ஞாயிறு, 4 ஜூலை, 2021

இன்று மாலை ...🌷🌷🌷திருமண வரவேற்பு ...🌷🌷பொள்ளாச்சி

மலரும் நினைவுகள் ....

இன்று மாலை ...🌷🌷🌷திருமண வரவேற்பு ...🌷🌷பொள்ளாச்சி (ஜூலை 5..2018)
நம் கம்பளத்து வீட்டு கல்யாணம் ...கோவை சாலையின் வலதுபுறம் அமைந்த முருகன் கல்யாண அரங்கம் ...வரவேற்பு ..காஷ்மீர் பகுதியில் சென்றது போன்று அப்படியொரு ஜில்லென்ற மண்டபம் ...திருமண வீட்டார் ஜில்லென்ற மனம் போன்ற திருமண மேடை ..அழகான பசுமை மாற மனம் போன்ற திருமண தம்பதிகள் ..வாழ்க்கையில் முதல் அடியெடுத்து வைக்கும் நல் உள்ளங்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண
வாழ்த்துக்கள்
...மணமக்களை நம் கார்த்தி SR ..செந்தில் கெமிஸ்ட்டரி,தம்பி மனோஜுடன் ..எங்கள் வீட்டு செல்ல குழந்தை சாய் நந்தகிஷோருடனும் மேடையில் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு ...அழகான புகைப்படம் கேமராவின் கண்களில் காட்சி கொடுத்துவிட்டு ...சிறு மணித்துளிகள் சொந்தங்களுடன் மனம் விட்டு பேசிவிட்டு ...அப்படியே மண்டபம் கீழ் தளத்தில் ...தினம்தோறும் ..சாப்பாடு ,கொழம்பு ,ரசம் ,பொரியல் ...என்று எதிர்பார்த்து போனால் நாவிற்கு பிடித்த ..குஜராத்தி வீட்டு சமையல்(நாளை பெயர்கள் சொல்கிறேன் ) ...பெயர் வேற தெரியாமல் வயிற்றுக்கு உணவளித்து வெளிவந்தது ...மிக்க மகிழ்ச்சி ..நம் சொந்தங்களை விட ...ஏதோ குஜராத்தி ,ராஜஸ்தான் ...ராஜாக்கள் வீட்டு கல்யாணத்திற்கு சென்று வந்த உணர்வு ...நாளை காலையும் செல்லவேண்டும் ..இன்னும் இருக்கிறது சொல்வதற்கு ..நாளை சந்திப்போம் ..இது நம்ம வீட்டு கல்யாணம்...... 👍🌷🌷

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக