வியாழன், 30 ஏப்ரல், 2020

கேள்வி :வாழ்க்கையின் மிகச் சிறந்த அனுபவப் பாடமாக எதனைச் சொல்வீர்கள்?

என் பதில் :

எல்லாரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தோல்வி, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் இதையெல்லாம் பார்த்துடணும். அப்படி இல்லைன்னா உங்களுக்கு சில உண்மைகள் தெரியாமலேயே போய்விடும். வாழ்க்கை முழுவதும் மாய பிம்பத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

இதை நீங்க நினைச்சப்பலாம் பார்க்க முடியாது. எல்லோரும் ரொம்ப அன்பா பழகுவாங்க, நம்ப கூட இருப்பாங்க, எப்ப உதவி வேணும்னாலும் கேளுங்கன்னு சொல்லுவாங்க.

ஆனால் இந்த ஆசை வார்த்தையெல்லாம் உங்கள் தேவை அவர்களுக்கு இருக்கும்வரைதான்.

எப்போ உங்களுக்கு உதவி தேவைப்படுதுன்னு நீங்க போய் நிக்கிறீங்களோ. அப்போ நீங்க அவர்களின் பல விதமான முகங்களை, எண்ணங்களை, குணங்களை பார்க்கலாம்.

நமக்கு கடவுள் கஷ்டத்தையோ, தோல்வியையோ குடுப்பது சிலரின் குணத்தை புரிய வைக்கவோ இல்லை வாழ்க்கை பாடத்தை புரிய வைக்கவோ தான்.

எனவே அடுத்த முறை உங்களுக்கு கஷ்டங்கள் வந்தால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த கஷ்டம் உங்கள் வாழ்வில் தேவையில்லாத களையை நீக்கவே வருகிறதென்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக