புதன், 28 ஜூலை, 2021

கேள்வி :  நடுத்தர வர்க்கத்தினரால் மட்டுமே அனுபவிக்க முடிந்த எந்த விஷயத்தை, பணக்காரர்களால் அனுபவிக்க முடிவதில்லை ஏன் என்று கூறமுடியுமா ...


என் பதில்:


நடுத்தர வாழ்க்கையில் எதுவுமே எளிதில் கிடைக்காது எல்லாம் ஒரு போராட்டம் மற்றும் காத்திருப்பிக்கு பின்னர் தான் கிடைக்கும்.


சின்ன பயலாக இருக்கும்போது தீபாவளிக்கு முந்தின நாள் அப்பாவோட கடைக்கு சைக்கிள் ல போய் புதுத்துணி பட்டாசு எல்லாம் வாங்கி வெடிக்கிறது, சரம் வாங்கி கொடுத்தா உடனே வெடிச்சிட்டு புள்ள சும்மா நிக்கும்னு அப்பா tricks ah உதிரி வெடி வாங்கி கொடுத்து நாள் முழுக்க ஒவ்வொண்ணா வெடிக்க வைப்பார், தீபாவளி வர்றதுக்கு ஒரு மாசம் முன்னாடி இருந்தே மனசு காத்து கிடக்கும் எப்போ புதுத்துணி பட்டாசு எல்லாம் வாங்கி தருவாரு னு.


பேக்கரி பக்கம் கால் வெச்சது கூட இல்ல, அங்க விற்கும் இனிப்புகளின் பாதி பெயர் தெரியாது, அம்மா செஞ்சு தரும் கம்பு அடை, உளுந்தக்கஞ்சி, அதிரசம், முறுக்கு இது தான் ஸ்னாக்ஸ்  இதெல்லாம் செய்யும் போது அடுப்பை விட்டு நகரமா இருந்து சாப்பிடுற சந்தோசம் இருக்கே இதெல்லாம் மேல் வர்க்கத்திற்கு கிடைக்குமான்னு தெரியல


படிப்பறிவில்லாத அப்பா அம்மா, நாள் முழுக்க காட்டு மேட்டுல வேலை செஞ்சு என்ஜினியரிங் படிக்க வைக்கறதா ஒரு IAS ரேஞ்சுக்கு நினைப்பாங்க, மஞ்சள் கோட்டு போட்டு பட்டம் வாங்கும்போது, வானத்துல பறக்குற பட்டம் மாதிரி அவங்க மனசும் பறக்கும்


இப்படியெல்லாம் படிச்சு முடிச்சு வேலைக்கு போன அங்க எல்லாரும் ட்ரெண்டிங் ah இருப்பாங்க எல்லாமே பிராண்டட்  தான், கொஞ்ச நாளிலேயே மஞ்சப்பை அப்புறம் ஊர்நாட்டானு செல்லமாக கூப்பிடுவாங்க அதெல்லாம் கண்டுக்காம போய்டணும் இல்லனா ஊர்ல பொழைக்க வக்கில்லாம தான இங்க வரீங்க னு சொல்லுவாங்க(ஒரு சிலர்),எங்க கிராமத்துல சும்மா ஊர் சுத்தும்போது நமக்கு இருக்கவே இருக்கு கலர் வேட்டி பிளைன் கலர் சட்டை ,ஏதாச்சும் விஷேசம் னா வெள்ளை வேட்டி அது போதும் நமக்கு


Adidas ,Puma பெயர் வெச்ச எந்த துணியும் போட்டதில்ல (கம்பெனி சீருடை காலனி branded தான் அது இலவசம் எனவே கணக்கில் சேர்க்கவில்லை) சும்மா சொல்ல கூடாது இந்த branded t -shirt போடுற சந்தோசத்தைவிட சும்மா ஜம்முனு வேட்டி கட்டிக்கிட்டு loan போடாம சொந்த காசுல வாங்குன பல்சர் ல போற சந்தோசம் இருக்கே, EMI போட்டு வாங்கின ஆடி  கார் ல போன கூட அந்த சந்தோசம் இருக்காது


இந்த வருஷம் கல்வி கடன் பயிர் கடன் னு எல்லாத்தையும் முடிச்சிட்டு அம்மாவுக்கு ஒரு தங்க சங்கிலி வாங்கி தரணும் அதுக்கு வாய கட்டி வயித்த கட்டி சேர்த்து வெச்ச காசுல எல்லாத்தையும் காத்திருந்து காத்திருந்து முடிக்கும்போது ஒரு கிக் வரும் பாருங்க எளிதில் எல்லாம் கிடைக்கிறவங்களுக்கு அந்த கிக் வராது.


ஒரு சராசரி மனிதனுக்கு ரூபாய் 10000 கடன் வாங்கிட்டா அவன் கடன்காரன், அதே ஒரு நிறுவன முதலாளி 4 OD account அப்புறம் கிடைச்ச வங்கியில் எல்லாம் லோன் வாங்கின கூட அவர் பெயர் MD தான், இங்க எல்லாத்துக்கும் ஒரு பிம்பம் இருக்கு


மேல் வர்க்கமோ, நடுத்தர வர்க்கமோ இல்லை கீழ் வர்க்கமோ யார இருந்தாலும் பத்து பைசா கடன் இல்லாம, நல்லா உழைச்சி, நோய் நொடியில்லாம படுத்த உடனே நிம்மதியா தூங்குற மனிதன் தான் உண்மையான செல்வந்தன்


குறிக்கோளோடு பயணம் செய்யுற சுகமே தனி தான்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக