புதன், 21 ஜூலை, 2021

 கேள்வி :  வாழ்க்கையை ரசித்து வாழத் தெரியாதவர்கள் யார்?


என் பதில் 


15 வருடங்களுக்கு முன்னாள் நடந்தது ,எனக்கு தெரிந்த நல்ல மனிதர் அவர். பொறியாளர். வெளிநாட்டில்பணிசெய்துவிட்டு  வந்து சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் ஆரம்பித்தார்.


கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் முன்னேறியது. ஒரு நல்ல நிலைக்கு முன்னேறினார். ஆனாலும் தானே முன்னின்று எல்லா வேலையும் செய்தார். அவர் அலுவலகத்தை விரிவு படுத்தி பல நல்ல ஒப்பந்தங்களை கையக படுத்தினார். லாபம் பல மடங்கு வந்தது.


தன் லாபத்தில் கோவை மத்திய பகுதியில்   ஒரு நல்ல இடம் வாங்கி அதில் தங்குமிடம் கட்டினார். செம்ம வாடகை. மாத வருமானம் 1 லட்சம். பின்பு இங்கே வரும் மாத வருமானம் 5 லட்சம். ஆனாலும் மனிதர் பயங்கர வேலைக்காரர். ஓய்வு சுத்தமாக இல்லை.


என்னிடம் கடைசியாக பேசிய போது, வீடு கட்டி விட்டதாகவும், அதில் தற்போது தான் பாரின் சோபா வாங்கி போட்டிருக்கேன் என்றார்.


ஒருநாள் என்னிடம் வந்து தனக்கு தலை சுத்துவது போல் இருக்கிறது என்றார்.


BP 170/110


இது மிக அதிகம் என்று நான் கூறி, வாழ்க்கை முறையை மாற்றுவது உடனடியாக செய்ய வேண்டும் என்றேன். உங்களுக்கு ஒரு உதவியாளர் தேவை எனவும், உணவு மாற்றம் முதல் வாழ்க்கை மாற்றம் வரை கூறினேன். சரியாக கேட்கவில்லை. அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.


இப்போது அவர் இல்லை. திடீரென்று அட்டாக். வயது 46 தான். இவ்வளவு நாள் கடுமையாக உழைத்தது எல்லாம் எதற்காக? அந்த பாரின் சோபா யார் இப்போது உபயோகிக்கிறார்கள்?


வாழ்க்கையை நாளைக்கு நாளைக்கு என்று ஒத்தி போடுபவர்கள் தான், ரசிக்க வாய்ப்பு இருந்தும், வாழ தெரியாதவர்கள்.


இந்த அடிப்படையில் கூடுதல் நேரம் உழைப்பவர்கள், அலுவலகத்தை கட்டி கொண்டு அழுபவர்கள், பாவபட்ட ஜென்மங்கள். எல்லாவற்றையும் நாளைக்கு என்று ஒத்தி வைத்து வாழ்கிறார்கள்.


ஒரு நல்ல நிகழ்ச்சியோ, மகிழ்ச்சி தரும் சம்பவங்களோ, ஒரு மனதிற்கு இனிய நேரமோ, யாருக்கும் காத்திருப்பதில்லை. அது கடந்து சென்று கொண்டுதான் இருக்கும்.


நீங்கள் ரசிக்க உங்களின் குழந்தை, குழந்தையாகவே இருக்க போவதில்லை. 5 வயதுக்கு மேல், "நான் என் வேலையை செய்து கொள்வேன்' என சொல்லிவிடும்.


நீங்கள் ரசிக்க உங்கள் அன்புக்குரிய நண்பர்கள் எப்பொழுதும் உங்களுடனே இருக்க போவதில்லை. ஒரு நாள் அவருடன் தேநீர் குடிப்பதில் தவறு இல்லை.


நீங்கள் ரசிக்க உங்கள் சகோதரர் எப்பொழுதும் உங்கள் வீட்டிலேயே இருக்க போவதில்லை.


உங்கள் வீட்டுக்கு இராகம் பாட வரும் குயில், காகம் மறுபடியும் வருமா?


விட்டுப்போன எந்த நிகழ்வும் மறுபடி வராது.


வாழ்க்கையை ரசிக்க தெரியாதவர்கள், வாழ சரிவர நேரம் ஒதுக்காதவர்கள் தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே ..நன்றி ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக