வியாழன், 5 அக்டோபர், 2017

 இன்றைய புத்தக திருவிழா ....தொலைக்காட்சிகளுக்கு முன்னால் தவம் கிடக்கும் சூழ்நிலையில் ...எங்கள் இளைய தலைமுறைகள்அப்படியெல்லாம் இல்லை ...பெரியவர்கள் மறந்தாலும் நாங்கள் இன்னும் இந்திய சுதந்தர விடுதலை வேர்களை ,மறக்கவில்லை  என்று கலை நிகழ்ச்சிகள் நடித்து ,நடத்தி காட்டிய .. சின்ன வீரம்பட்டி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் ...ஜான்சிராணி வரலாற்று நாடகம் ,கிராமிய பாடல்கள் ..சாம்ராட் நாடகம் ..அருமை ..உடுமலை மக்களுக்கு பெருமையும் கூட ..

வரவேட்புரை திரு .கணபதி அவர்கள் புத்தகத்திருவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார் ...

 இன்று கருத்துரை வழங்கிய தவத்திரு.பாலபிரஜாபதிஅடிகளார்.(அய்யாவழி சமயத் தலைவர்.)அவர்கள் ..மானுடம் வெல்லும் ....பற்றி .பேசியது அருமை ..பாலா பிரஜாபதி அடிகளார் பேசும்போது ..இடதுசாரிகள் பற்றி பேசியது உடுமலை மக்களை வியப்பில் ஆழ்த்தியது ...மனிதனுக்கு இடப்பக்கம் இதயம்...அந்த இதயத்தை தாங்கும் சக்தி இடது.என்று சிந்தனை தூண்டியது அருமை ...உடுமலையின் பெரியார் ..நம் பழம் பெரும் எழுத்தாளர் ..பேச்சாளர் ..சிவசக்தி ராமசாமி அய்யாவை பார்த்து ..உடுமலையில் ஒரு பெரியரைகண்டேன் ..என்னுடைய நிகழ்வுகளுக்கு அழைத்த செல்லவேண்டும் என்று கூறியது ..உடுமலை மக்களுக்கு கிடைத்த பெருமையும் கூட .. ..உடுமலையின் நூலகங்களில்  புத்தகங்களும் ,நூலகங்களும் ,நூலக வாசிப்பாளர்கள் அதிகம் உள்ளதையும் ...நூலகங்களின் பராமரிப்பு ,அதன் அழகையும் பாராட்டி பேசியது மிக்க மகிழ்ச்சி ..


உடுமலை புத்தக திருவிழாவிற்கு வருகை தந்து முன்னிலை வகித்த ..பட்டய கணக்காளர் .திரு .R .கந்தசாமி அவர்கள் ,திரு .S .கண்ணன் அவர்கள் ,திரு .S ஜோசப் அவர்கள் ,திரு .S சிக்கந்தர் அவர்கள்விழாவை சிறப்பு செய்தனர் ..

கருத்துரை வழங்கிய தவத்திரு.பாலபிரஜாபதிஅடிகளார்.விழாவின் நினைவு பரிசு திரு .கந்தசாமி அவர்கள் வழங்கினார் ..உடுமலை சிவசக்தி ராமசாமி அவர்களுக்கு ..கருத்துரை வழங்கிய தவத்திரு .பாலபிரஜாபதி அவர்கள் நினைவு பரிசு கொடுத்து சிறப்புச்செய்தது மகிழ்ச்சி ...S .கண்ணன் அவர்களுக்கு உடுமலை சிவகுமார் ,நினைவு பரிசு வழங்கினார் ..ஆடிட்டர் திரு R .கந்தசாமி அவர்களுக்கு ..நூலகர் திரு .கணேசன் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் ..

நன்றியுரை ...திரு .லால் அவர்கள் வழங்கியதும் .விழா முடியும்வரை காத்திருந்த மழைக்கு நன்றி ....மழை சாரல் ..தூறலுடன் ஆரம்பமானது ...புத்தக திருவிழாவிற்கு கிடைத்த பாராட்டு மழை ....!!!!



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக