சனி, 24 ஜூலை, 2021

 கேள்வி : கடினமான காலம்... கஷ்டப்படாமல் கடந்துவரும் வழிகள் பற்றி கூற முடியுமா சார் ...?


என் பதில் : கொஞ்சம் நீண்ட பதிவு ...நேரம் இருக்கும் பொழுது படித்து பாருங்கள் ..அதற்கான புத்தகத்தை பற்றியும் இதில் கூறி இருக்கிறேன் ...📚📚✍️✍️✍️✍️


 உங்கள் பிரச்னைக்கான தீர்வுகள்


வாழ்க்கை என்பது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக் கின்றனர். ஆனால், நிஜத்தில் வாழ்க்கை என்பது கடினமான ஒன்று என்று நாம் எப்போது முழுமனதாக ஒப்புக்கொள்கிறோமோ அன்றைக்கு தான் நாம் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறோம். ஏனென்றால், அந்த மனநிலையை எட்டியவுடனேயே நாம் எதிர்கொள்ளும் எல்லா விதமான பிரச்னைகளும் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்பதை நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். அப்படிப் புரிந்துகொண்ட பின் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு காரியத்தில் இறங்குகிறோம். அதன் பிறகே, தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி முன்னேறப் பழகிக் கொள்கிறோம்” எனச் சொல்லி ஆரம்பிக்கிறார் ‘லீடிங் இன் டப் டைம்ஸ் (Leading in Tough Times)’ புத்தக ஆசிரியர். .


கஷ்டங்களே வாய்ப்புகள்...


“சிறந்த தலைவர்கள் (மேனேஜர்கள்) அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை களும் சவால்களுமே அவர்களுடைய தலைமைப் பண்பை உயர்த்திக் கொள்ள கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்ட வர்களாகவே இருக்கின்றனர். ஏனென்றால், நமக்கு கஷ்டங்களைத் தருகிற விஷயங்களே நம்முடைய கவனத்தை அதிகமாகப் பெறுகிற விஷயங்களாக இருக்கின்றன.


ஆனால், கஷ்டம் என்பது நீங்கள் தயாராக இல்லாதபோது மட்டுமே வரும். அப்படித் தயாராக இல்லாத சூழலிலும் உடனடியாகத் தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு அதனிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்பவர்கள் முன்னேறவும், கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேங்கி நிற்கவோ, தொலைந்து போகவும் செய்கின்றனர்.


இந்தவித தெளிவான கோணத்தில் கஷ்டத்தைப் பார்க்காமல், ‘என்னடா இது சூழ்நிலை நம்மை இப்படி கஷ்டப்படுத்துகிறதே’ என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்தால் அந்த நிமிடமே நாம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுவோம். நம்மில் பலரும் அந்தக் கோணத்தில் கஷ்டத்தைப் பார்க்கவே பழகியிருக்கிறோம். நமக்கு கஷ்டங்கள் வரும்போது நாம் எந்தவிதமான எதிர்வினைகளை ஆற்றுகிறோமோ, அதைப் பொறுத்தே கஷ்டங்கள் நம்முடைய வரலாற்றுக்கான கதையை எழுதுகின்றன. சாதாரண மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் களின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.


தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர்களே நிறுவனத்தைப் புதிய பல நிலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் முன்னால் நிற்கின்றனர். சிறந்த தலைவர்கள் எப்போதுமே கஷ்டங்களை வாய்ப்புகளாக மட்டுமே பார்ப்பார்கள். ஏனென்றால், தலைவர்களே நிறுவனத்தைத் தெரியாத புதிய பல இடங்களுக்குக் கொண்டு செல்வார்கள். தெரியாத இடங்களுக்குப் (புதிய உச்சங்கள்) பயணிக்கும் பாதை என்பது கஷ்டங்கள் நிறைந்ததாக இருப்பதற் கான வாய்ப்புகளே அதிகம். இந்த இடங்களை அடைய சாதாரணமாக அனைவரும் பயணிக்கும் பாதையில் பயணிக்கக் கூடாது. புதிய முயற்சி களையும், ரிஸ்க்குகளையும், இன்னோ வேஷன்களையும் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கஷ்டங்களைக் கொண்டு வருவதற் கான விஷயங்கள் தான் இல்லையா? இதனாலேயே தலைவர்கள் கஷ்டங்களை வாய்ப்புகளாகப் பார்க்கும் குணாதிசயத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர்..


வழிநடத்தும் தலைவன்...


கஷ்டகாலங்களில் எப்படி ஒரு தலைவனாக நீங்கள் உங்கள் உடன் பணிபுரிபவர்களை வழிநடத்த வேண்டும் என்று கேட்கிறீர்களா? மேனேஜ்மென்ட் குருவான பீட்டர் ட்ரக்கர், ‘கொந்தளிப்பும் குழப்பமும் நிறைந்த கஷ்டகாலங்கள் மிகவும் பயங்கர மானவை. ஏனென்றால், இது போன்ற காலங்களில் நம்மால் உள்ளது உள்ளபடி பார்க்க முடியாமல் போய்விடும்’ என்கிறார். இருக்கும் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போய் விடுவதால் தவறான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புகள் அதிகமாகிவிடுகிறது. இதில் நகைமுரண் என்னவென்றால், உங்களுடைய குழு நிஜமான சூழல் என்னவென்று தெரிந்தால் அதற்கேற்ப சுலபத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் குணாதிசயத்தை முழுமையாகக் கொண் டிருக்கும். ஆனால், அந்தக் குழுவால் நிஜத்தை தாங்களாகவே முழுமையாக உணர்ந்துகொள்ள முடியாது. எனவே, தலைவர்களே சூழ்நிலையின் நிதர்சனத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு குழுவுக்கு விளக்கமாகப் புரியும்படி சொல்ல வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.


தொலைநோக்குப் பார்வை...


“இன்றைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது எவ்வளவு தூரம் தலைவர்களுக்கு அவசியமோ, அதே அளவுக்கு எதிர்காலத்தில் எந்த மாதிரியான சூழ்நிலைகள் உருவாகும் என்பது குறித்த பெரிய அளவிலான தொலைநோக்கு பார்வையும் தலைவர் களுக்கு அவசியம் வேண்டும்.


கஷ்டகாலத்தில் குழுவின் அங்கத்தினர் களுக்கு அவர்கள் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்வதால் எதிர்காலத்தில் என்ன விதமான பலன்கள் நிறுவனத் துக்கும் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதையும் தெளிவுபடுத்தும் திறமை தலைவர்களுக்கு அவசியம் வேண்டும்.


கஷ்ட காலங்களில் எல்லா கேள்விகளுக்கும் விடை தலைவர்களிடம் இருக்காது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கு விடையே இல்லை என்பது இல்லை. விடை இருக்கும். ஆனால், அதைத் தெரிந்துகொள் வதற்கான முயற்சியில் அதிக நேரத்தையும் உழைப்பையும் அதிகமாக செலவிட வேண்டி யிருக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் திறனும் தகுதியும் தலைவர்களுக்கு வேண்டும். இதற்கான முயற்சியில் தலைவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரிய ஆரம்பித்து விட்டாலே அவரின் கீழே இருக்கும் குழு நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்துவிடும்.


தலைவருடன் இருக்கும் குழுவுக்கு ஏற்கெனவே சூழ்நிலையின் நிதர்சனத்தையும், எதிர்காலம் எவ்வாறு இருக்க வாய்ப்புள்ளது என்ற பெரிய அளவிலான தொலைநோக்குப் பார்வையையும் விளக்கிவிட்ட படியால், அவர்களையே என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்துத் திட்டமிடச் சொல்லலாம். இது அவர்களுக்கு சுலபமான விஷயமாக இருக்காது என்றபோதிலும், அதற்கான உதவிகளை தலைமைப் பணியில் இருப்பவர்கள் வழங்குவதன் மூலம் அவர்களையே அந்த வழிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லலாம்.


இந்தவித திட்டமிடுதலின் போது எதிர்காலத்தில் நாம் செல்ல நினைக்கும் இடத்துக்குப் பயணிப்பதற்காகப் பல பாதை களை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். அந்தப் பாதைகளில் அதிக வெற்றிக்கு வாய்ப்புள்ள பாதைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு தலைவராக நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால், ஒரு தலைவனாக நீங்கள் உருவெடுக்க இதுபோன்ற பல சூழ்நிலைகளையும் அந்தச் சூழ்நிலைகளில் பல பாதை களையும் நிச்சயமாய் எதிர் கொண்டிருப்பீர்கள். அவற்றில் சரியானவற்றை பலமுறை தேர்வு செய்த காரணத்தால்தான் நீங்கள் இன்றைக்கு தலைமைப் பதவியில் இருக்கிறீர்கள் இல்லையா? அதனாலேயேதான் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும் எனச் சொல்கிறேன்” என்கிறார் ஆசிரியர்.


டீம் வொர்க்கின் அவசியம்...


“எந்த அளவுக்கு கஷ்டமான சூழ்நிலைகள் நிறைந்துள்ளதோ அந்த அளவுக்கு அதை எதிர்கொள்ள டீம் வொர்க் என்பது மிக அதிக அளவில் தேவைப்படும். எல்லோரும் ஒருமனதாய் ஒருங்கிணைந்து பணிபுரியாவி ட்டால் எந்த ஒரு டீமும் அற்புதமான வெற்றிகளை அடைய முடியாது. எனவேதான், டீம் வொர்க்கை ஊக்குவிக்கும் பொறுப்பு கஷ்ட மான காலகட்டத் தில் தலைமைப் பதவியில் இருப்ப வர்களுக்கு அதிக மாக இருக்கிறது என்று சொல் கிறேன்” என்கிறார் ஆசிரியர்.


இறுதியாக, ஒரு தலைவனின் தலையாய பணி என்பது தன்னுடைய குழுவில் நம்பிக்கை என்பது எப்போதும் நிலைத்திருக்கும் வண்ணமும், எப்போதுமே அது வாடிப்போகாமல் துளிர்த்திருக்கும் வண்ணமும் செயல் படுவதே. என்னதான் மலையளவு கஷ்டத்தில் இன்றைக்கு நாம் இருந்தாலும், அந்தக் கஷ்டத்தால் நம்முள்ளே தோன்றும் அழுத்தம் நம்மைத் தளர்வடையச் செய்தாலும், நம்மை முழுமூச்சுடன் செயல்படவிடாமல் பல முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், நம்முடைய மனம் என்ன நடக்கப் போகிறதோ என்று அலைபாய்ந்து கொண்டிருந்தாலும் நம்மால் இந்தச் சூழ்நிலையை வெற்றிகர மாகக் கடந்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை துளிரைத் தொடர்ந்து வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


குழுவின் மன உறுதி என்பது நம்பிக்கை என்ற இந்த அடித்தளத்தில் இருந்தே உருவாகி செழித்து வளர்வது. மன உறுதியே கஷ்டகாலத்தில் அவர்களை நிலைநிறுத்தி செயல்படவைத்து இறுதியில் வெற்றியடையச் செய்வது. அதனாலேயேதான் நம்பிக்கை என்பது எப்போதும் குழுவின் மத்தியில் தழைத்திருக்கும்படி தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்கிறார் ஆசிரியர்.


சமகால சூழ்நிலையில் நம் அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் அறிவுரைகள் பலவற்றையும் ஆய்வுகள், உதாரணங்கள், மேற்கோள்கள் போன்ற வற்றின் மூலம் வெகு இலகுவான நடையில் சொல்கின்ற இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.


நன்றி .🙏.வாசிப்பை 📚..நேசிப்போம் ..🥰.நடைமுறை வாழக்கையுடன் ..🥰🙏🤝📚📚✍️✍️✍️.

சிவக்குமார் |||VK 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக