இன்றைய ...சந்திப்பு ....மகிழ்ச்சி ...17.07.2021.
கொரோன காலம் ...சொந்தங்களை சந்திக்க இயலாதா இந்த வருடங்களில்
இன்று காலையில் இருந்தே ..உடுமலையில் அருமை சொந்தங்களை சந்தித்து பேசியது ..
முதலில் சந்தித்தது ..அக்ரி மல்லிகை மாப்பிள மல்லசீலன் -அருள் பாப்பா (புங்கமுத்தூர் )
வரலாற்று தகவல்களும் ,விவசாயம் சம்பந்தப்பட்ட தகவல்களை கலந்துரையாடல் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது .
கலந்துரையாடல் முடித்துவிட்டு கிளம்பும் பொழுதே அருமை மாப்பிள்ளை கேரளாவில் பணிபுரியும் கெமிஸ்டரி செந்தில்குமார் -கொடிங்கியம் ...
நண்பர்களுடன் வந்தபொழுது சிறு மணித்துளிகள் பேசிவிட்டு நகர்ந்தது கொஞ்சம் மனதிற்கு ஏமாற்றமே ...அரைமணித்துளி இருந்திருந்தால் ..வேலைவாய்ப்பு நம் சொந்தங்களுக்கு தகவல்களை பெற்று இருக்கலாம் ..
அலுவலகத்தில் கொஞ்சம் சந்தோஷத்தில் இருந்தபோதே ..கொடிங்கியம் சாலையூர் செங்கல் சூளை அதிபர் அண்ணன் அம்போதி அண்ணன் வந்துவிட்டார் ..அவரிடம் சில மணித்துளிகள் பேசியது மற்றட்ட மகிழ்ச்சி ..
மதியம் ஆகிவிட்டது மத்திய உணவிற்கு செல்லலாம் கிளம்பியபோது தனியார் துறையில் பொள்ளாச்சி காப்பீடு அதிகாரியாக பணியாற்றும் என் அருமை மாப்பிளை உப்பிலியனூர் பிரபாகர் ...காப்பீட்டு துறையில் தற்பொழுது என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளது என்று தகவல்களை அழகாக எடுத்துரைத்தார் ...
விடைபெறலாம் என்று கிளம்பும் பொழுது காப்பீட்டு துறை மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு ..வக்கீல் நாகராஜன் வீதியில் இருக்கும் ஜெய்வந்த் HP காஸ் உரிமையாளர் நம் சொந்தம் விஜயக்குமார் அவரிடம் அறிமுகப்படுத்திவிட்டு வியாபாரம் ,நிறுவனங்களுக்கு தற்பொழுது உள்ள காப்பீட்டு பயன்கள் என்னனென்று விரிவாக தகவல்களை பரிமாறினார் ..
பேசிகொண்டுருக்கும் பொழுதே சென்னையில் மென்பொறி பன்னாட்டு கம்பனியில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அருமை மாப்பிள்ளை ஸ்ரீனிவாசன் (வெனசப்பட்டி ) அவர்களிடம் அறிமுகப்படுத்திவிட்டு கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சந்தித்து சொந்தகளுடன் சந்தித்து பேசியது அருமை ..இன்றய நாள் இனிய நாள் ...
என்றும் அன்புடன்
உடுமலை சிவக்குமார்..VK

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக