சனி, 7 அக்டோபர், 2017

இன்றைய உடுமலை புத்தக திருவிழா .....

தலைமை ....திரு .Rtn .வெற்றி R .முருகநாதன் அவர்களின் முத்தாய்ப்பான பேச்சுடன் ஆரம்பமானது ...

மூன்று முத்துக்கள் ....
கடலில் கண்டுஎடுத்த  முத்துக்களை போன்று பேச்சு ...

திரு .கே .சுவாமிநாதன் -துணைசெயலார் -தென்மண்டல lic ஊழியர் கூட்டமைப்பு.....நாளெல்லாம் எங்கள் செல்வம் ...என்ற கருத்துரையில் பேசும்போது ..இந்திய வரலாற்றையும் .,பொருளாதாரத்தையும் பற்றி பேசியது அருமை ..

திரு .செந்தமிழ்செல்வன் -கூடுதல் பதிவாளர் -கூட்டுறவுத்துறை -சென்னை

அய்யா அவர்கள் ...பேசும்போது ...மறைந்த உடுமலையின் மண்ணின் மைந்தர் ..திரு .S .J .சாதிக் பாஷா -சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்ததை பெருமையடைவதாக இருக்கிறது என்றார் ..
தமிழின் மீது அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்தினர் ..அய்யா அவர்கள் படித்தது உடுமலை அமராவதி இராணுவப்பள்ளியில்  ...இவ்வளவு அருமையாக தமிழ் மீது பற்று இருப்பது உடுமலைக்கு கிடைத்த பெருமை .அய்யா அவர்கள் உலகம் முழுவதும் தமிழ் மனம் பரப்பிக்கொண்டு இருக்கிறார் ..பெரியாரை கொண்டாடவேண்டும் ..அவரின் புத்தகங்ளை படிக்கவேண்டும் ..புத்தக வாசிப்பும் ,நேசிப்பும் இன்றைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டும் என்பதை அழகாக எடுத்துரைத்தார் ..உடுமலை பழம்பெரும் எழுத்தாளர் ..திரு .சிவசக்தி ராமசாமி அவர்களை ..விவசாய கவிதை ஒன்றை வாசித்து கேட்டு அவரை பெருமை படுத்தினர் ..இதுதான் உடுமலை மண்ணின் மகிமை இருக்கும்போதே அவரை கொண்டாடவேண்டும் என்பதை திரு .செந்தமிழ்செல்வன் அய்யா அவர்கள் உணர்த்தினார் ..

எழுத்தாளர் திரு .பாமரன் அவர்கள் ,அக்கம் பக்கம் பாரடா ...என்ற கருத்துரையில் பேசும் போது ..தமிழ் மக்கள் தேவையான வரலாற்றையும் ஆவணப்படுத்த வில்லை என்றுக்கூறியதை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் ..பெரியாரை வைத்து ஒரு டாக்குமெண்ட்ரி படம் கூட வெளியிடவில்லை ,கேரளாவில் விழாக்களில் பேசும்போது திராவிடத்தை பற்றி பேசும்போது ..அதற்ககான குறும்படம் வெளியிட்டு ..அதன்பின் பேச்சை தொடங்கவது கேரளா மக்களின் வாடிக்கை .அதற்கு பெரியாரை பேசலாம் என்றால் ஒரு டாக்குமெண்ட்ரி கூட கிடைக்கவில்லை கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் ..

வந்திருந்த விழாவின் மூன்று முத்துக்கள் ...திரு .கே .சுவாமிநாதன் அவர்களுக்கு ,,பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் .திருமதி .V .விஜயலக்ஷ்மி அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் ...திரு .மு செந்தமிழ்செல்வன் அவர்களுக்கு ..உடுமலை மின்சாரவாரியம் திரு .உடுமலை தண்டபாணி அவர்கள் பரிசு வழங்கி சிறப்பித்தார் ...எழுத்தாளர் .திரு .பாமரன் அவர்களுக்கு ..தொலைத்தொடர்பு துறை ..திரு .ரங்கசாமி அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் ..

திரு .N .பாண்டியன் அவர்கள் விழாவிற்கு வந்து கலந்துகொண்ட உடுமலை மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ...

இன்றைய கலை நிகழ்ச்சிகளை ...அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளி மாணவ செல்வங்களும் ,ராகல்பாவி அரசு நடு நிலை பள்ளி மாணவச்செல்வங்கள் நடத்திய ..பாடல்களும் ,நாடகங்களும் புத்தக திருவிழாவிற்கு பெருமைசேர்த்தினர் ....













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக