புதன், 29 ஏப்ரல், 2020

கேள்வி :.எதை எண்ணி நீங்கள் இன்று கவலைப்பட்டீர்கள்?

என் பதில் :..

எத்தனையோ பிரச்சனைகள், இயற்கை பேரிடர்களை நாம பாத்திருக்கோம். அப்பலாம் நாம ஒன்னா தான் இருந்திருக்கோம். ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க உதவி பண்ணிக்கிட்டோ இல்லை ஆறுதல் சொல்லிகிட்டிருப்போம்.

ஆனா இப்போ மத்தவங்களை பாக்கவே பயப்பட வேண்டியதா இருக்கு. தெருவெல்லாம் வெருச்சோடி போயிருக்கு. கலகலன்னு பேச்சு சத்தம், பஸ் போற சத்தம் எதுவும் இல்லாமல் மயான அமைதியா இருக்கு. எல்லாரும் பிரிஞ்சி தனி தனியா இருக்கோம்.

இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்நாள்ல இதுவரை வந்ததில்லை. ஏனோ எனக்கு இது மனநெருடலையும் கவலையும் தருகிறது.

நாம இந்த சமூகத்தோட ஒன்றிதான் வாழறோம். நமக்கு தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு ஒரு பிணைப்போட தான் வாழ்ந்துகிட்டிருக்கோம். அதை உடைக்கிற இந்த மாதிரி தருணங்கள் தான் அதன் அருமையை நமக்கு உணர்த்துது.

சீக்கிரம் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து எல்லோரும் ஒன்னா கூடி பேசி சிரிக்கிறதை பார்த்தா தான் எனக்கு மனநிம்மதி கிடைக்கும்.

"யூனைடட் வீ ஸ்டேன்டு டிவைடட் வீ ப்ஆல்"


கோரோனா இந்த பழமொழியின் அர்த்தத்தையே மாத்திடுச்சு.

இந்த கோரோனா காலத்தில் பட்டை தீட்டப்பட்ட அறிவுப்பெட்டகம் எனக்கு கிடைத்தது .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக