ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நேரம் ....
சுமதி அக்கா.....இரவு பன்னண்டு மணிக்கு தூங்கபோயிட்டு ...காலையில் கண்ணைக்கசக்கிக்கிகிட்டே எந்துரிச்சு ...ஸ்ட்டேவ் பத்தவைச்சு ..குக்கரில் நாலு சொம்பு தண்ணி ஊத்திவைச்சு ...ரெண்டு டம்பளர் அரிசி எடுத்து கழுவி ரவுண்டு குண்டாவில் வைத்து ..அதுக்கு மேல் தட்டைவைத்து சின்ன குண்டாவில் தக்காளி ,ரெண்டு கை பருப்பு டன் ,மஞ்சத்தூள் ,கொஞ்சம் நல்ல எண்ணெய் ஊத்திவைத்து குக்கரை மூடி வைத்துவிடுவேன் ...

குக்கரில் 5 விசில் வரதுக்குள்ள ...பெரியவெங்காயம் ,ரசத்துக்கு கொஞ்சம் புளியும் ,தண்ணீரில் ஊற வைத்துவிடுவேன் ..அப்படியே பக்கத்துக்கு ஸ்டேவுல கொஞ்சம் சுட.. சுட ..காப்பி போட்டு ,..எங்க வீட்டு பிரதம மந்திரிக்கும் ,எங்க வீட்டு இளவரசர் கும் .கொடுக்கவேண்டும் ...பட்டும் படாமல் ...தட்டி தூக்கத்திலிரிந்து எழுப்பி ..தப்பி தவிர கூட குண்டுஊசி விழும் சத்தம் இல்லாமல் எழுப்பவேண்டும் ..அதிரடியா எழப்பினால் அந்த நாள் ..திண்டாட்டம் தான் ..கவனம் தேவை ...

5 விசில் வந்தவுடன் குக்கரை கீழே இறக்கி வைத்து விட்டு ..எங்க வீட்டு பிரதம மந்திரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிடுவேன் ..அதற்கு பிறகு அவர்கள்  வடை சட்டி எடுவைத்து ..அதில் நல்ல எண்ணெய் ஊற்றி கருகப்பில் ,கொத்துமல்லி தழை ,போட்டு ..சீரகம் ,கடுகு போட்டு தாளித்துவிட்டு குக்கரில் ரெடியாக இருக்கும் பருப்பு எடுத்த கலக்கி கொஞ்சம் சூடான பின்பு இறக்கி வைத்து விடுவார்கள் ..குக்கரில் பருப்பில் வைத்த தண்ணீர் கொண்டு ..மறுபடியும் வடைச்சட்டியில் ,கடுகு ,கொத்துமல்லி தழை ,சீரகம் ,மஞ்சத்தூள் ,கொஞ்சம் ரசப்பொடி போட்டு பதமாக சுடவைத்தால் சூடான ,அருமையான ரசம் ரெடி ...இது எல்லாம் முடிக்கும்வரை ..நாம பக்கத்தில் இருந்து கை காண சுட்டுக்கமாக கண்ணும் கருத்துமாக ..பார்த்துக்கொள்ளவேண்டியது நம் பொறுப்பு ..இதில் சிறு தவறு நடந்தால் கூட ...அடுத்த நேரத்தில் பொறுப்பு நம் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைத்துவிடுவார்கள் ..கவனம் தேவை ...


அட அத சொல்லிட்டு நம்ம அடுத்தவேளை விட்டுட்டேன்ப்பாருங்க காபி குடித்து ... அப்பறம் எங்க இளவரசரை ..காலை முக்கிய பொறுப்புகளைமுடித்து ..அடுப்பில் சூடான தண்ணீரை பக்கீட்டில் ஊற்றி கொஞ்சம் மெது மெது பான குளித்த வைத்து ...அவருக்கு பள்ளியின் யூனிபார்மை போட்டுவிட்டு ரெடி பண்ணவேண்டியது அண்டராட கடமை...இதில் சிறு பிசிறுகூட தவறு நேர்ந்துவிடக்கூடாது ..

வீட்டு பிரதம மந்திரி ...எனக்கும் ,இளவரசருக்கும் ,மதியம் சாப்பிடுவதற்கு டிபன் பாக்ஸில் வைத்து எங்கள் முதுகில் கட்டி விடுவார்கள் ....

முதுகில் ஆனந்த சுமையுடன் கிளம்பி ...இளவரசரின் பள்ளிக்கு சென்று அவரது வகுப்பில் உட்காரவைத்துவிட்டு ...நம்ம அப்படிக்கா ..நம் அலுவுலகத்தற்கு சென்று கடமை ஆற்றவேண்டும் ...எந்த வேலையாக இருந்தாலும் ..மாலை சரியாக இளவரசரின் பள்ளிக்கு சென்று ..இளவரசரை வீட்டில் சேர்க்கவேண்டியது நம் தலையாய கடமையாகும்....மாலை வீட்ற்கு செல்லும் போது வீட்டில் இருந்து தகவலின்படி ..கோதுமை மாவோ ,இட்டிலி மாவோ வாங்கி கொண்டு சொல்லவேண்டியது பெரும் கடமை...இதிலும் எதாவது சொதப்பினால் ...தண்டனையாக ..நம் பர்ஸ் காலியாகிவிடும் ..நம்மளே நம்ம பர்ஸுக்கு சூனியம் வைத்துக்கொள்ளக்கூடாது .....இரவு டிபனுக்கு ...கூட ..மாடா ...சமையல் வேலை தெரிந்துகொள்ளவேண்டியது மிக மிக முக்கியம் ..நல்ல வேலை எங்கள் அம்மா எனக்கு சிறுவயதிலிருந்து சமையல் கற்று கொடுத்தினால் தப்பித்தேன் ..அவர்களுக்கு கோடி புண்ணியம் ..எங்க வீடு இளவரசர்கூட என்கூட சேர்ந்து சமையல் செய்வதை பார்த்தும்,கேட்டுக்கொண்டும் கொண்டு இருக்கிறார் ...இது நல்ல முன்னேற்றம் கூட ..வெளியூர் ,வெளி நாடு படிப்பு ,வேலை விசியமாக சென்றால் சாப்பாடுக்கு கவலைகொள்ளத்தேவையில்லை ...

இத்தனை வேலையும் முடித்துவிட்டு ..இந்த முகநூல் ,வாட்ஸாப்ப் ,புத்தகம் படிப்பது ,உங்களிடம் தகவல்களை பரிமாறிக்கொண்டு உள்ளேன்....மறுபடியும் நேரம் ..நாம் தான் ஒதுக்கி கொள்ளவேண்டும் ...தகவல்களை பரிமாற்தற்கு ,
 நம் சொந்தங்களை தெரிந்து கொள்ள ,நண்பர்களை தெரிந்துகொள்ள ,நாம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.....





















 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக