கோவையிலிருந்து உடுமலைக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
பின்வரிசையில் ஏதோ ஒரு இருக்கையிலிருந்து ஒரு குழந்தை தனக்குத் தெரிந்த ரைம்ஸ் மற்றும் வாய்ப்பாடுகளை சொல்லிக் கொண்டே வருகிறாள்.
“பேசாமா தூங்குடீ” என அதட்டும் அம்மாவிடம்,
“ப்ளீஸ்மா ஒரே ஒருவாட்டி கேளும்மா” என்று கெஞ்சுவதும் மீண்டும் தனது ஒப்பித்தலை தொடர்வதுமாய் வருகிறாள்.
பேருந்து முழுக்க அவள் மழலையால் கசிகிறது.
“சீ யாருமே கேட்கமாட்டேங்கறாங்க. பேட் பீபிள்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தொடரும் அவளுக்குத் தெரியாது,
நான் அவளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது.

*****************************************************************
எத்தனை உண்மை .. இம்மழலைக் கூறுவது .. எத்தனை பெற்றோர் செவி சாய்க்கிறோம்...குழந்தைகளுடன் பயணத்தில் வரும்போது அவர்கள் கேட்கும் மழலை மொழிகள் ..ஆனந்தம் ...
எத்தனை உண்மை .. இம்மழலைக் கூறுவது .. எத்தனை பெற்றோர் செவி சாய்க்கிறோம்...குழந்தைகளுடன் பயணத்தில் வரும்போது அவர்கள் கேட்கும் மழலை மொழிகள் ..ஆனந்தம் ...
பல.... (ஆறு வயதிலிருந்து துவங்கி பள்ளி இறுதி வகுப்பை தாண்டிய சிறுவரும்/சிறுமியரும்) பள்ளி முடிந்ததும் ஒன்று எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள்... சதுரங்கம் பயில .. அல்லது சில நாட்களில் நான் அவர்கள் வீட்டை அடைவேன் ... அந்நேரம் நான் தான் அவர்களை அலுவுலகம் முடிந்து சந்திக்கும் முதல் ஆளாய் இருப்பேன்... எத்தனையோ கதைகளை கேட்டுள்ளேன்.. அவர்களின் கதை கேட்டு முடித்தபின் தான் மற்ற என் வேலைகளை துவங்குவேன் ... அதில் ஓர் ஆத்ம பந்தமும் .. திருப்தியும் இருந்தது.. என் செல்ல ஷ்யாமுடன் பஸ் பயணத்தில் ,என் காரில் அழைத்துசெல்லும்போதோ ,டூ வீலரில் அழைத்துசெல்லும்போது ..அவரின் சொல்லும் கதைகள் ,வகுப்பில் நடந்த உரையாடல்கள் ஆர்வமுடன் சொல்லும்போது கவனமாக கேட்டு ..தக்க பதில்கள் அளித்துக்கொண்டு அவரின் திறனை அறிந்துகொண்டுள்ளேன் ...அதனால் தானோ என்னவோ .. அவர்களின் மழலைகள் கூறும் கதையைக் கூட என்னால் கேட்கும் பாக்கியம் கிடைத்ததோ? அவர்களிடமிருந்து ஒரு தாய்/தந்தை ஒரு மகனிடம் ஒரு மகளிடம் வாழக்கூடிய இந்த இனிய அனுபவத்தை நான் அனுபவித்ததைக் கணக்கில் எடுத்தால் பல பிறவிகள் ஒரே ஜன்மத்திலே வாழ்ந்ததற்கு ஈடாகும் ..
பள்ளிக்கு கொண்டு சென்று விடுகையிலும் திரும்பக் கூட்டி வருகையிலும், காலையிலும் மாலையிலும் உணவு ஊட்டுகையிலும், அன்றைய பாடத்தைப் பற்றி கேள்வி கேட்டபடியே அதைச் செய்யும் பெற்றோரைக் காண்கையில் .. சிறிதே பழக்கமுடையவராய் இருப்பின் ... பலமுறை நான் அவர்களைக் கடிந்துள்ளேன்... ஆனால் அவர்கள் திருந்தவில்லை ... இன்னமும் ..இனியாவது எதிர்கால குழந்தைகளின் நலனுக்காக சில மணி நேரங்களை செலவிடுவோம் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக