Sivakumar Kumar is
feeling wonderful with in Monday .மார்க்கெட் ..Udumalaippettai.
நீண்ட
வருடங்களுக்கு பிறகு அம்மாவுடன் காய்கறி சந்தைக்கு சென்று வந்தேன்
...எப்பவும் அழைக்க மாட்டார்கள் ..சிறு வயது இருக்கும்போது(30வருடங்களுக்கு
முன் ) அழைத்து செல்வார்கள் ...என்னமோ தெரியவில்லை சந்தைக்கு வரியா கண்னு
என்று அழைத்தார்கள்.. சரிங்கஅம்மா.. நானும் வருகிறேன் என்று அவர்களுடன் சென்று வந்தது
மனதுக்கு ஆத்மார்த்தமான நிம்மதி .காய்கறி விலை எல்லாம் கொஞ்சம் அதிகமாக
பட்டது...எப்பொழுதும் காய்கறி கடையில் பேரம் பேசி வாங்குவார்கள் ...எதுவும்
கேக்காமல் வாங்கியது ஏன் என்று தெரியாமல் ...ஏன் நான் சிறு வயது இருக்கும்போது
பேரம் பேசி வங்கவீர்களே ஏன் இப்பொழுது வாங்கவில்லை என்று கேட்டேன் ...இல்ல கண்னு
..புரட்டாசி மாதம் எல்லாம் மழைபெயுது காய்கறி விலை குறைந்து இருக்கும்
..இப்ப எங்க கண்ணு மழை பெய்து இருக்கிறது ?...இந்த விலைக்காவது காய்கறி
கிடைக்காதே என்று சந்தோசப்பட்டுக்கினும்...காய்கறிகடைக்காரர்களுக்கும்
சிரமம் கொடுக்கக்கூடாது .....என்று கூறியது ..நம்மை சுற்றி இருக்கும் கால சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று உணர்த்தியது ...இந்த படிக்காத மேதையிடம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக