வெள்ளி, 16 ஜூலை, 2021

 கேள்வி : ஒரு நண்பரினால் கொடுக்க பட்ட சிறந்த அறிவுரை என்ன?


என் பதில் :


தனியார் நிறுவனத்தில் வேலைக்காக interview இற்கு 23 வருடங்களுக்கு முன் சென்று இருந்தேன். என்னை போல வந்திருந்த பல நூறு நபர்களை வரிசையில் நிற்க வைத்து இருந்தார்கள்! பின் உள்ளே சென்று எழுத்து தேர்வு முடிய பின் result காக wait pannum போது கிடைத்த ஒரு நபரின் அறிமுகம். சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். 


பின்னர் அவரவர் தனியாக அழைத்து செல்லப்பட்டு interview முடிந்து பிரிந்து சென்று விட்டோம்! இருவரும் சம வயதுடையவர்கள்! பின்னர் முதல் நாள் பணியில் சேர்ந்த பின் அவரும் எனது குழுவில் இருந்தார்.


அவர் எனக்கு அறிவுரை ஏதும் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை பற்றி பேசுவோம். பணம், தொழில்நுட்பம், சுய முன்னேற்றம், மனிதர்களின் குணம், தொழில், உறவுகள், ஆடை என்று பேசாத topic இல்லை. 


இன்று என் வாழ்வில் பின்பற்றும் பல விசயங்களில் அந்த உரையாடல்களின் தாக்கம் இருக்கிறது. அந்த உரையாடல்கள் மட்டுமே வாழ்வில் எனக்கு தீங்கிழைத்தவர்களை இனங்கண்டு மற்றும் ஒதுக்க கற்று கொடுத்தது. அதுவே எனக்கு தேவையான ஊதியத்தை நான் பெற்றுக்கொள்ள வழி அமைத்து கொடுத்தது! பல பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் அறிவை கொடுத்தது. அநேக விஷயங்களில் நான் கொண்டிருந்த கண்ணோட்டத்தை மாற்றியது! பொறாமை அற்ற நல்ல உள்ளம் நண்பனாய் கிடைப்பது அரிது!


எங்கள் கேரக்டரில் பெரிய வித்தியாசம் உண்டு! இருவரின் மதமும் வெவ்வேறு, அவர் கமல்  ரசிகர். நான் ரஜினி  ரசிகன். இருவரின் பழக்கங்களும் வேறு. நாங்கள் பேசிய விசயங்களில் எனக்கு தேவையானவற்றை நான் எடுத்துகொண்டு எனது வழியில் பயணித்தேன். அவர் அவரது வழியில் பயணிக்கிறார்! இருந்தும் அந்த உரையாடல்கள் இன்றும் தொடர்கிறது. 


நான் செய்ய நினைக்கும் விசயங்களில் உள்ள தவறுகள் அறிவுரைகளால் அல்லாது கருத்துகளால் திருத்தப்படுகிறது! ஒரு நல்ல நண்பன் அறிவுரை சொல்லி திருத்துபவன் அல்ல என்பதை உணர்த்தியவன். அது போல என் குணத்தையும் மாற்றியவன்! மரணம் வரை தொடரும் எங்கள் நட்பு!

இனி வரும் காலம் கொரோன காலம் ..எத்தைகைய  நட்புகளையும் தூக்கி வீசும் ...

வாழ்க வளமுடன் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக