திங்கள், 13 ஏப்ரல், 2020

பவானி விழியில் தனலென
 தகிக்கின்றேன்..
எய்யாத அம்பினில் எழ முடியாமல்
வீழ்கிறேன்.

தன்னிலை  இழந்து வான்மேகம்
 வாடாதோ..
முழு நிலவும் நின் பொட்டாகி
போனாதால்..

பிறை நெற்றி என்றல்லவா
அறிந்திருந்தேன்..

நெற்றியில் பிறையினை இன்றல்லவா
காண்கிறேன்..
நாசியில் நயமாய் கலைகளை
வடித்ததால்...

நாபிக்கமலத்தில் மூச்சிறைத்து போகிறேன்..
வியப்பில் ஆழ்ந்தவன் வினாக்களோடு படைத்தானோ..

விடையென தலையசைக்கிறதே செவிகளில்  ஜிமிக்கிகள்..
வர்ணிக்க இயலா வகையினில் வடித்தானோ நின் கழுத்தினை..

அட்டிகையாய் மாறி அங்கமெலாம் தொடத் தோன்றிடும்..
கலைகின்ற கார்மேகங்கள் கூந்தலாய்
கொண்டாயோ..

விழிக் கண்டதெல்லாம் விவரித்து விட்டேன்..
மடிக் கொள்ளும் பொழுதினில் கவிதையாய் படைக்கிறேன் ஓவியமே
வருவாயோ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக