வியாழன், 2 ஏப்ரல், 2020

கேள்வி :..மனைவிக்கும் வாழ்க்கைத்துணைக்கும் என்ன வித்தியாசம்?


பதில் ......

மனைவிக்கும் வாழ்க்கைத்துணைக்கும் என்ன வித்தியாசம்?

சும்மா இருந்த என்னை சுண்டி வம்புக்கு இழுத்துவிட்டீர்களே ….!


ஒரு சிறிய வாழ்க்கை அனுபவம்….

2004 என்று நினைக்கிறேன்…என் அலுவலகத்தில் ஒரு நிர்வாக பெண் இருந்தார்..Safia Nur என்று பெயர்.

மலையாள  இனத்தவராக இருந்தாலும் , நாகரீகத்தின் பிரதிபலிப்பு அவர்..

இளமையின் துடிப்பு, அழகு, கசிந்தோடும் பெண்மை , உடை செய்யும் நேர்த்தி , பணிகள் செய்வதில் உள்ள திறமை..

அவள் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டதாக அலுவலக வம்பிகள் செய்தி சொன்னன .

ஒரு நாள் பேச்சுவாக்கில் தனக்கு ஒரு பஞ்சாபில்  ஆண் நண்பன் இருப்பதாகவும் , அவனுடன் இணைந்து வாழ எண்ணம் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.

நான்: " அவர் propose செய்துவிட்டாரா ..?

Safia :இல்லை..அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை..

நான் :அதெப்படி..நீ இளமையான அழகான பெண் ..உன்னுடன் சில காலம் வாழ்ந்துவிட்டு பின்னர் சென்றுவிட்டால் ..?

Safia :திருமணம் ஆனாலும் ஒரு ஆண் விட்டுவிட்டு போக முடியும் ..தெரியாதா..?

Safia :அன்பு என்பது பறவையை கூட்டுக்குள் அடைப்பது அல்ல …சுதந்திரமாக பறந்து போக விடவேண்டும்..உண்மையென்றால் அது எப்போதும் திரும்பி வரும்..

நான்: வராவிட்டால்..?

Safia : ஒரு சுவையான வாழ்க்கை அனுபவமாக எடுத்துக்கொள்வேன்…!

அந்த உரையாடலுக்கு அப்புறம் நான் கவலையில் மூழ்கிவிட்டேன் ..

Safia : என் அப்பா கூட இப்படி யோசிக்கவில்லை..

சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள்…அன்றுதான் அவளது கடைசி நாள்..

என்னை யாரோ சாட்டையால் அடித்ததுமாதிரி ஒரு வேதனை…

எப்படி இந்த சிறிய வயதில் இவ்வளவு புரிதல் சாத்தியமாகிறது..?

நான் இத்தனை வருடங்கள் ஊர் எங்கும் (அலுவுலக பணி)  சுற்றியது வீணா ..? அன்பை பற்றியும், உறவுகளை பற்றியும் ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் கட்டிடங்களை பார்த்துவிட்டு வெறும் ஜடமாக சுற்றிவந்தேனா ..?

நாம் அன்பென்பதை புரிந்துகொள்ளாமல் , சடங்குகளையும், தாலி சரடையும் , அச்சடித்த சான்றிதழ்களையும் நிலைத்த ஆதாரம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோமே..

எப்படி மற்ற உயிரினங்கள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆழமான பந்தத்தில் பிணைந்துள்ளன ..?

பெண் என்பவள் முதலில் ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக அல்லவா இருக்கவேண்டும்..இந்த புரிதலும், வாழ்தலும் அல்லவோ அவளுக்கு அந்த உயர்ந்த பந்தத்தையும் , மனைவி என்ற அந்தஸ்தையும் கொடுக்கிறது..?



ஆனால் என் உடலின் ஒவ்வொரு அணுவும் என் மனைவியின் பெயரைத்தான் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன …

நான் பேச நினைப்பதெல்லாம் அவள் இன்றும் பேசிக்கொண்டிருக்கின்றாள் …

மனைவிக்கும் , வாழ்க்கை துணைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..இரண்டும் பிரிக்கமுடியாமல் ஒன்றில் ஒன்றானவை …

நன்றியுடன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக