வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கேள்வி :....வேறென்ன வேண்டும் நீ போதுமே …என்று உங்கள் துணையை பார்த்து மனம் நெகிழ்ந்த தருணம் உண்டா ?


பதில் :...என் வெளிநாட்டு நண்பர்  சங்கர் ஆறுமுகம் அவர்களின் அருமையனா பதில்

திருமணத்திறகு முன்பே நான் வெளிநாட்டில் இருந்த படியால் ,திருமணத்துக்காக 45 நாள் விடுமுறை தான் கிடைத்தது , திருமண ஏற்பாடு எல்லாம் எங்க அக்காவும் மாமாவும் கவனிச்சிக்கிட்டாங்க , என்ன என்கிட்டே ஒரே ஒரு வீடு தான் இருந்தது (அதுவும் லோன் இல் ) அதை காட்டி தான் பெண் வீட்டார்களை சம்மதிக்க வைத்தோம் ,

பேங்க் லோன் 15 லக்ஷம், மாத மாதம் வட்டி கிட்ட தட்ட 20,000 ரூபாய் கட்டி ஆக வேண்டும் ,கல்யாண செலவில் பற்றாக்குறை வர ஒரு 3 லக்ஷம் வெளியே கடன் வேற வாங்கி விட்டேன் (வட்டிக்கு) ,இது எதுமே பெண் வீட்டாருக்கு தெரியாது, எனக்கு தாய் தந்தை இல்லாத காரணத்தால் முதலில் யோசித்தார்கள் ,பிறகு அனைவரும் நல்ல பையன் என்று certificate தர ஒத்துக்கிட்டார்கள் .

ஜனவரி 18 2013 திருமணம் நடந்தது , சந்தோசமா வாழ்க்கையை தொடங்கினோம் எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது ,தேன் நிலவு , சினிமா , ஹோட்டலில் சாப்பிடவது என்று 1 மாதம் ஓடி விட்டது ,எனக்கு லீவு முடியே 3 நாள் இருக்கும் நிலையில் என் மனைவிக்கு கடுமையான அம்மை நோய் பார்த்தது ,இந்த மாதிரி நேரத்தில் மனைவியை விட்டு செல்வது நல்லது இல்லை என்று என்னி company யில் பேசி leave extension வாங்கி விட்டேன் ,15 நாள் என் மனைவி கூட இருந்து நல்ல படி கவனித்து கொண்டேன் , அவளுக்கு குணம் ஆக ,எனக்கு தொற்றிகொண்டது அம்மை அதுவும் இன்னும் கடுமையான அம்மை , கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் அவதி பட்டேன் அப்போ என் மனைவி என்னை பார்த்துகொண்டாள் ,மறுபடியும் கம்பெனி யில் பேசி மறு முறையும் leave extend பண்ண company HR க்கு மெயில் அனுப்பினேன் , அம்மை நோய் என்றதும் இப்போதைக்கு வர வேண்டாம் நல்ல குணம் ஆனா பிறகு மெடிக்கல் certificate அனுப்புங்க அதை நாங்கள் பார்த்த பிறகு சொல்லுறோம் அப்போ வந்த போதும் என்ற மறு பதில் வந்தது , அப்படி இப்படினு அதில் 2 மாதம் ஓடி விட்டது கையில் இருந்த காசு எல்லாம் கரைந்து விட்டது , செலவை சமாளிக்க முடியாமல் மறுபடியும் கடன் வாங்கினேன், என்னோட பொருளாதார நிலைமை அப்போ தான் என் மனைவி தெரிஞ்சுக்கிட்டா , முன்ன வாங்கிய கடனுக்கு வட்டி அடைக்க மறுபடியும் கடன் வாங்கினேன்.

காசு நெருக்கடி அதிகரிக்க நிலைமையை சமாளிக்க முடியாமல் மறுபடியும் HR க்கு மெயில் போட்டேன் , 15 நாள் பிறகு வந்து சேரவும் என்று பதில் வந்தது , அப்பாடா 4 மாசமா பட்ட கஷ்டத்துக்கு ஒரு முடிவு வந்திருச்சுனு இருக்கையில் , என் மனைவிக்கு மறு படியும உடம்புக்கு முடியாம hospitalக்கு செல்ல ,அங்கே அவளை பரிசோதித்த டொக்டர் "நீ கர்பமா இருக்க மா ' என்று சொன்னவுடன் சந்தோசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்,

வீட்டுக்கு வந்து இதை பத்தி பேசுனோம் ,நா மறுபடியும் லீவு நீடிக்கின்றேன் என்று சொன்ன பொது வேண்டாம் என்று மறுத்து விட்டா என் மனைவி , "ஏங்க இங்கே இருந்து என்ன பண்ண போறீங்க ,கடன் வாங்கி தான் செலவு செய்து கொண்டு இருக்கிறோம் இன்னும் இங்கேயே இருந்துட்டா குடும்பத்தை எப்படி ஓட்றது , நீங்க போங்க நா எங்க அம்மா வீட்டில் இருக்கிறேன், போய் மொதல்ல கடனை அடைங்க , பிரசவ நேரத்தில் வந்தா போதும் " னு சொல்ல ஒருவனுக்கு தாய் தந்தை இல்லைனா எவளோ பெரிய சாப்ம என்ற உண்மையை அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்

மனைவி சொன்னதை போல் அவளை என் மாமியார் வீட்டில் விட்டுட்டு வெள்ளிநாட்கு கிளம்பி விட்டேன் , வாங்கின கடன் அடைக்க கிட்ட தட்ட 6 மாதங்கள் ஆயிருச்சு , இந்த 6 மாசத்தில் ஒரு நையா பைசா கூட வீட்டுக்கு அனுப்பு முடிய வில்லை , இருந்தாலும் என் மாமியாரும், மாமனாரும் மனைவியை நல்ல முறையில் பார்த்து கொண்டார்கள் , எனக்கு தாய் தந்தை இல்லாத குறையை அவர்கள் தான் பூர்த்தி செய்தார்கள் , நான் என் மாமியாரை அக்கா என்று அழைப்பேன் ,

ஒரு நாள் போனில் பேசி கொண்டு இருக்கையில் , என் மாமியார் நான் பணம் அனுப்பாததை ,மற்றும் கடன் இருக்கிறதை பத்தி கொஞ்சம் சங்கட பட்டு "அதான் தம்பி தாய் தந்தை இல்லாத உங்களுக்கு பெண் குடுக்க யோசித்தோம் , இந்நேரம் அவர்கள் இருந்தாங்கன்னா இப்படி என் மக கஷ்ட படு இருப்பாளா " ன்னு சொல்ல என் மனைவிக்கு வந்துச்சு பாருங்க கோவம் , அவ அம்மாவோட சண்டை போடா ஆரம்பிச்சிட்டா " இந்த பாரு நா இருக்கிறது கஷ்டமா இருக்குன்னா சொல்லு என் வீட்டுக்கே போகிறேன் ,ஆனா என் புருஷன் பத்தி பேசுறது மட்டும் வச்சுகிறாதே ,அவர் கஷ்டம் உன்னக்கு தெரியுமா " இதே எல்லாம் போனில் கேட்டுகிட்டே இருந்த என்னக்கு கண்ணில் தாரை தாராய் கண்ணீர்

எப்படி சார் கல்யாணம் ஆயி வெறும் 5 மாசத்தில், புருஷனுக்காக பெத்த தாயுடன் சண்டை போட இந்த பெண்களால் முடிகிறது.

" வேறென்ன வேண்டும் நீ மட்டும் போதும் "என்று என் மனைவி பத்தி நினைச்ச முதல் தருணம் , இதை போல் பல சம்பவம் உண்டு வேற ஒரு பதிலில் எழுதுகிறேன்.நண்பரே ..

https://youtu.be/azA9XXgMvcU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக