உறவுகள் ...என்றவுடன் ...என் நீண்டகாலபெங்களூரு கிருத்திகா தரன் நண்பரின் பதிவுகள் என் நினைவில் நிழலாடும் ..என் பதிவுகள் பார்த்து ..கொஞ்சம் உயிரோட்டத்துடன் எழுதவேண்டும் என்பார் ...இன்னும் என் பதிவுகளில் தடுமாற்றம் இருக்கிறது .....உறவுகள் என்ற தலைப்புக்கு இந்த பதிவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறன் ...
ஒரு தாயை எங்கே தாயாக காண்போம்?
ஆம் என் தாயை நான் தரிசித்த இடமெல்லாம் நாங்கள் கஷ்டபட்ட சமயத்தில்.
வீட்டில் ஒரு மருத்துவ அவசரம். இரவு ஒரு மணி, போன் வருகிறது, போய் பார்த்தால் அம்மா தனியே ஆட்டோவில் இருந்து இறங்குகிறார். மொழியும் தெரியாது. வீடும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த துணிவை அம்மாவின் பாசம் கொடுத்தது.
அந்த துணிவை அம்மாவின் பாசம் கொடுத்தது.
அப்பா மருத்துவமனையில் அனுமதி. பல சமயங்களில் தன் நிலை மறப்பார். யாராலும் சமாளிக்க முடியாது. கிட்டதட்ட ஒரு மாதம் தவம் போல் கூட இருப்பது பெரிதல்ல, அந்த அமைதி, அனுசரனை அத்தனை எளிதில்லை. அங்கே தாயை பிரமாண்டமாய் தரிசித்தேன்.
பிரசவம் முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம். இரவு இல்லை, பகல் இல்லை. குழந்தையும் நானும் தான் உலகம். பத்திய உணவில் இருந்து குழந்தை தோளில் வைத்து ஏப்பம் விடும் வரை அவர்தான் பொறுப்பு. அங்கு தாயின் இன்னொரு பிரமாண்டத்தை தரிசித்தேன்.
அக்காக்கு ஒரு ஆக்சிடண்ட். பதறி அடித்துக் கொண்டு வருகிறார். சைக்கிளில் கேரியரில். எப்படியோ, யாரையோ பிடித்து பதறி பதறி ஓடி வருகிறார் உயிரை மக்களிடம் ஒப்படைத்த தாயின் பிரமாண்டத்தை தரிசித்தேன்.
இன்றும் பேரனுக்கு ஜூரம் என்றால் கை கால் ஓடாது தவிக்கும் பாசத்தின் பிரமாண்டம்.
தாயாக பார்த்து இருப்பினும் அவர் தந்தையை தேடி மருத்துவமனைக்கு ஓடிய காட்சியில் நானாக மகளாக தரிசித்தேன்.
தியாகம் செய்ய சிலர் இருப்பார்கள் என சுயநலமாய் அம்மாவை டேக் இட் கிராண்டாட் ஆக எடுத்துக் கொண்டோம் என்று நினைவு வந்தாலும்..அம்மாவை பார்த்தவுடன் எல்லாம் மறந்து அம்மா உன் கையால் காபி என மாறுவதன் மர்மம் புரிபடவில்லை. அக்காபியின் சுவையில் அம்மாவையும் கலந்து கொடுப்பதுப் போல் தனி சுவை
அந்த தயிர்சாதம், மாவடு, மிக்சர், சீடை, முறுக்கு, மாங்காய் தொக்கு, சேனை வறுவல், மலாய் கோப்தா, கட்லெட் என நீளும் அம்மாவின் ருசியின் காட்சிகள் மற்றுமொறு தாயழகு. ஊருக்கே உணவு அளிக்கும் அன்பு மற்றுமொரு அழகு.
பரிதவிக்கையில் படரும் பாசக்கொடிகள் பலமானவை. நன்றாக இருக்கும் பொழுது அம்மா நினைவுக்கே வருவதில்லை. துளி கஷ்டம் என்றாலும் ஆடு மடி தேடும். எத்தனை நோகடிப்பினும் அம்மாவால் எல்லாவற்றையும் மறந்து குழந்தைக்கு வேளா வேளைக்கு நேரத்துக்கு பிசைந்து ஊட்டு , பசி அடக்கினா எல்லாம் அடங்கும் என எளிதாய் சொல்லி விட முடிகிறது.
தாயான கணத்தில் உணர்ந்தேன்
தாய் என்பது ஒரு வலி
ஒரு இன்பம்
உண்மை
அழகு
பாசம்
இனிமை
ஒரு சுவை
ரசனை
ஈர்ப்பு
அத்தனையும் விட கண் துஞ்சா
தியாகம்..
ஒரு இன்பம்
உண்மை
அழகு
பாசம்
இனிமை
ஒரு சுவை
ரசனை
ஈர்ப்பு
அத்தனையும் விட கண் துஞ்சா
தியாகம்..
தாய்மையை அளவீட்டால் மட்டுமே அதன் தியாகமும், நியாயமும் புரிபடும். அளவிட முடியா அளவுக்கு தாய் உறவை எளிதாய் எடுத்தாள்கிறோம்.
என்ன செய்து சரி செய்ய இயலும்?
எனினும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா என்று முடித்துக் கொள்கிறேன். Girija Manian.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக