும் போதெல்லாம் உங்களை தூக்கி நிறுத்த இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
உங்களுக்கு நீங்களே ஒரு கை கொடுத்துக் கொள்ளுங்கள் தொடக்கம்தான் எப்போதும் மிக பயமானது. போகப்போக அது பழகிவிடும் என்பதை நன்றாக புரிந்து கொண்டு முதல் அடியை எடுத்து வையுங்கள். என்னதான் தைரியமாக எடுத்து வைக்க சென்றாலும் அந்த முதலடி மிகவும் கடினமானது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். உங்களுக்கு தைரியமாக ஒருநாள் அதன் அடி எடுத்து வைத்து விடலாம் என்று தோன்றும் அன்று நிச்சயமாக அந்த இடத்தில் வேலை செய்யுங்கள் என்றோ ஒரு நாள் மீண்டும் நீங்கள் அது திரும்பி பார்த்து நாம் அதை செய்துவிட்டோம் அதன் அடுத்த அடி எடுத்து வைக்கலாம் என்று உங்களுக்கு தோன்றும் உங்களுக்கு நீங்களே நன்றி கூறுவீர்கள். முதல் அடியை எடுத்து வையுங்கள் அது இன்றைக்கு எடுத்து வையுங்கள் அதுதான் மிகவும் முக்கியம் மற்றவர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்பதற்காக அல்லது பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற விஷயங்களை நீங்கள் ஈடுபாடு ஆக செயல்பட்டால் ஒரு தோல்வி ஏற்படும் போது உடைந்து போய் விடுவது மிகவும் இயல்பாகி விடும். உங்களுடைய கனவுகளுக்காக உண்மையாக வேலை செய்யுங்கள் உங்களுக்கு எப்போதும் அந்த மனச்சோர்வு ஏற்படாது.
நாம் வாழப் போவது ஒரே ஒரு வாழ்க்கை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இன்று இந்த அடியை நீங்க எடுத்து எடுத்து வைக்கவில்லை என்றால் என்றோ ஒரு நாள் உங்களை திரும்பி பார்த்து நீங்களே வருந்த நேரிடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அதனால்தான் சொல்கிறேன் முதல் அடியை இன்று எடுத்து வையுங்கள். மிகச்சிறியதாக எடுத்து வையுங்கள் ஏனென்றால் மிகப்பெரியதாக நீங்கள் எடுத்து வைக்கப்போகும் மக்களுக்கு நிறைய திறமைகள் தேவைப்படும், அதை நீங்கள் மிகச் சிறிய படிகளில் இருந்த மட்டும் தான் கற்றுக்கொள்ள முடியும். சிறியதாக ஆரம்பியுங்கள் இன்றைய ஆரம்பியுங்கள் அதுதான் முக்கியம். உங்களின் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக