கேள்வி : ஜனாதிபதியே ஆனாலும் டாக்டர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவார், மக்கள் அனைவரும் வணங்கும் ஒரே நபர் டாக்டர் மட்டுமே என்ற பேச்சு உண்டு, +2 மாணவர்கள் மருத்துவம் படிக்க ஆசைபட காரணம் டாக்டர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதையா அல்லது பணமா?
என் பதில் :
டாக்டர் என்ற சொல்லுக்கு a person who holds highest degree அதாவது மெத்தப் படித்தவர்கள் என்று பொருள்..
எந்த துறையிலும் பிஎச்டி என்ற ஆய்வுப் படிப்பை படித்தால்.. அவர்கள் பெறுவது டாக்ட்டரேட் என்ற அந்தஸ்தை தான்..
அது வைத்தியம் பார்க்கும் மருத்துவ தொழில் மட்டுமே அல்ல.. பொறியியல் துறை வணிகம் கலைத்துறை போன்ற அனைத்து துறைகளிலும் உபயோகப்படும்.
இதை விட படிக்கவே இல்லை என்றால் கூட அரசியல்வாதிகள்…நடிகர்கள் தொழிலதிபர்கள்.. கவுரவ டாக்டர் பட்டம் பெற்று கொள்கின்றனர்..
அது மட்டும் அல்ல.. பத்து நாள் ஆன்லைன் க்ளாஸில் சான்றிதழ் வாங்கி வைத்து கொண்டு அக்குபஞ்சர்.. அக்கு ப்ரஷர்.. ரெய்கி.. ப்ராணிக் ஹீலர் என்போரும் டாக்டர் பட்டம் போட்டு கொள்கின்றனர்..
அதனால்.. இந்த பட்டம்.. தற்காலத்தில் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக கருத முடியாத நிலைமை தான் உள்ளது..
மருத்துவம் படிப்பது அவரவர் விருப்பம் மட்டுமே.. இந்தியா போன்ற நாடுகளில் மக்களின் வாழ்வியல் கஷ்டங்களை எவ்வளவு தூரம் தெரிந்து கொள்கிறாரோ அவர்களே மருத்துவர்களாக மக்கள் மத்தியில் வியாபித்து இருக்க முடியும்..
ஒரு மருத்துவர் சம்பாதிக்கும் பணம் என்பது மற்ற தொழிலில் உள்ளவர்கள் போல FIXED SALARY கிடையாது.. அவர் எவ்வளவு மணி நேரம் ப்ராக்டீஸ் செய்கிறார்களோ அவ்வளவு சம்பாதிக்க முடியும்.. அரசு வேலையில் வாங்கும் சம்பளம் போதவில்லை என்றால் வேலையை விட்டு விட்டு ப்ரைவேட் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வார்கள்.. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் எவ்வளவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் படித்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்க படும்..அதுவும் சீஃப் டாக்டர் அனுபவம் பெற்ற பிறகு தான் நல்ல சம்பளம் கிடைக்கும்…
எனது நண்பரின் குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக மருத்துவ தொழிலில் இருப்பதால் சொல்கிறேன்.. சர்க்கரை நோய் மருத்துவரான குடும்ப நண்பரின் தந்தையை கம்பேர் செய்யும் போது.. பாதி அளவு கூட சம்பாதிக்க தெரியாத அறுவை சிகிச்சை நிபுணரை.. தந்தையின் நண்பர்களை அறிவேன்..அவரவர் அமைத்து கொள்ளும் வேலை முறைகள் தான் காரணம்..
இந்த படிப்பை படிப்பதற்கு போதிய உழைப்பு தான் முக்கியமாக தேவை..
மற்ற படி.. மரியாதை எல்லாம் இன்றைய காலத்தில் யாரும் எதிர்பார்ப்பது இல்லை.. வேலையை மருத்துவ சட்டதிட்டங்களை மதித்து செய்ய வேண்டும்.. நோயாளிக்கு எது நன்மையோ அவற்றை.. நோயரின் சம்மதத்துடன் proper medico legal consent உடன் சிகிச்சை செய்வது மட்டுமே நல்லது..
பல இடங்களில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடக்கும் போது. நினைப்பதெல்லாம் நம்மால் இந்த மக்களை மாற்ற முடியாது .. நாம் செய்யும் சிகிச்சையை சட்டப்படி செய்து எங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான்…
நீட் தேர்வு எழுதப்போகும் குழந்தைச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் ..
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக