செவ்வாய், 31 அக்டோபர், 2017

அடடா...இன்றய தலைப்பு ....இடம் ...பொருள் ..ஏவல் ....இப்போது இருக்கும் சுழலுக்கு ....சரியான தலைப்பு ....

எனது அருமை மாமன் ...சுக்காம் பட்டி ...நிலக்கோட்டை ...ராஜபாண்டியன் மாமாவின் அட்டகாசமான [பதிவு ........இடம் ..பொருள் ..ஏவல் ...


Raja Pandian........

இடம், பொருள், ஏவல் அறிந்து பேசத் தெரியாதவன், செயல் படத் தெரியாதவன், நடந்து கொள்ளத் தெரியாதவன், புரிந்து கொள்ள தெரியாதவன்.
ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள். இதை அன்றே சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்கள். அன்றைய மக்கள் இதை சரிவர அறிந்து கொண்டு ஒருத்தரை ஒருத்தர் முழுமையாக புரிந்து கொண்டு நடந்து கொண்டதால், அவர்களால் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிந்தது, மேலும் பல குடும்பங்கள் கூட்டு குடும்பலாக ஒரே கூரையின் கீழ் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்துள்ளதாகவும், இதுக்கு மேலே அரசர்களும் அரசபை தலைவர்களும் தேசத்தின் மக்களும் ஒருத்தருக் கொருத்தர் புரிதலில் மேலோங்கி இருந்து சீரும் சிறப்போடும் வாழ்ந்துள்ளதாக சரித்திரம் நம்மைப் பார்த்து பறைசாற்றுகிறது.
பள்ளிப் பருவ வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி, மற்ற பழக்க வழக்கங்களிலும் சரி ஜாடை அறியாமல் செயல் பட்டால் அதை விட ஒரு முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.
பல மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். பெரிய பட்டப்படிப்பு படித்து இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். கம்பெனிகளில் பல நூறு வேலை ஆட்களுக்கு மேனேஜராக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். பெரிய செல்வந்தனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். வெள்ளையும் சள்ளையுமாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். தன்னைச் சுற்றி இவ்வளவு கூட்டங்களா என்று பிரமிப்பு அடைவான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். . இதுக்கு மேலே எத்தனையோ ஜாடை அறியாத சர்வ முட்டாள்களை நாம் பார்கின்றோமா இல்லையா?
நாம் தினம் தினம் சாலையில் நடந்து போகும் போதும், பிரயாணத்தில் இருக்கும் போதும் எத்தனையோ பேர்களை சந்திக்கின்றோம் உரையாடுகின்றோம் அத்துனைபேரும் நமக்கு நன்பர்காளா? அவர்கள் வந்து போகின்றவர்கள். அதாவது ஓடுகின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.
நாம் தினம் தினம் வசிக்கின்ற இடத்திலேயே எத்துணையோ பேர்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம், உரையாடிக் கொண்டிருக்கின்றோம், அவர்கள் அத்துனைபேரும் தெரிந்தவர்களாக, நண்பர்களாக இருகின்றார்கள், அவர்கள் அதே இடத்தில் நிலையானவர்கள், அதாவது தேங்கி கிடக்கின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.
ஓடுகின்ற தண்ணீர் ஒருபோதும் அழுக்காகுவது கிடையாது, அது சுத்தமாக இருக்கும். ஆனால் தேங்கி கிடக்கின்ற தண்ணீரோ அழுக்காகி விடும், கெட்டுவிடும், அதன் தன்மை அறிந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கணும். அந்த தண்ணீர் நமக்கு கட்டுப்படவில்லையா? அந்த தண்ணீரை விட்டு விலகி இருக்கணும், தள்ளி இருக்கணும்.
அதுபோலவேதான் இந்த ஜனங்களும். நம் மத்தியில் வந்து போகின்றவர்களுக்கும், நம் மத்தியில் நிலையாக இருக்கின்றவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. இந்த வித்தியாசத்தை ஜாடையில் அறிந்து நடந்து கொள்ளாதவன் சர்வ முட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக