செவ்வாய், 10 அக்டோபர், 2017

பண்டிகைகளும் ஊடகவியலாளர்கள் ....

பத்திரிகைக்காரரா நீங்க, கலைஞர் கருணாநிதிய நேர்ல பாப்பீங்கல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி , கவர்னரை நேர்ல ,பாப்பீங்களாமே..அன்னைக்கு டிவில உங்களைப்பார்த்தேன், தளபதி பக்கத்துலையே நின்னீங்க.
ரகுமான், இளையராஜா நிகழ்ச்சிக்கெல்லாம் டிக்கெட் ஈசியா கிடைக்குமாமே. எந்த அதிகாரிககிட்டக்கூட நீங்க சுலபமா பேசலாம். பஸ்சு, டிரெயின்ல வேற சலுகையெல்லாம் கிடைக்குமாமே.
காதில் இன்பத்தேன் வந்த பாயும் பத்திரிகையாளனின் ஒருபக்கம் இதுதான்.
ஆனால், மறுபக்கம் இத்தனைக்கும் 200 மடங்கு எதிரான தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடமாடும் ஒரு எந்திரமயமான வாழ்க்கை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அந்தப் பத்திரிகையாளரின் குடும்பத்தினரே முதலில் நம்ப மாட்டார்கள்.
ஊரே தீபாவளி கொண்டாடும், குடும்பத்தினர் காத்திருக்க தெருத்தெருவாக அலைந்து பட்டாசு விற்பனை, துணி விற்பனையை செய்தி சேகரித்துக்கொண்டிருப்பார். தன் குடும்பத்திற்கு எடுககக்கூட நேரம் இருக்காது. சொந்தங்களைப் பார்க்க லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில்களில் செல்வதைச் செய்தியாக்கிவிட்டு, ஆளே இல்லாத கோவையில் ,சென்னையில்,மதுரையில் ,திருச்சியில் , உடுமலையில் ,காய்ந்துபோன பரோட்டாக்கடைகளைத் தேடிக்கொண்டிருப்பார். ஊரே விடுப்பில் இருக்க இவர் மட்டும் அலுவலகத்தில் காதில் பட்டாசு சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு ,மனதை கல்லாக்கிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருப்பார்.
உலகம் விழிக்கும்போது உறங்கப்போவார். உலகம் உறங்கப்போகும்போது விழித்தெழுவார்.
உண்மையில் ஊடகவியலாளர்கள் பணி ஒரு மிகுந்த அர்ப்பணிப்பு ,தியாகம் ,சுகதுக்கங்களை மறந்து பணியாற்றும் பணி ....ஒரு துறை பத்திரிகை மற்றும் ஊடகத் துறைதான்...இந்த பதிவு ...பத்திரிகைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தீபாவளி தின வாழ்த்துக்கள் :)
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக