தன்னம்பிக்கை மனிதர்கள் ..
தன்னம்பிக்கையாக பேசுபவர்கள் ஓர் காலத்தில் தன்னம்பிக்கையற்று
வாழ்வினை தொலைத்து
அடுத்த கட்டத்திற்கு நகர முடியாதவர்களே..
வாழ்வினை வெறுக்க தெரிந்தவருக்கே அதிகம் வாழ்க்கையை நேசிக்க தெரியும்.
அவர்களுக்கே எப்படி வாழ்க்கையை வாழக்கூடாது என்ற சூட்சுமம் புரியும்.
தான் பட்ட அனுபவங்களை
வலிகளை
வேதனைகளை
அடுத்தவர்கள் தொடவேண்டாம் என நினைப்பவர்கள்..
அப்படிப்பட்ட
Positive vibration உள்ள மனிதர்களை
கூடவே வைத்திருங்கள்.
சந்தியுங்கள்.
உரையாடுங்கள்..
வாழ்க்கை இன்னும் முடிந்து விடவில்லை,
Life is not over..
தினமும் ஒரு புது விடியல் விடிந்து கொண்டுதான் இருக்கிறது.
எல்லோரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
வலி நிறைந்த வாழ்க்கை அல்லாத ஒரு மனிதன் பூமியில் உண்டா?
பிறப்பு இறப்பு போல
வலி துரோகம் வேதனை தொடாத மனிதர்கள் உண்டா ?
எல்லோருக்கும் அழுகை வந்துகொண்டு தான் இருக்கின்றது.
அதனை மீறி ஏதாவதொன்றின் மீது புன்னகையை திணித்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு புதுப்பித்தல் நடைபெறும்.
புது அனுபவம் கிடைக்கும் ,
சிலருக்கு இன்பமாய்
சிலருக்கு துன்பமாய்..
இன்பமாயிருந்தால் ஏற்றுக்கொள்
துன்பமாயிருந்தால் தள்ளிவை
அவ்வளவு தான்.
இத்தோடு அனைத்தும் முடிந்துவிட்டதென புலம்பாதே..
புலம்பல்கள் நேரத்தை கடத்தும்
வாழ்வினை கடத்தாது.
அதே இடத்தில் நிறுத்தி
கொன்றுவிடும்..
எதுவாயினும் வெளியில் வந்து
புது உலகை ரசி..
இங்கு எதுவும் முடிந்துவிட வில்லை.
Life is not over.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக