வியாழன், 16 ஏப்ரல், 2020

கேள்வி :...ஒருவரின் மன முதிர்ச்சியின் அடையாளமாக நாம் எதனைப் பார்க்கலாம்?

என் பதில் :...

உங்கள் பிறந்தநாளை மற்றவர்கள் நியாபகம் வைத்து வாழ்த்து சொல்லவில்லையேன்னு கவலை பட மாட்டீங்க.

தீபாவளிக்கு வெடி வெடிக்குற ஆசை இருக்காது. பொங்கல்ல கரும்பு சாப்பிடுற ஆசை இருக்காது.

அம்மாகிட்ட எவ்வளவு திட்டுவாங்குனாலும் சொரணையே இருக்காது.
நம்மை மற்றவர்கள் வேதனை படுத்தினாலும் நமக்கு அவங்களை வேதனை படுத்தணும்ங்குற எண்ணம் வராது.


சிலருக்கு சில விஷயங்களை சொல்லி புரிய வைக்க முடியாதுங்குறத உணர்ந்து கொள்வது.

முன்ன மாதிரிலாம் கோபம் வராது. ரொம்ப சாந்த சொரூபிணியா எல்லா பிரச்சனைகளையும் கையாள்வது.

பணத்தை வைத்து பழகாமல் குணத்தை பார்த்து பழகுவது.

மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பாங்கங்குறதைப்பற்றி கவலை படமாட்டோம்.

ஆடம்பர வாழ்க்கையின் மீது உள்ள ஆசை போய்விடும். எளிமையாக வாழு வேண்டும் என தோன்றும்.

மற்றவர்கள் செய்யும் தவறை மன்னிக்கும் குணம் வந்துவிடும்.
வாழ்க்கையின் நிலையின்மையை உணர்ந்து இன்றைய நாளை மகிழ்ச்சியாக வாழுவோம்.

எதுக்கும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டோம். நம் வாழ்க்கையில் வரவங்க வரட்டும், இருப்பவர்கள் இருக்கட்டும், போறவங்க போகட்டும் என்ற மனநிலைக்கு வந்துடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக