வியாழன், 30 ஏப்ரல், 2020

கேள்வி :கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை?

என் பதில் .
கார்ப்பரேட் உலகத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள்:

மூளையில் சரக்கு இருந்தால் மட்டுமே வேலை. மூளை காலி என்றால், வேலை காலி.

மேலாளரை பற்றி யாரிடமாவது குறை சொன்னால், நாம் என்ன குறை சொன்னோம், எப்ப சொன்னோம் என்பது முதற்கொண்டு மேலாளருக்கு தெரிந்துவிடும்.

சொம்பு அடித்தால் மட்டுமே நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

கார்ப்பரேட் உலகில் யாரும் ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்பது வடிகட்டிய பொய்.

வாடிக்கையாளர்களை ராஜாவாக நடத்தினால், வாடிக்கையாளர் நம்மை ராஜாவாக ஆக்குவான்.

கண்காணிக்க யாரும் இல்லை என்பது போல தெரியும், ஆனால் எல்லோரும் கண்கணிக்கப்படுவார்கள்.

எல்லோருக்கும் வேலைக்கு சிபாரிசு செய்தால் ஆபத்தில் முடிந்து விடும்.
ஒரு முறை விடுமுறை அன்று அலுவலகம் வந்தால், எல்லா விடுமுறைக்கும் அலுவலகம் வரவைக்கபடுவார்கள்.

ப்ரோமோஷன் வேண்டும் என்றால் பொறுமை வேண்டும். இங்கு பொறுத்தார் ப்ரோமோஷன் பெறுவார்.

இப்போதைக்கு இது போதும். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ,அப்போதெல்லாம் வந்து எழுதுகிறேன்.


வாசித்ததற்கு நன்றி. !!
கேள்வி :வாழ்க்கையின் மிகச் சிறந்த அனுபவப் பாடமாக எதனைச் சொல்வீர்கள்?

என் பதில் :

எல்லாரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தோல்வி, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் இதையெல்லாம் பார்த்துடணும். அப்படி இல்லைன்னா உங்களுக்கு சில உண்மைகள் தெரியாமலேயே போய்விடும். வாழ்க்கை முழுவதும் மாய பிம்பத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

இதை நீங்க நினைச்சப்பலாம் பார்க்க முடியாது. எல்லோரும் ரொம்ப அன்பா பழகுவாங்க, நம்ப கூட இருப்பாங்க, எப்ப உதவி வேணும்னாலும் கேளுங்கன்னு சொல்லுவாங்க.

ஆனால் இந்த ஆசை வார்த்தையெல்லாம் உங்கள் தேவை அவர்களுக்கு இருக்கும்வரைதான்.

எப்போ உங்களுக்கு உதவி தேவைப்படுதுன்னு நீங்க போய் நிக்கிறீங்களோ. அப்போ நீங்க அவர்களின் பல விதமான முகங்களை, எண்ணங்களை, குணங்களை பார்க்கலாம்.

நமக்கு கடவுள் கஷ்டத்தையோ, தோல்வியையோ குடுப்பது சிலரின் குணத்தை புரிய வைக்கவோ இல்லை வாழ்க்கை பாடத்தை புரிய வைக்கவோ தான்.

எனவே அடுத்த முறை உங்களுக்கு கஷ்டங்கள் வந்தால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த கஷ்டம் உங்கள் வாழ்வில் தேவையில்லாத களையை நீக்கவே வருகிறதென்று...

புதன், 29 ஏப்ரல், 2020

கேள்வி :.எதை எண்ணி நீங்கள் இன்று கவலைப்பட்டீர்கள்?

என் பதில் :..

எத்தனையோ பிரச்சனைகள், இயற்கை பேரிடர்களை நாம பாத்திருக்கோம். அப்பலாம் நாம ஒன்னா தான் இருந்திருக்கோம். ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க உதவி பண்ணிக்கிட்டோ இல்லை ஆறுதல் சொல்லிகிட்டிருப்போம்.

ஆனா இப்போ மத்தவங்களை பாக்கவே பயப்பட வேண்டியதா இருக்கு. தெருவெல்லாம் வெருச்சோடி போயிருக்கு. கலகலன்னு பேச்சு சத்தம், பஸ் போற சத்தம் எதுவும் இல்லாமல் மயான அமைதியா இருக்கு. எல்லாரும் பிரிஞ்சி தனி தனியா இருக்கோம்.

இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்நாள்ல இதுவரை வந்ததில்லை. ஏனோ எனக்கு இது மனநெருடலையும் கவலையும் தருகிறது.

நாம இந்த சமூகத்தோட ஒன்றிதான் வாழறோம். நமக்கு தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு ஒரு பிணைப்போட தான் வாழ்ந்துகிட்டிருக்கோம். அதை உடைக்கிற இந்த மாதிரி தருணங்கள் தான் அதன் அருமையை நமக்கு உணர்த்துது.

சீக்கிரம் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து எல்லோரும் ஒன்னா கூடி பேசி சிரிக்கிறதை பார்த்தா தான் எனக்கு மனநிம்மதி கிடைக்கும்.

"யூனைடட் வீ ஸ்டேன்டு டிவைடட் வீ ப்ஆல்"


கோரோனா இந்த பழமொழியின் அர்த்தத்தையே மாத்திடுச்சு.

இந்த கோரோனா காலத்தில் பட்டை தீட்டப்பட்ட அறிவுப்பெட்டகம் எனக்கு கிடைத்தது .....
நன்றி :-
Maruthi vasanth ....

உடுமலை மாரியம்மன் கோவில் இன்றைய தர்மகர்த்தா, சோலியகவுண்டர் பேரன் ஶ்ரீதர் கவுண்டர்
இவர்களுக்கு இந்த பரம்பரை உரிமையை கொடுத்தது தளி பாளையப்பட்டு குஞ்சுபொம்மு எத்துலப்ப நாயக்கர் வம்சம்

உடுமல ஒரு மந்த கிராமம் , அதாவது மாட்டு மந்தைகள் மேய்ந்து பட்டியாக கூடும் இடம், உடுமல என்பது கம்பிலிநாட்டு ஏகிலிதொரலு பிரிவில் உள்ள ஒரு குடும்பபெயர்
உடுமல வம்சத்தினர் உண்டுபன்னியதால் உடுமலபட்டியாக இருந்து, தேவாங்கசெட்டிகள் துணி நெய்ய, மதுரையில் இருந்து கொடுங்கலூரும் கோழிகோடும் செல்லும் பாதையால் மெல்ல பட்டி பேட்டையானது.

இங்கு மாரியம்மன் கோவில் எடுப்பித்து, அதற்கு தனது வம்சத்தினர் தலைமையில் பிற குலங்ககளை இனைத்து தேரும் செய்து தனது மந்திரிமார்களில் ஒருவரான சோலியகவுண்டருக்கு தலைமை பொறுப்பும் கொடுத்தனர் ஜல்லிபட்டி தளி பாளையபட்டு குஞ்சுபொம்மு (Gujjubommu) வம்சத்தினர், இவர்களே திருமூர்த்திமலையில் உள்ள கோவிலும் ஆயிரம்கால் மண்டபமும் கட்டியவர்கள்

 இன்றைய கதை என்னவென்றால், ஶ்ரீதர் அவரது மச்சானும் நடிகருமான ரங்கராஜ் சுப்பையா என்னும் சத்தியராஜ் கருப்பு சட்டையும் பெரியாரிய தொண்டும் இந்துமத வெறுப்பும் நமது சடங்குசம்பரதாயத்தின் மேல் நக்கலும் செய்யும் இவர் ஏன் தனது மனைவிடமும் அவரது மருதியிடமும், மாரியம்மன் கோவில் பரிவட்டம் நமக்கு எதற்கு? தேர் இழுத்தால் மழைபெய்யுமா என நக்கல் நய்யாண்டி செய்யலாமே ??

ஆண்டுஅனுபவிக்க இந்துமதம் வேண்டும், நக்கலும் நரகலும் எங்களுக்கு, பாராட்டும் பரிசும் திராவிட நரகல் மூத்திரசட்டி நாயக்கருக்க ??

அப்படி நன்றிகடன் செய்வதாயினும் இன்றுமுள்ள குஞ்சுபொம்மு வம்சத்தினருக்கு செய்யலாமே?, ஏனோ அவர்களுக்கு அளித்துவந்த முதல் மரியாதையும் நின்றுபோய்விட்டதேன்?

இதை கேட்பார்களா நமது தீரன் சின்னமலையின் வாரிசுகள்?

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிற்றின் அவசியம் என்ன.?
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?
நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...
கேள்வி :..மனைவி யின் காதலில் தோல்வியடைந்தவர்கள் ஏன் மீண்டும் இன்னொருவரை காதலிக்க தயங்குகின்றனர்?

என் பதில் ..

நான் ஏன் இரண்டாவதாக யாரையும் காதலிக்கவில்லை என்று எனது மனநிலையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். முதலில் காதல் தோல்வியை யாரும் நகைப்புக்குரிய விஷயமாக பார்க்க வேண்டாம். ஒருவன் ஒருவரின் மீதான நம்பிக்கையை இழக்கும் தருணம் உண்மையிலேயே அதிக வலி தரக்கூடியது. அதனை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பலர் காதல் தோல்வி இப்படி இருக்கும், அப்படி இருக்கும், கஷ்டமாக இருக்கும் என்று கூறினாலும் அவர்கள் கூறுவதை விட 100 மடங்கு வலியை மனதில் சுமந்து கொண்டிருப்பர். ஒருவருடைய வாழ்க்கையை காதல் தோல்வியானது தலைகீழாக புரட்டிப்போடும் வல்லமை படைத்தது. ஒருவர் அதனை எந்த முறையில் எடுத்துக் கொள்கிறார் என்பதிலேயே, வாழ்க்கையில் நல்வழி படுகிறாரா, இல்லை தீயதை நோக்கி செல்கிறாரா என்பது அமையும்.

என்னதான் காதல் தோல்விக்குப் பிறகு பலர் நான் சிங்கிளாக உள்ளேன், இப்பொழுதே சுதந்திரமாக, சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறினாலும், ஏதோ ஒரு சின்ன சின்ன நிகழ்வுகளில், அவர்களுடைய நினைவுகள் உங்களுடைய அனுமதி இல்லாமலேயே உங்களை ஆட்கொள்ளும். அதிலும் முதல் காதல் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று.

ஏன் பெரும்பாலும் இரண்டாம் காதல் செய்யத் தயங்குகிறார்கள் என்றால், அவர்களுடைய எண்ணங்களில் ஆட்கொண்டிருக்கும் முதல் காதலின் வடுக்களே. காயங்கள் சிறிது காலத்தில் ஆறினாலும் வடுக்கள் நீங்கா இடம் பிடிக்கின்றன.

முதல் காரணமாக நான் கூற விரும்புவது, சூடு கண்ட பூனை மறுபடியும் விளக்கினைத் தொடத் தயங்கும் என்பதே.

பின்னர் முதல் காதலில் இருக்கும் உண்மைதன்மை, சுவாரஸ்யம் இரண்டாம் காதலில் இருக்காது. இரண்டாம் காதலன் காதலியோடு ஏற்படும் நிகழ்வுகளை முதல் காதலோடு நிச்சயம் நமது மூளையானது ஒப்பீடு செய்யும். முதல் காதலில் செய்த தவறுகளை இரண்டாம் காதலில் செய்யக்கூடாது என்று அனைத்துமே சிந்தித்து செயல்படச் செய்யும்.

முதல் காதலில் உள்ள சுவாரசியமே, எதைப்பற்றியும் சிந்திக்காமல் வெள்ளந்தியாக செய்வதுதானே? கணக்கீடுகள் செய்து, சிந்தித்து, ஒரு சில நிபந்தனைகளை வகுத்து காதல் செய்வதற்கு சும்மாவே இருந்து விடலாம்.

பின்னர் ஏன் அனைவரும் இரண்டு மூன்று காதல்கள் செய்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா என்று கேட்டால், பேரின்பம் இல்லை என்றாலும் சிற்றின்பத்திற்கு மனிதன் இசைந்து கொடுக்கத்தானே செய்வான்.

எனக்கு அந்த வெள்ளந்தித்தனம் வேண்டும்.

முதல் சந்திப்பின் சுவாரஸ்யம் வேண்டும்.

என்ன பேசுவதென்றே தெரியாத அந்த படபடப்பு வேண்டும்.

கண்கள் மட்டுமே உரையாடிக்கொள்ளும் அந்த சமிஞ்சை மொழி வேண்டும்.

அரைகஜ இடைவெளியில் விட்டுவிட்டு உரசும் கைகளின் தீண்டல்கள் வேண்டும்.

வலி சற்றும் தெரியாமல் வெகுநேரம் நடந்துசெல்லும் பாதைகள் வேண்டும்.

இருகரம் பிடிக்க, எதுவேணும் செய்யலாம் என்ற அந்த துணிச்சல் வேண்டும்.

மனதிலும் எண்ணத்திலும் முழுமையாய் ஆட்கொண்டிருக்கும் அந்த நினைவுகள் வேண்டும்.

வேண்டும்! வேண்டும்! அத்தனையும் வேண்டும்.

முதல் காதலின் கிளர்ச்சி நிலை வேண்டும்.

முதல் காதலின் மனநிலை வேண்டும்.

இதனை விட்டு விட்டேனே, முதல் காதலின் சீண்டல்கள், தீண்டல்கள் முத்தங்கள் அத்தனையும் வேண்டும், அப்படியே வேண்டும்….

இது இரண்டாம் காதலில் கிடைக்குமா?

என்னைக் கேட்டால், இரண்டாம் காதல் எப்போதுமே இரண்டாம் பட்சமே. இப்படி பேசுகிறாயே, இன்னொருவரை காதலோ கல்யாணமோ செய்து கொள்ள மாட்டாயா என்று கேட்டால். நிச்சயம் செய்வேன். எனக்கே தெரியும், இரண்டாம் காதலில் முதல் காதலை விட என்னால் ஆயிரம் மடங்கு அன்பினை வெளிப்படுத்த முடியும் என்று.

நன்றிகள் பல😊..
கேள்வி :.வீட்டின் மேல் பகுதியில் நடைபயிற்சி செய்யலாமா? வெறும் காலில் நடக்கலாமா.

என் பதில் :..
..

தாராளமாக செய்யலாம் ..8 போட்டு கூட நடைபயிற்சி. செய்யலாம் …

இது ஒரு சாதாரண நடை போன்றது, ஆனால் நீங்கள் ** 8 வடிவ ** வடிவத்தில் நடப்பீர்கள். இங்கே "தெற்கு-வடக்கு" திசையில் ஒவ்வொன்றும் சுமார் 6 அடி விட்டம் கொண்ட 2 வட்டங்களை இணைப்பதன் மூலம் 8 வடிவம் உருவாகிறது (படம் காட்டப்பட்டுள்ளது)
தோட்டம், பால்கனி, டெரன்ஸ், கார் பார்க்கிங் போன்ற திறந்தவெளியில் இந்த 8 வடிவத்தை நீங்கள் உருவாக்கலாம் .

காலையிலோ அல்லது மாலையிலோ வெறும் வயிற்றில் இதைப் பயிற்சி செய்யுங்கள்.

விரும்பத்தக்க நேரம் 5 முதல் 6 AM / PM வரை.

15 நிமிடங்களுக்கு கடிகார திசையில் தெற்கிலிருந்து வடக்கு திசையில் நடக்கத் தொடங்குங்கள், பின்னர் 15 நிமிடங்களுக்கு எதிர் திசையில். மொத்தம் 30 நிமிடம் தினசரி வழக்கத்திற்கு போதுமானது, ஆனால் உங்கள் வசதியின் அடிப்படையில் நேரத்தை அதிகரிக்கலாம்.

வெறும் காலில் (காலணிகள் இல்லாமல்) நடப்பதும், நடக்கும்போது 8 வடிவத்தில் கவனம் செலுத்துவதும் விரும்பத்தக்கது

பயன்கள்:

நீங்கள் தெற்கு - வடக்கு திசையில் நடக்கும்போது, ​​அதாவது பூமியின் காந்தப்புலத்தை நோக்கி மற்றும் எதிராக, உடல் ஆற்றல் பெறுகிறது
அனைத்து உள்உறுப்புகளையும். இயல்பான செயல்பாட்டிற்கு செயல்படுத்துகிறது.

8 வடிவ நடை காரணமாக, உங்கள் உடல் பாகங்கள் கால்கள், கணுக்கால், முழங்கால்கள், அடிவயிறு, இடுப்பு, கைகள், தோள்கள், கழுத்து, தலை போன்றவை ஒரு திருப்பம் மற்றும் திருப்புமுனையில் நகர்கின்றன.
எனவே இது வழக்கமான நடைப்பயணத்துடன் ஒப்பிடும்போது உடலின். அனைத்து பகுதிகளுக்கும் ஒரு நல்ல உடல் இயக்கத்தை அளிக்கிறது
நீங்கள் வெறும் பாதத்தில் நடக்கும்போது, ​​தரையுடனான தொடர்பு காரணமாக உங்கள் காலில் வெவ்வேறு புள்ளிகளில் அழுத்தம் உருவாகி அதன் மூலம் அனைத்து உள் உறுப்புகளையும் செயல்படுத்துகிறது. (பாதத்தில் உள் உறுப்புடன் இணைக்கப்பட்டுள்ள ரிஃப்ளெக்ஸ் அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன)
நடைபயிற்சி போது நீங்கள் 8 வடிவத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், நீங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதைத் தவிர்ப்பீர்கள் அல்லது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்பீர்கள், அது சரியான சுவாசத்தை உறுதி செய்யும்.

.இந்த நடை இரத்த அழுத்தத்தை சமப்படுத்த உதவுகிறது.உடல் எடையை குறைக்க உதவுகிறது

உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உங்களுக்கு உதவுகிறது. பகல்நேர வேலைக்கு உங்கள் உடலை புதுப்பிக்கவும்.
வழக்கமான நடைப்பயணத்திற்கு வெளியே செல்ல முடியாத வயதானவர்களுக்கு இது எளிதானது மற்றும் மிகவும் வசதியானது.

“8 நடைபயிற்சி” பயிற்சி செய்து, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கவும். உங்கள் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்..
ஆரோக்கியமே செல்வம். ஆரோக்கியமாயிருங்கள்

இதை வாசித்தவர்களுக்கு நன்றி



திருப்பூர் மாவட்டம் கலைஞர் தொலைக்காட்சி நிருபர் விஜயபாஸ்கரன் : திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த அன்பு பெரியோர்களுக்கு தோழர்களுக்கு தங்கள் பகுதியில் நடைபெறும் திமுக நிகழ்ச்சிகள், மற்ற பொது செய்திளான விபத்து, அரசின் தவறான நடவடிக்கைகள், குற்றச் சம்பவங்கள் உள்ளிட்ட செய்திகளை என்னுடைய தொடர்பு எண்கள்: 9750666155 மற்றும் 8870020503 ல் தொடர்பு கொண்டு தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டததிற்க்கு என்னைத் தவிர கலைஞர் தொலைக்காட்சிக்கு வேறு யாரும்   நிருபர்கள் கிடையாது. உடுமையில் சேகர் என்பவரையும் மடத்துக்குளத்தில் மோகன் என்பவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் வீடியோ எடுத்து அனுப்பி வர உள்ளார்கள். எனவே செய்திகளை என்னுடை என்னுக்கு தெரிவித்தால் நான் அவர்களை அனுப்பியோ அல்லது நானே நேரில் வந்தோ செய்தி எடுத்து நம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி🙏  பி.கு: செய்தியிலோ அல்லது வேறு குறைகள் இருந்தால் மேற்கண்ட என்னுடைய எண்ணுக்கு தெரிவிக்கவும்.

திங்கள், 27 ஏப்ரல், 2020




கேள்வி :..விளம்பரங்களில் உங்களைக் கவர்ந்த விளம்பரம் எது? ஏன்?


என் பதில் ...

எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம் .

புன்னகைக்கு கரணங்கள் நம்மை சுத்தி தான் இருக்கு

மனசுக்கு சரினு பட்டத செய்றது தான் மகிழ்ச்சி

நாம அன்பா செய்ற ஒரு சிறிய விஷயம் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் …

மத்தவங்கள சிரிக்க வச்சு பாக்குறது தான் உண்மையான நிம்மதி

இந்த உலகத்துல எல்லாத்துக்கும் விலை உண்டு அனால் அன்புக்கு மட்டும் இல்லை …

அன்பு குடுக்கும் போது நிறைய அன்பு கிடைக்கும் …

அந்த அன்பு கொடுக்குறவங்களுக்காக சின்ன சமர்ப்பனம் ……

கண்டு பிடுச்சுருப்பீங்கனு நினைக்கிறன்.ஓட்டோ ஷர்ட் விளம்பரம்.இந்த விளம்பரத்தின் வசனம் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு நல்ல எண்ணமே தோன்றும்.

கட்சிகள் தெளிவாக இருக்கும். பார்ப்பதற்கு மிகவும் பிடித்தது

இந்த விளம்பரத்தை ஒரு முறை பார்த்தால். தொடர்ந்து ஒரு மூன்று முறையாவது பார்த்து விடுவேன்.

துல்கர் மிகவும் பிடிக்கும். ஒரு துல்கர் ரசிகனாகவும்  இந்த விளம்பரத்தை ரசித்தது உண்டு.

https://youtu.be/A_Bq59YJ1sI


ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

சேலத்து மாம்பழம் ...சேலம் பொறியாளர் ..அன்பு நண்பர் கே .கனகராஜ் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
Intro


கேள்வி :.தமிழகத்தில் விவாகரத்து அதிகமாக நடப்பதற்கு என்ன காரணம்?

பதில் :...

விவாகம் தான்.

விவேகம் இல்லாத விவாகம் விவாதத்தில் முடிந்து விவகாரமாகி ரத்து வரை செல்கிறது.

Moral science வகுப்புகள் பள்ளிகளில் நின்றது

கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போயே தீருவேன்.. என்று ஒற்றை காலில் நிற்பது

ஒரே குழந்தையுடன் நிறுத்தி அது கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து பொம்மை வளர்ப்பது

பணப்பேய் பிடித்து வாட்டுவது

அகங்காரம் மமதை ஆதிக்கவெறி பிடுங்கித்தின்னும் பிக்காளித்தனம் காரியம் ஆனதும் கழட்டிவிடுவதில் மாஸ்ட்ரி அடுத்த ஜென் பற்றிய மைக்ரோ சிந்தனை கூட இல்லாத நானோ சைஸ் அறிவு முதலிலிருந்தே பெற்றோர் சொல் கேளாமை தன்னைப்பற்றிய அளவுக்குமீறிய உயர்ந்த அபிப்ராயம் பிறர் பற்றிய அக்கறையின்மை உடம்பு அலுங்க வேலை செய்யாமை சோம்பேறித்தனம் தவறான ஊக்குவிப்பு

இப்படி பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணம் எல்லாவற்றையும் மிஞ்சிவிடுகிறது. அது

அன்பின்மை.

அன்பு இருத்தல் அவசியமோ இல்லையோ அன்பின்மை இல்லாதிருத்தல் அவசியம்.

உறவுகள் முறியக்காரணம் அன்பின்மை தான்.
கேள்வி :...2021 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க-வினர் தோற்றுவிடும் என அஞ்சிதான் எடப்பாடி மற்றும் மோடியை விமர்சிக்கிறார்களா? இல்லையெனில் இவர்களின் சாதனையைச் சொல்லாமல் அடுத்தவரை சுட்டிக்காட்டி பூச்சாண்டி காட்டுவது தி.மு.க-வின் வழக்கமான ஏமாற்று வேலைதானா?

பதில்:....

நான் படித்த கேள்விகளில் மிக மிக மூடத்தனமான முட்டாள்தனமான கேள்வி இது தான்‌.

இந்த கேள்வியை கேட்ட புத்திசாலிக்கு ஒரு சிலைதான் எடுக்க வேண்டும்.

ஒரு கட்சி தமிழக மாநிலத்தில் 2011 முதல் இன்று வரை ஆட்சியில் இருக்கிறது.

அதே போல் மோடி 2014 முதல் இன்று வரை ஆட்சியில் இருக்கிறது

இந்த இரண்டு கட்சிகள் தான் தாங்கள் இந்த நாட்டுக்கு இந்த மாநிலத்திற்கு என்ன என்ன செய்தார்கள் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த என்னென்ன திட்டங்களை செயல்படுத்தினார்கள் என்று தங்கள் சாதனைகளை சொல்லி தேர்தலில் ஓட்டு கேட்க வேண்டும்.

அதே போல் ஒரு எதிர்க்கட்சி இந்த அதிமுக அரசு என்னென்ன தவறுகள் செய்தார்கள், அதே போல் தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக , பாஜக செய்த துரோகங்களை சொல்லி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில வளர்ச்சியை மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்னென்ன திட்டங்களை செயல்படுத்த போகிறார்கள் என்று சொல்லி வாக்கு கேட்க வேண்டும்.

இது தான் நடைமுறை கடந்த காலங்களில் இது தான் செயல்படுத்தபட்டது.

இந்த கேள்வியை கேட்ட நபருக்கு திமுகவை கண்டால் பயம் போலும் அதனால் தான் இது போன்ற முட்டாள்தனமான கேள்வியை கேட்டுள்ளார்.

ஒரு எதிர்க்கட்சி அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத எதிர்கட்சி தங்கள் சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்க வேண்டுமாம்..

இது எத்தகைய அறிவீனம் என்று பாருங்கள்.

பாவம் ஆளுங்கட்சி என்ன சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்க முடியும். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி , தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளுங்கட்சியாக இருந்தும் திமுகவை ஜெயிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது இது போன்ற முட்டாள் தனமான கேள்விக்களை  சமுக வலைதளங்களில் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு வலது சாரி , இந்துத்துவா ஆதரவாளர்கள் ஒத்து ஊதி ஜால்ரா இசைக்கிறார்கள்.

பாவம் அவர்களால் அதை தானே செய்யமுடியும். அதிமுக பிஜேபி போன்ற கட்சிகள் மக்களிடம் தங்கள் சாதனைகள் சொல்லிய வாக்கு கேட்க முடியும்.
என் கேள்வி :....உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்ன?

மனைவியின் பதில் :...


என் வாழ்க்கை துணையே பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்…. அவ்வளவு இருக்கிறது, நான் அவரிடம் கற்றுக்கொண்டது…. ✌️😍

கணவன் மனைவிக்கு இடையில் முதலில் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்று.!எங்கள் இருவருக்கும் இடையில் முதலில் அது கொஞ்சம் கடினமாக இருந்தது….எங்களுக்கு சண்டை தான் அதிகமாக வரும் அதற்க்கு நான் மட்டும் தான் காரணம்….. நாட்கள் மெல்ல மெல்ல கடந்தது…எங்கள் இருவருக்கும் இடையில் புரிதல், அன்பு மலர்ந்தது…

நாங்கள் இருவரும் தொலைபேசியில் அவ்வளவாக பேசியது இல்லை. ((திருமணம் முடிவு செய்த பின் திருமணத்திற்கு இடையில் 3மாதம் இருந்தும் என் கணவர் வாரம் ஒரு முறைதான் என்னை அழைப்பார்))

யாருடனும் போன் செய்து பேசும் பழக்கம் இல்லை. மிகவும் முக்கியமான வேலை, வேறு ஏதேனும் இருந்தால் மட்டும் தான் அழைப்பார். அவரின் வீட்டிற்கு கூட போன் செய்து பேசுவது குறைவுதான்…. ஒரு நாள் நான் கேட்டேன்!

ஏங்க இப்படி இருக்கீங்க…. உங்கள் வீட்டிற்கு கூட போன் செஞ்சு சரியா பேசாமற்றிங்க? அப்படினு கேட்டேன் அவர் அதற்க்கு சொன்னது…. நான் எப்பவும் இப்படி தான் பேசுவேன் அப்படினு சொன்னார்.

பிறகு ஒரு நாள் கேட்டேன்… என்னங்க நான் ஒரு நாள் எங்க அம்மா வீட்டுல இருந்தா அப்போ எனக்கு போன் செஞ்சு பேசமாட்டீங்களா அப்டினு கேட்டேன்…..அதுக்கு அவங்க பதில்.. !😊

என் கணவர் : போன் பண்ணுவேன், அதுக்கு ஒரு நாளைக்கு 9தடவையா பண்ணிட்டு இருப்பாங்க… எப்பாவது பண்ணுவேன் அப்படினு சொன்னாங்க..

நான் : என் மேல பாசமே இல்லை உங்களுக்கு அதான் இப்படி சொல்றிங்க. போன் செஞ்சு, நான் என்ன பண்றேன்… சாப்டியா அப்டினு ஒரு வார்த்தை கேட்க மாட்டிங்களா? (எல்லாம் பெண்களுக்கும் இந்த ஆசை இருக்க தான் செய்கிறது )

என் கணவர் :போன் செஞ்சு பேசினா தான் உன்மேல பாசம் இருக்கு அப்டினு அர்த்தமா? நான் என் வீட்டிற்கு போன் செஞ்சு நீ சொன்ன மாதிரி எல்லாம் என் அம்மா கிட்ட பேசல அப்டினா என் அம்மாமேல எனக்கு பாசம் அன்பு,…இது எல்லாம் இல்லை அப்டினு ஆகிடுமா.. !

அதே போல தான் நீயும்…. உன்கிட்ட போன் செஞ்சு பேசல அப்டினா உன் மேல அன்பு இல்லை அப்படினு ஆகிடாது…நான் யாருக்கு அதிகமா போன் செஞ்சு பேசுவது எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல உனக்கு….,

போன் செஞ்சு பேசித்தான்….. உன்மேல அன்பு இருக்கிற மாதிரி உன்கிட்ட பேசி நடிக்கணும் அப்டினு ஒன்னும் இல்ல. அன்பு அப்படின்றது மனசுல இருந்த போதும்…..

மத்தவங்க என்ன சொல்லுவாங்க அப்படி நினைச்சுட்டு நம்ம எதுக்கு நம்மல மாத்திக்கணும்?

நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை…… அதுல நமக்கு பிடுச்ச மாதிரி நாம வாழனும்…. யாருக்காகவும் நம்மல மாத்திக்க வேண்டாம்…. அப்படி மாத்திக்கிட்டா வாழ்க்கை எல்லாமே நடிக்க வேண்டியது ஆகிடும்…என்று என்னிடம் சொன்னார்….


என் கணவரிடம் இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன்…. யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை…

மலரும் நினைவுகள் ......

சனி, 25 ஏப்ரல், 2020

கேள்வி :...20 பக்கத்துக்கு மேல் யோசிக்கிறேன், ஆனால் எழுதுவதோ 2 பக்கம் மட்டுமே. இதற்கு என்ன தீர்வு?

என் பதில் :...

தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டால் எழுத்தில் சுவை இருக்காது, நீர்த்துவிடும், வடிகட்ட வேண்டும்!)

நான் இன்னொரு கோணத்தில் இக்கேள்விக்கு விடை தர விழைகிறேன்:

சாதாரணமாக யோசிக்கும்போது நமக்குள் நிறைய தோன்றும், அதிலும் ’எண்ணவோட்டம்’ () என்பது காட்டில் மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போல வேகமாக தாவிச் செல்லும்…

அதை அப்படியே எழுதுவது மிகக் கடினம்!

ஆனால், நமக்குத் தோன்றுவதில் எது எழுத்தில் மிளிரும் எது மிளிராது, அது சுவாரசியமானது என்று எழுதி வைத்துப் படித்துப் பார்த்தால்தானே தெரியும்?

எண்ணவோட்டத்திற்கு ஈடுகொடுத்து எழுத / தட்டச்சு செய்ய இயலாது என்ற நிலையில், நாம் குரல் பதிவு செய்து கொள்ளலாம்…

இன்று ஏறத்தாழ அனைவருமே திறன்பேசிகள் (smart phones) வைத்திருக்கிறோம், எல்லா திறன்பேசியிலும் அடிப்படையாகவே ஒரு குரல் பதிவு செயலில் இருக்கும்.

நாம் அதைப் பயன்படுத்த வேண்டும்.

எண்ணங்கள் தோன்றும் போது உடனுக்குடன் அதைக் குரல்பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த வடிகட்டலும், மட்டுறுத்தலும் இன்றி எல்லாவற்றையும் குரல் பதிவு செய்துகொள்க.

பின், நேரம் கிடைக்கும்போது அக்குரல் பதிவை நிதானமாகக் கேட்டு, அதில் தேவையானதை எழுத்தில் பதித்துக் கொள்ளலாம்.

அந்நிலையில் தேவையான மாற்றங்களையும் செய்து கருத்தை மெருகேற்றலாம்.


குரல் பதிவு செய்து அதைச் சேமிக்கையில் சரியான ஒரு பெயரைக் கொடுத்து சேமித்து வைக்கவும், இல்லையென்றால் பின்னர் எது எது என்று தேடி எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.


கேள்வி :...அதிக புத்தகங்களை படிக்க ஏதாவது ரகசிய யுக்தி உள்ளதா?

என் பதில் :.....

என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு வேகமாக வாசிப்பதற்கு என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் என்று. அதாவது அதிக புத்தகங்களை படிப்பதனால் நான் வேகமாக வாசிப்பவன் என்று அவர்களாக கருதிக்கொண்டதன் விளைவு தான் இந்தக் கேள்வி.

உண்மையில் அதிக புத்தகங்களை வாசிக்க ரகசியம் எதுவும் தேவையில்லை. மாதம் நான்கைந்து புத்தகங்களை வாசித்தாலும், அவை அனைத்தையும் நான் மிகவும் பொறுமையாகவே வாசிப்பேன்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது எனக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிடும் வழக்கம் கொண்டவன். அந்த புத்தகத்தை படித்த பின்னர் அடிக்கோடிட்டதை வேறொரு நோட்டுப்புத்தகத்தில் எழுதும் பழக்கமும் உள்ளது என்னிடம். இது அனைத்தையும் செய்ய அதிக நேரம் பிடிக்கும்.

எனது வேலையை முடித்து விட்டு இது அனைத்தையும் செய்ய என்னால் நேரம் எப்படி ஒதுக்க முடிகிறது?

ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு உன்ன எங்கிருந்து நேரம் கிடைக்கிறது? 7 மணி நேரம் உறங்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது? திரைப்படங்கள் அல்லது தொடர்கள் பார்க்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது?

எங்கிருந்தும் நேரம் கிடைப்பதில்லை. அதற்கு நாம் நேரம் ஒதுக்குகிறோம் ஏனென்றால் அதை முக்கியமென்று நாம் கருதுவதால். அதேபோல் தான் புத்தகத்தின் அருமையை உணர்ந்த நபர் ஒருவர் வாசித்தலுக்கும் நேரம் ஒதுக்குவது பெரிய விடயமாக இராது.

வாசிப்பை தொடங்குவதற்கு முன்பு ஒரு நபருக்கு மூன்று தடைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த தடைகளையும் அதற்கு தீர்வுகளையும் முன் வைக்கிறேன். இந்த தீர்வுகளை பயன்படுத்தி நீங்களும் வாசித்தல் எனும் மிக உயரிய பழக்கத்தை தொடங்குங்கள்.

நேரம்

புத்தகம் வாசித்தலை ஒரு செயலாக எண்ணுவதற்கு பதில் சாப்பிடுவதைப் போல், மூச்சு விடுவதைப் போல் ஒரு இயற்கையாக நடக்கும் நிகழ்வைப் போல் கருதுங்கள். வாசித்தல் என்பது ஒரு நிர்பந்தமான இயல்பு நிலையாக இருக்க வேண்டும்.

எப்பொழுதும் ஒரு புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசியுங்கள். உங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவாத தொலைக்காட்சி தொடர்கள், வாக்குவாதங்கள் போன்றவற்றிற்கு பதில் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுவாருங்கள்.

பணம்

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

கற்பதற்காக பிச்சை எடுத்தாலும் தவறில்லை என்று ஒளவைப்பாட்டி பல காலங்களுக்கு முன்பே பாடி வைத்துள்ளாள். இன்றைய டிஜிட்டல் உலகில் நமக்கு தேவைப்படும் புத்தகம் எங்கிருந்தாலும் அதை நம் வீட்டு வாசலிற்கே கொண்டு வந்து தருமளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதுவும் மிக குறைந்த பணத்தில்.

புத்தகம் என்று வந்துவிட்டால் பணத்தைப் பற்றி மறந்து விடுங்கள். உங்களுக்கு ஒரு புத்தகம் பிடித்துள்ளது என்றால் சிறிதும் யோசிக்காமல் அதை வாங்கிவிடுங்கள். ஏனென்றல் புத்தகம் வாசிப்பது என்பது ஒரு தேவை.

16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் எராஸ்மஸ், என்னிடம் சிறிது பணமிருந்தால், நான் அதில் புத்தகங்களை வாங்குவேன். அது போக மீதி ஏதாவது இருந்தால் அதில் உணவு மற்றும் துணிகளை வாங்குவேன் என்று கூறியுள்ளார்.

புத்தகம் வாங்குவது ஒரு செலவல்ல, அது நாம் செய்யும் ஒரு சிறந்த முதலீடு. ஒரு புத்தகம் உங்களுக்கு உதவுமென்று நீங்கள் கருதினால் பணமோ, நேரமோ அல்லது நம் சோம்பேறித்தனமோ எதுவும் நம்மை தடுத்த நிறுத்த அனுமதிக்கக்கூடாது. நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தை வாங்க தள்ளுபடி வரும் வரை காத்திருக்காதீர்கள். ஒரு 20 - 30 ரூபாயில் நாம் கோட்டை கட்ட போவதில்லை.

நோக்கம்

வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போனதிற்கு மிக பெரிய காரணம் அதன் நோக்கத்தை நாம் மறந்ததால் தான். புத்தகத்தின் பயன் பள்ளியோடோ அல்லது கல்லூரியோடோ முடிந்து விடுகிறது என்று நாம் கருதுகிறோம். புத்தகம் என்பது மதிப்பெண்களை பெறுவதற்கு மட்டுமே என்று எண்ணுகிறோம். புத்தகம் என்பது படிப்பதற்காக மட்டுமல்ல கற்பதற்காகவும். படித்தல், கற்றல் இரண்டிற்கும் வித்தியாசமுண்டு.

மனித இனம் 5000-ம் வருடங்களுக்கு மேலாக தனது ஞானத்தை புத்தக வடிவில் பதிவு செய்து வந்துள்ளது. அதாவது இப்பொழுது நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு உங்களை விட புத்திசாலியான நபர், பல வருடங்களுக்கு முன்பே அதை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார். தோல்வியை சந்தித்து கற்பதற்கு பதில் புத்தகத்தைப் படித்துக் கற்றுக்கொள்வது நம் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

புத்தகம் வாசிப்பதன் மூலம் பலர் செல்வந்தர்களாக உள்ளனர். வாசித்தலின் மூலம் அடிமை சங்கிலியிலிருந்து பலர் வெளிவந்துள்ளனர். மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்த பலரை புத்தகம் தான் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.

எனவே அதிக புத்தகங்களை வாசிக்க ரகசியமென்று ஒன்றில்லை. உங்கள் முன்னுரிமைகள் தான் அந்த ரகசியம் என்று கூட சொல்லலாம். உங்கள் முன்னுரிமை கற்றலுக்கா? அல்லது நேர விரயத்துக்கா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020




நன்றிகள் ....🙏🙏🙏🌱🌱🌱🌷🌷
இன்று எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எனது அருமை நண்பர்களுக்கும் .என் அருமை சொந்தங்களுக்கும் ,எனது சொத்துக்களுக்கும் (வாடிக்கையாளர்கள் ),என்னுடன் நிழல் போன்று என்னுடன் பயணிக்கும் எனது தம்பிகள் ,மாப்பிள்ளைகளுக்கும் எனது பணிவான நன்றிகள் ..வயது ஆகா ஆகா ...இளமையுடன் பொறுப்புகள் ..கூடுகொண்டேபோகிறது ..வருட வருடம் ..நட்புவட்டங்கள் ,சொந்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .🌷🌷பொருளாதாரம் 🌷🌷,வாழ்வியல்🌱🌱.சமுதாயம் 🌱🌱வரலாறு🤺🤺🏹🏹🐎 நிதியியல் ...,சார்ந்த பணிகள் இன்னும் பொறுப்புடன் எனது தேடல்களை மேலும் கூட்டுகிறது ..
🙏என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌷

தனித்திரு ..விழித்திரு .படித்திரு ...சமூகத்தை காத்திடு ...





வாழ்த்துகளுக்கு அன்புகலந்த நன்றி ...மாப்பிள ..சார்

நன்றி ..தம்பி ...பொதுவெளியில்..பொது தளத்தில்  எப்பொழுதும்  மரியாதை ..மதிப்பு தருவது என் இயல்பு

நன்றி டாக்டர் ...உங்கள் அன்பும் வாழ்த்தும் ..

அன்புகலந்த நன்றி சத்தி



வாழ்த்துகளுக்கு அன்புகலந்த நன்றி மாம்ஸ் ..

சாரி எல்லாம் எதுக்கு பாப்பு ...இந்த தனிமை வெறுமை ..எல்லாம் ..8 வருடங்களாக என் மனதில் இருப்பது தான் ...பழகிவிட்டேன் ..சந்தோசம் ..தூக்கம் எல்லாம் ..சமநிலை படித்தே கொண்டே பழகிவிட்டேன் ..\



Karthic KVT:
உடுமலை சிவக்குமார்
எளிதான தோற்றம்
மெளிதான பார்வை
எப்போதும் முன்புறுவல் சிரிப்பு
2002 ஹீரோஹோண்டா சிடி டான்
ஒரு ஆபிஸ் பேக் .. !!
சார் ..!!
நமஸ்காரம் சார்..!!
சிவா பார் ஹோம்லோன்ஷ்
சுந்தரம் பினான்ஷ் .....
உடுமலை பொள்ளாட்சி என காலில்
சக்கரத்தை கட்டிக்கொண்டு
காற்றாடி போல் வலம் வரும் மனிதர்
பண்பாளர் ..!
பற்றாளர் ....!
கல்வியாளர்..!
ஆய்வியல் ஆர்வலர்..!
சமுக சேவகர் ...!!
என எண்ணற்ற முகங்களை ஒருங்கே பெற்ற மனிதர் ..!!
மனிதருள் மாணிக்கம் ...!!
ஆம் ..!!
எனக்கு மட்டுமல்ல எங்களின் விருட்சக் குழுமத்திற்கே
கிடைத்த விலைமதிப்பிலா சொத்து..!!
கம்பள தலைவன் ..!
காவியத் தலைவன் ..!
என எண்ணற்ற எழுத்துகளால்
பாமாலை சூட்டினும்
அனைத்திற்கும் அணிசேர்க்கும்
அவரது பண்பு ..!!!
தான் கொண்ட கடமையிலும்
கொள்கையிலும் நின்று தடம்வழுவா
சூரியனாய் வலம் வந்து ..!!
உடுமலையின் உயிர்நாடியாய்
விளங்கும்
ஒப்பாரும் மிக்காரும் இலா
குளிர்நிலவாய்
உறவாடி உரையாடும் எங்கள் தலைவர்..!!
முகநூலில் கண்டெடுத்த முத்தான முத்து
திரு. சிவக்குமார் மாமா
அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை
காணிக்கையாக்கிகக்கொள்கிறேன் ...!!
இவன்
கம்பள விருட்சக் குழுமம்

வியாழன், 23 ஏப்ரல், 2020

கேள்வி :...போன தலைமுறைப் பெண்களிலிருந்து இந்தத் தலைமுறையினர் எப்படி மாறியுள்ளனர்?

பதில் :...


நகரம் மாறியுள்ளது..

பெண்களின் மாற்றம் நகரத்தில் இருந்தே தொடங்குகிறது அதை பற்றி முதலில் பார்ப்போம்…பிறகு கிராமத்தில் உள்ள பெண்களின் நிலை ஏன் அதிகம் மாறாமல் உள்ளது என கடைசியில் பார்ப்போம்..

கொஞ்சம் நீண்ட பதிவு, நேரம் இருந்தால் படியுங்கள்!

நகரத்தில் இருக்கும் எல்லா பெண்களையும், இப்படி இருக்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை, மாற்றதை உருவாக்கும் மகா பெண்களை பற்றி மட்டும் பேசுகிறேன்.

அணியும் ஆடையும் அளவு கொஞ்சம் குறைந்துள்ளது, எதுக்கு பாவம் விவசாயிகள் கஷ்டபட்டு அதிகம் பஞ்சு உற்பத்தி பண்ணிகிட்டுனு கொஞ்சம் சிக்கனமா இருக்காங்க பெண்கள்.

ஜன்னல் வைத்த ஜாகெட்டு என்று சரத்குமார் பாடியதெல்லாம், பஞ்சா பறந்து போச்சி , இப்பொழுது ஜாக்கெட்டே இல்லை, உள்ளாடையுடன் உலாவருகிறார்கள், என் சென்னை மாடர்ன் பெண்கள்…

பெண் என்ற தைரியம் கொஞ்சம் கூடியுள்ளது.சட்டங்கள் கொஞ்சம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது.

பெண்கள் கல்வி கற்கும் விகிதம், ஆண்களை விட அதிகம் ஆயிற்று.
ஆண்,அவனுக்கு நான் கீழானவளா? நன்கு சம்பளம் வாங்குகிறேன், அவன் தயவு எனக்கு தேவை இல்லை, என்ற திமிரும் கொஞ்சம் கூடியுள்ளது.
பல இடங்களில் பெண்கள் ஆண்களை வேலை வாங்கும் உயர் பதவியில் உள்ளார்கள்,

வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்காமல் ஆசிரியர், டாக்டர், லாயர், கலெக்டர் என பல துறைகளில் கால்பதித்துவிட்டார்கள்.
வேலை வாய்ப்பு என்று பார்க்கையில் நகரத்து பெண்களின் நிலை, கிராமத்து பெண்களை விட மேலோங்கி காணப்படுகிறது.
இப்படி இருக்க சிலர் வீட்டோடு மனைவி என்று சீரியல் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்.

கி்ராமத்தில் உள்ள பெண்களும் முன்னேருகிறார்கள் குடிசை தொழில் மற்றும் சுய உதவி குழுக்களை கொண்டு தங்கள் பொருளாதார தேவையை அவர்களே நிறைவேற்றி கொள்கிறார்கள்.

வருத்தப்பட வேண்டிய விஷயம் என்றால் கிராமத்திலும் கல்வி கற்கிறார்கள், கல்லூரி படிப்பை முடித்து வேலை வாய்ப்பு இல்லாமல் , பல சூழ்நிலைகளால் ஆடு மாடு மேய்த்து கொண்டு, வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பல பட்டதாரி பெண்களை இன்றளவும் காணமுடிகிறது.
கலாச்சாரம் என்று பார்க்கையில், கிராமத்து பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது.

பக்கத்து வீட்டில் கொலை, கொள்ளை, எவன் வந்து போகிறான் என்று எதையும் கண்டு கொள்ளாத நாகரீக சமூகம். கேட்டால் சிசிடிவி கேமரா இருக்காம்.

ஆனால், இன்றளவும் கிராமத்து பெண்களுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்தமாதிரி😅. புதிதாக ஊரில் ஒருவர் நுழைந்தால் போதும் யார் என்று நாயம் பேசி அலாசிவிடுவார்கள். அவ்வளவு பாதுகாப்பு கிராமங்களில். பெண்களே காவல் தெய்வம்.

அடுப்பு ஊதி சாப்பிட்ட காலம் போய், ஆர்டர் பண்ணி சாப்பிடுகிறார்கள் பெண்கள். ஆம் இன்று, நகரத்துக்கு கிராமத்தில் இருந்து போனால் ,முன்பெல்லாம் சமைத்து கொட்டுவார்கள், இப்பொழுதோ அப்பா உங்களுக்கு பிரியாணி ஓகே வா…அம்மா உங்களுக்கு தோசை, இட்லி ஓக்கேவா என்று கேட்கிறார்கள்.

நகரத்தில் கற்பு என்பது ஒரு காண்ரேக்ட் ஆக மாறிவிட்டது. மன்னிக்கனும் அப்படி இருக்கும் சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன், எல்லா பெண்களையும் அல்ல.

இன்று ஒருவர், நாளை வேறு ஒருவர் என்று ஒப்பந்தங்கள் கையெழுத்து இடபடுகின்றன.

இங்கு எல்லாமே செகண்ட் ஹேண்ட் தான் மற்றும் யூஸ் அண்ட் த்ரோ ஆகிவிட்டது.

நகரத்தில் ஒருவர் திருமணம் செய்கிறார் என்றால் அவர் நிச்சயம் , மற்றொருவரின் காதலியாக தான் இருக்கும். அப்படியென்றால்..
உங்களின் மனைவி , மற்றொருவரின் காதலி, மற்றொருவரின் காதலனாக நீங்கள் வேறொருவன் கணவன்…இப்படி ஒருவர் மற்றொருவன் X ஆக தான் இருப்பார்கள்.


சரி கிராமம் என்ன அவ்வளவு ஒழுங்கா என்றால் ?

ஆம் ஒழுங்கு தான்…


காதலிக்கும் வாய்ப்பு அங்கு பெண்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை, ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்றால், அந்த காதல் அப்பெண்ணுக்கு தெரிகிறதோ இல்லையோ, ஊருல இருக்குற குழந்தைக்கு கூட தெரியும். ஹே மாமா நீ அந்த அக்கவா சைட் அடிகுற தான அப்படினு பொடுசுகலாம் கேப்பாங்க..அதுது ஊருக்கே தெரிஞ்சு அவங்களை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க…இல்ல வாழ்கைல அந்த பையன் நல்லா இருக்கட்டுமேனு பிரிச்சுவச்சிடுவாங்க.


நகரத்தில் அப்படி நடக்க என்ன காரணம் என்கிறீர்களா, ஒன்றும் இல்லை. மேலை நாட்டு கலாச்சார ஊடுருவல்.


அவன் வாயில் முத்தம் கொடுத்து corona வந்து செத்து மடிகிறான்…இவங்களும் நான் கண்ணத்தில் காதலை வெளிப்படுத்த மாட்டேன் வாயில் தான் என்றால் …கடைசியல் வாயில் தான் அரிசி போடுவார்கள்…ஆம் அவ்வளவு நோய் தொற்றும் வாயில் முத்தம் இடுவதால் அவர்கள் வாய் கழுவி கொள்வார்கள், நம் ஆட்கள் சாப்பிடவே வாய கழுவ மாட்டார்கள் பிறகு வியாதி தான் வரும், காதல் வராது…


மற்றொன்று…கிராமங்களில் ஒதுக்கு புறமாக சிறுநீர் கழித்தால் அது பெரிய பிரச்சினை இல்லை, முத்தம் கொடுத்தால் அது மகா தப்பு, ஆனால் நகரத்தில் ஒதுக்கு புறமாக முத்தம் கொடுத்தால் அது சாதாரணம், சகஜம், ஆனால் சிறுநீர் கழித்தால் அதை photo பிடித்து பொது ஊடகத்தில் பதிவிட்டுவிடுவார்கள்….இன்றளவும் கிராமத்து வாசிகள் சென்னை நகரத்திற்கு வந்து , எங்கு உச்சா போவது என்று அறியாமல் …ஒத்துகுப்புறமகவே போகிறார்கள்…


நகரத்தில் பல ஆண்களுடன் பெண்கள் உல்லாசமாக இருக்கிறார்கள், தெருக்களில் புகைபிடிக்கிறார்கள்,கேட்டாள் இது என் வாழ்க்கை ,என் உரிமை என்று குரல் கொடுத்துக்கொண்டு,அவர்கள் அப்படி இருக்க மற்றொரு முக்கிய காரணம்உள்ளது, கிராமத்தில் பக்கத்து ஊருல ஒரு பயன் கிட்ட பேசினாலே, யாராவது சித்தப்பா பெரியப்பா, ஒன்னு விட்ட மாமானு யாராவது பார்த்து வீட்ல போட்டு கொடுதுடுவங்க…நமக்கு யாரு சொந்தகரங்கனு தெரியாது , ஆனா நமல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நீ இன்னாரு வீடு பொண்ணுன்னு…பார்த்ததும் சொல்லிடுவாங்க..


ஆனால் நகரத்தில் ஒரு சொந்தகாரனையும் பார்க்க முடியாது, நீங்க வேணும்னா நகரத்துல நேராக சொந்தகாரங்க இருக்குற இடதுல இருந்து பாருங்க….நீங்க ஒரு பெண்ணுக்கு ரோட்டில் வழி சொன்னால் கூட, உடனே போனை போட்டு ஏலே உன் புள்ள ஒரு பிள்ளைக்கு கைகாட்டிகிட்டு இருக்கான் அப்படினு வீட்ல சொல்லிடுவாங்க…


சமூகமானது பெண்களை பொறுத்தே அமைகிறது, பெண்ணில் மாற்றம் என்றால் குடும்பத்தில் மாற்றம், குடும்பத்தில் மாற்றம் என்றால் சமூகமே மாற்றம் அடையும்.


அதனால், கிராமத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் குறைவு என்றால் கிராமத்தின் கட்டுப்பாடுகளும், சொந்தம் பந்தம் என்று உறவு முறைகளும் அதனை பின்னிப் பிணைத்து வைத்து கொண்டு இருக்கிறது, அதை மீறி பல தவறுகள் நடப்பதில்லை, அதிலிருந்து யாராவது வெளியே செல்ல முயன்றாள் அது தண்டிக்கிறது(Punishment), அதனுடன் ஒன்றி வாழ்ந்தால் அது பாதுகாப்பு மற்றும் பரிசளிக்கிறது(Reward)

இத தவிர சொல்லறதற்கு வேற எதுவும் இல்லைங்க . ..நன்றி…நமக்கம்
புவி தினம்....சிவக்கனி


புவி ஆளப்பிறந்தாயடா என்று கூறிவளர்த்ததாலோ என்னவோ புவியை மட்டுமே ஆண்டு கொண்டுள்ளோம்......
மாண்டவர் மீண்டெழுவது கதைகளில் மட்டுமே சாத்தியம்.‌.....
ஆலகால விஷத்தை விழுங்கிய ஆண்டவனைக் கொண்டாடும் நாம்...ஆழமறியா நஞ்சை விழுங்கிய நம் பூமித்தாயை எண்ணுவதில்லை.....   
நம் நாவிற்கு இனிய சுவை பானத்தைக் கொண்டாடிய நாம்....
பாமர மக்களின் தாகம் தணிக்கும் நிலத்தடி நீரை எண்ணவும் மறந்து விட்டோம்.....
ஆகாய வானில் கோட்டை கட்ட தெரிந்த நாம்
காற்று வெளியின் தூய்மை
காக்க மறந்து விட்டோம்......
நாம் மறந்ததை நமக்கு
நினைவூட்டவே ...
கொரானாவின்  கோர தாண்டவம்......
வல்லரசு என்று
வெற்றியில் புரண்டாலும்....
 வளர்கிறோம் என்று மிதப்பில்  இருந்தாலும்...
தன்னைத்தான் காக்கின்
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கினங்க...
இயற்கையே இமயமாய்
வெகுண்டெழுந்ததோ.....
விபத்தில்லை...‌.....
மாசில்லை........
கொலையில்லை....
கொள்ளையில்லை.......
ஊரோடு ஒன்று பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் - பழமொழி....
உலகை உலுக்கும் உயிரினை உலுக்கி எடுக்க
ஒன்றினைவோம்.....
மகத்துவம் நிறைந்த மருத்துவத்தால் மனிதம் காக்க ஒன்றினைவோம்......
விழித்திருப்போம்....
விலகியிருப்போம்......
வீட்டிலிருப்போம்........
விவேகமாய் முடிவெடுப்போம்.....
இருண்ட உலகினை மீட்டெடுக்க
இயற்கையை மீட்பதே
முதல் கடமை...
23.04.2020...கிளை எண் 2 நூலகம் -உடுமலை


கட்டுரை : என்னை செதுக்கிய நூலகம்

1.கவுசல்யா - ஜீ வீ ஜீ கல்லூரி - 2nd இயர்  BSc.-குரல்குட்டை
   மொபைல் .7449156057.

2.கஸ்தூரி ...

மொபைல் .9003490013..

3.கீர்த்தனா ..ஜீ வீ ஜீ கல்லூரி - PG  2nd இயர்  எகனாமிக்ஸ்

மொபைல் .9789568614

4.கரிஷ்மா ....7 இம் வகுப்பு .. ஆதர்ஷ் பள்ளி பள்ளபாளையம்

மொபைல் .9952305075


ஓவியம் ....covid 19

1,தீபா ... பி.காம்     2ம் வருடம் ..ஜீ வீ ஜீ  கல்லூரி -படம் இந்திய மேப்

மொபைல் .85081 83950

2.ஸ்ரீவதனி  7 ம் வகுப்பு ..SVHS ..ஸ்கூல் .கணியூர் இந்தியா மேப்
3.சத்திவேல்  9 ம் வகுப்பு SVHS ..ஸ்கூல் .கணியூர் covid 19

4.எஸ் .கீர்த்திகா ...4 ம் வகுப்பு  ஸ்ரீனிவாச ஸ்கூல் -உடுமலை -covid 19

5.எஸ் .ஸ்ருத்திகா  2 ம் வகுப்பு ஸ்ரீனிவாச ஸ்கூல் -உடுமலை -covid 19

6.வர்ணேஷ் .. 4 ம்  வகுப்பு ...கே .வீ எஸ் ஸ்கூல் உடுமலை ..covid 19.colourful drawing -9...மொபைல் ...9385360639

7.Name: R.Priyadharshene --------covid 19..ஸ்டே ஹோம் ஸ்டே safe
College Name: Karpagam Nursing college
Level: 3rd year B .sc nursing
Address: 4/100 Gandhipuram
Thaandagoundanthottam
Udumalpet.
மொபைல் .94897 15113

1. என்னை கவர்ந்த புத்தகம் ...கட்டுரை

J.kaviya second mathematics .....6369 410 940
Sri gvg college for women
Udumalpet...





புதன், 22 ஏப்ரல், 2020

கேள்வி :...எளிமையாக இருப்பவர்கள் ஏமாளிகள் அல்லது அறிவில்லாதவர் அனுபவம் இல்லாதவர் என்று எண்ணப்படுகின்றனரா?

என் பதில் :....


என்ன கேட்டீர்கள், எளிமையாக இருப்பவர்கள் ஏமாளிகளாக, அறிவில்லாதவராக, அனுபவம் இல்லாதவராக இருப்பது போல் எண்ணப்படுகிறார்களா?

ஆம், நிச்சயமாக! இந்திய நாட்டில் ஒரு ஐாம்பவான் அப்படி தான் எண்ணப்படுகிறார்.

ஒரு எளிமையான மனிதரின் அறிவுத்திறனையும் அனுபவத்தையும் பகிர ஆசை கொள்கிறேன்.

பொருளாதார அறிவு கொண்டவர், இன்று மத்திய அரசில் ஆளும் கட்சி அறிமுகப்படுத்தும் பெரும்பாலான திட்டங்கள் அவர் காலத்தில் வகுக்கப்பட்டதே, இன்றைய அரசு திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி வைத்து கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திட்டம் தீட்ட தெரியாது!

ஒரு அரசாங்கமானது மற்றொரு அரசின் செயல்முறைகளை திருடி கொண்டால், அதுவும் ஒரு காலத்திற்கு தான் நீடிக்கும் , அதற்கு பிறகு பாதாளக் குழியில் விழ வேண்டியதுதான்.

அப்படிதான் விழுந்தது தற்போதைய மத்திய அரசு. பல்வேறு காரணங்களை காட்டி அரசின் செலவுக்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது முதல் இன்றைக்கு நாம் சந்திக்கும் பொருளாதார இடர்பாடுகள் வரை அனைத்திற்கும் அரசு தனது சுய அறிவை பயன்படுத்தாதது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சரி, அவரை பற்றி கூற வேண்டுமென்றால் அடுக்கி கொண்டே போகலாம்.அவரின் அனுபவத்தைப் பற்றி கூற வேண்டுமா?

பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாத தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில், ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டிபில் பட்டம் பெற்றவர்.
இந்திய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனராக பணியாற்றினார்.
இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குனராக பணியாற்றினார்.
பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.
இந்திய நிதி அமைச்சராக இருந்தார்.
அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
இறுதியில் இந்தியாவின் பிரதம மந்திரியாக 2004 இல் இருந்து 2014 வரை பணியாற்றினார்.


இந்த எளிமையானவரை அறிவில்லாதவர், அனுபவம் இல்லாதவர் என்பது போலவே கருதுகிறது தற்போதைய மத்திய அரசு.

ஏனென்றால், மத்திய அரசைச் சாடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது, மத்திய அரசானது பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலை வந்தாலும் ஒரு பொருளாதார நிபுணர் என்று அவரின் அறிவுரை கேட்க கூச்சப்படுகிறார்கள்.

காரணம் அவர் காங்கிரஸ் கட்சியின் கையாட்டி பொம்மை என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஏனென்றால் உதவி என்று எதிர்கட்சியிடம் கேட்டுவிட்டால் ஆளும் கட்சிக்கு மீசையில் மண் ஒட்டிவிடும் பாருங்கள் அதான்!

"தங்க முட்டை இடும் வாத்தை, தகர டப்பா என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்"

காங்கிரஸில் அவரின் செயல்பாட்டை குறித்து பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் ஒரு பொருளாதார முனைவராக, வல்லுனரான அவரின் அத்தனை பங்களிப்பும் நாட்டின் மேம்பாட்டிற்கு உதவியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் அவர் நாட்டிற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.

நன்றி…!
கேள்வி :...WhatsApp-இல் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு சிறந்த செயலா?

என் பதில் :...

சாதாரணமானவர்கள் - தேவையென்றால் மட்டும் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் வைப்பவர்கள்.

கால் பைத்தியம் - அவருடைய தினசரி நடவடிக்கைகளை அப்படியே போடுபவர்கள்.

அரை பைத்தியம் - ஏதாவது விழாக்கள், வித்தியாசமான மனநிலையில் இருந்தால் அன்றைக்கு மட்டும் ட்ரெயின் விடுவார்கள். மற்ற நாட்களில் தினமும் ஸ்டேட்டஸ்.

முழு பைத்தியம் - எப்போதும் ட்ரெயின் விடுவார்கள்

இப்படி நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள்.

சிலர் Always Sad - நேர்ல பார்த்தால் சிரிச்சுட்டு சுத்தும்

Always Motivated - சோம்பேறியா இருக்கும் ஆனால் வேற லெவல்ல ஸ்டேட்டஸ் வைக்கும்

Always Happy - சிலநேரம் சந்தோஷம், சிலநேரம் கவலை. ஆனால் பாக்குற நம்மள சந்தோஷமா வச்சுக்கிற மனசு இருக்கே அதான் சார் கடவுள்

Always Love/Mom/ Dad கால் பண்ணி பேசுனா எரிஞ்சு விழுவான் ஆனால் ஸ்டேட்டஸ் வேற மாதிரி இருக்கும்

Always Devotional மூன்று மதங்களும் இதே தான். இந்து முஸ்லிம் பரவாயில்லை. கிறிஸ்தவ நண்பர்கள் தான் Ultimate🤣🤣. இப்போ முஸ்லிம் நண்பர்கள் 45 பேருக்கு மேல் Azadi CAA NRC Status Than.

Always News Updates - இந்த மாதிரியான ஆட்கள் ரொம்ப ரேர். ஆனால் என்னோட வாட்ஸ்அப் லிஸ்ட்ல ஒருத்தன் இருக்கான் ‌ Tech Update கம்பெனிகளில் இருந்து ரிலீஸ் ஆகுதோ இல்லையோ அவன் அப்டேட் போட்ருவான்.

Always Hero/Heroin/ movies இந்த ஆளுங்கள திருத்தவே முடியாது

Always Against BJP எப்ப பார்த்தாலும் அதே வேலை தான் வச்சிருப்பான்‌. அப்போ சீமான் கட்சியான்னு கேட்டா கழுவி ஊத்துவான். அப்போ ஸ்டாலினான்னு கேட்டா கெட்ட வார்த்தை தான்.

WhatsApp Status வைக்கிறது நல்லது தான். ஆனால் உருப்படியாக வைக்க வேண்டும். ட்ரெயின் விட்டால் மியூட்டில் போட்டு விடுவோம் நல்ல ஸ்டேட்டஸ் வைத்தால் கூட பார்க்க முடியாது 🤣.

அப்பாவின் நினைவுதினம் ..மலரும் நினைவுகளுடன் (23.04.2019)


அப்பாவின் நினைவுதினம் ..மலரும் நினைவுகளுடன் (23.04.2019)

கிருஷ்ணசாமி என்கிற வேலுச்சாமி 

தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து
பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து
நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில்
முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர.....
அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்....

கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார்.
தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு
ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு...

மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார்.
அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார்
பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும்
செய்வதில்லை..ஏனோ!!!

வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்)

மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு
செய்யும் அப்பா......
பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக
சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா...

பேரனோ.... பேத்தியோ.....
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு
இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,,
(அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா?
பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....)

இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா.....

அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல.....
இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்...
அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி)
சமாளிக்கும் திறமை...
தனக்கென வாழாதவர்....
இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்...
மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்...
அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை....

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும்
இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும்
மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....அப்பா மறைந்து ..வருடங்கள் இரண்டு ஆனாலும் ...அவரின்நினைவுகளுடன் ..அவர் கூடவே இருப்பது போன்றே இருக்கிறது ...

அப்பாவின் அருமை அன்பிலே...
அதை நாம் புரிதலே....
இத்திரியிலே.....
அப்பாவின் பாதம் வணங்குவோம்
என்றும் அவரை போற்றுவோம்.


அப்பாவின் ..பொறுமை ..சகிப்புத்தன்மை ..எந்த பிரதிபலன் பாராது பணிகள் 

உதவி என்று கேட்டால் தன்னாலான பணிகளை செய்துகொடுக்கும் பாங்கு ..இவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ..உலக புத்தக தினம் ...என் அப்பாவின் நினைவு தினமும் இதே நாளில் தான் ...நான் பிறந்தது முதல் பள்ளிப்படிப்பு ...வாழ்க்கை கல்வி ...என்று தினம் தோறும் ..45 வருடங்களாக சொல்லித்தந்த நடமாடிய புத்தகம் ...அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கை கல்வியுடன் என்றும் மறவாது இருப்பது ..
உடுமலையில் இருக்கும் கச்சேரி வீதி பள்ளியில் படிக்கும் போதே ..நூலகத்தை காட்டி ...விடுமுறை நாட்கள் ..பள்ளியின் மதிய உணவு நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் ...படிக்க வழிகாட்டிய தந்தை ...எந்த சூழ்நிலையிலும் ...மனம் கோணாமல் புன்னைகையுடன் ..பணியாற்ற வேண்டிய கற்றுக்கொடுத்த புத்தகம் ...உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும்,...
உலக புத்தக தினம் ..என் தந்தையின் நினைவுதினம் ...வாழ்வில் மறவாது ..என்றும் உணர்வுடன் கூடவே இருக்கும் தந்தையின் நினைவுகள் ..

என்றும் நீங்கா  நினைவுகளுடன் ..வணங்குகின்றேன் 

அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681....