ஞாயிறு, 15 அக்டோபர், 2017

Thiru Murthy added 2 new photos.
கத்தரிக்காய் கால்ப்பணம் .!
சுமைகூலி முக்கால் பணம் ..!!
என்பதைபோல என்கதை ஆகிவிடகூடாது என்பதால் இந்த முடிவு..
பவர் டில்லருக்கு : 28,000 ரூபாய்,
மினி டிரேக்டருக்கு : 66,500 ரூபாய்,
பெரிய டிரேக்டருக்கு : 36,000 ரூபாய்
******************;*
ஆக மொத்தம் 1,30,500 ரூபாய்
கடந்த பதிமூன்று மாதங்களில் டிரேக்டர்காரர்களுக்கு எனது பனிரெண்டு ஏக்கர் பூமியை உழ நான் கொடுத்த வாடகைதான் இது ங்க..

கணக்கு போட்டு பார்த்தேன் சம்பாதிக்கும் பணத்தில் பாதி வாடகைக்கே போயிவிடும் போல தெரிந்தது..
முகநூல் சொந்தமான Therkutheru Er Sathieshskj அண்ணாவிடம் ஏதாவது பழைய மினி டிரேக்டர் இருந்தா சொல்லுங்க வாடகை கொடுத்து ஓட்ட சிரமமாக இருக்கிறது என்று விபரத்தை சொன்னேன்..(சதீஷ் அண்ணா நன்றி ங்க)
அடுத்த தினமே "மதுரையில் அக்ரி மார்ட் வெங்கடேஷ்வரா மிட்சுபிஷி ஷோரூமில் 2014 மாடல் 18.5 HP குறைந்த பயன்பாட்டில் ஓடிய வண்டி இருக்கிறது வாங்க பார்க்கலாம் "என்றார்..
சென்றேன்...
பத்து மாதத்தில் அறுபது மணிநேரமே ஓடியிருந்தது ..
ரோட்டரி, வண்டியும் சேர்த்து 2,30,000 ரூபாய் சொல்லி எட்டாயிரம் ரூபாய் குறைத்து கொடுத்தார்..
புதிய வண்டியை விட அறுபது ஆயிரம் ரூபாய் விலை குறைவாக கிடைத்ததால் எடுத்து விட்டேன்..
இந்த வண்டியில் ரோட்டாவேட்டர் பொருத்தி பலதானியத்தை மடக்கி உழலாம்..
மூன்று கலப்பை பொருத்தி நிலத்தை உழலாம்..
கேஜ் வீல் பொருத்தி சேற்று உழவு ஓட்டலாம்..
பார் கலப்பை பொருத்தி பார் ஓட்டலாம்..
வாழைக்கு மண் அனைக்கலாம்..
டிரெயலர் மாட்டி குப்பை ஓட்டலாம்..
((இதற்கெல்லாம் தனித்தனி உபகரணங்கள் தேவை))
மூன்று வருடங்களுக்கு முன்னே அரசு மானியத்தில் இந்த வண்டியை வாங்க விண்ணப்பித்தும் இதுவரை வந்தபாடில்லை..
இனி எழுபது ஆயிரம் மானியத்தை பாத்தால் கதைக்கு ஆகாது என்றுதான் இந்த வண்டியை வாங்கிவிட்டேன்..
மானியம் எங்கள் பகுதியில் இல்லை என்று சொல்கிறார்கள்..
ஆனால் மதுரையில் இருக்கிறது..
மானியத்தில் புது வண்டி தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்..
அக்ரி மார்ட் மதுரை M.ராதாகிருஷ்ணன்...
கைபேசி எண் 98430 53744..
மானியத்தில் எடுக்க விரும்புவோர் மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கள் ஆகியவைகளை இவரிடம் கொடுத்தால் போதும்..
டிராக்டர் சாணி போடாதுனு எனக்கும் நல்லா தெரியு ங்க..!
விவசாய ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்கவும், மண்ணை மலடாக்கும் களைக்கொல்லியை ஒழிக்கவும்
இது போல தேவையான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றால் நான் விவசாயத்தில் தாக்கு பிடிக்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக