கேள்வி : ரூபாய் 20,000 மாத வருமானம் வைத்து கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசிப்பது போதுமானதா இருக்குமா சார் ?
என் பதில் :
எப்படி 20,000-இல் பட்ஜெட் போடலாம், வாழலாம் என்று கூறுகிறேன்.
முதலில் கோவையின் எந்தப் பகுதியில் நீங்கள் வசிக்கபோகிறீர்கள் என்பதைப் பொறுத்தே பட்ஜெட் முடிவெடுக்க முடியும்.
சாய்பாபாகாலனி, RS புரம், town hall, போன்ற நகர எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் வீட்டு வாடகை அதிகம். நீங்கள் வாடகைக்கு வீடு தேடும் பட்சத்தில் இந்த இடங்களில் குடும்பத்துடன் வசிக்க 1 BHK வீடு Rs. 8,000 முதல் Rs. 12,000 வரை இருக்கும். 1 BHK என்றாலும் வீடு 800 square feet மேல் இருந்தால் அதிசயம்.
அதுவே நகருக்கு சற்று வெளியே வடவள்ளி, தொண்டாமுத்தூர்,சரவணம்பட்டி , நரசிம்மநாயக்கன்பாளையம், குரும்பபாளையம்,வடக்குப்பகுதி என்றால் சிங்காநல்லூர் , போன்ற இடங்களில் 5,000 முதல் 8,000 வரை உள்ள வீடுகள் சற்றே பெரியதாக கிடைக்கும். அட்வான்ஸ்-உம் கம்மியாக கேட்கும் வாய்ப்பு உண்டு.
கிட்டத்தட்ட மேற்கூறிய இடங்கள் நகரத்தை விட்டு 10 முதல் 15 கிலோமீட்டர்கள் தான் இருக்கும்.
நீங்கள் வேலைக்கு போகும் இடம் நகரத்தில் இருந்தால் சுமாராக ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் போய் வர வேண்டி இருக்கும். உங்கள் இரு சக்கர வாகனம் 55 முதல் 60 கிலோமீட்டர் மைலேஜ் தருமாயின் 1 நாட்களுக்கு 103 ரூபாய் பெட்ரோல். மாதம் Rs. 3090.
வாடகை 5,000, பெட்ரோல் 3090.
உள்ளூர் மளிகைக் கடையில் பொருள் தினசரி தேவைக்காக மட்டும் வாங்கிக்கொண்டு, கொஞ்சம் பெரிய மளிகை செலவுகளை,காந்திபுரம் ,ஒப்பணக்கார வீதி , டவுன் ஹால் , ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் வாங்கினால் கொஞ்சம் சேமிக்கலாம்.
அங்கேயே உள்ள குமரன் மார்க்கெட், அல்லது சாய்பாபா காலனி காய்கறி மார்க்கெட், RS புரம் உழவர் சந்தை,ஞாயிறு வடவள்ளி வார சந்தை ,சரவணம்பட்டி வார சந்தை போன்ற இடங்களில் காய்கறி வாங்கினால் மொத்த விலையில் சற்று கம்மியாக கிடைக்கும். சில்லறை வியாபாரிகள் பலர் இந்த மார்க்கெட்களில் இருந்துதான் பொருட்கள் கொண்டு வருகின்றனர்.
4 பேர், இரண்டு பெரியவர் இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டிற்கு மளிகை 3,000 முதல் 5,000 வரை ஆகும். காய்கறி வாரம் Rs. 500 என்று கணக்கு போட்டால் மாதம் 2,000.
9,500 + 7,000 = 16,500
இதில் உங்கள் மொபைல் recharge, கேபிள் TV, கரென்ட் பில், gas சிலிண்டர், இன்டர்நெட் பில் 4,000 ரூபாய் ஆகும்.
16,500 + 4,000 = 20,500
இவையெல்லாம் தேவைக்கு ஏற்ப கூடவோ குறையவோ கணக்கு போட்டு பட்ஜெட் போடுங்கள்.
பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் சாதாரண தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு 15,000 முதல் 20,000 வரை இருக்கும்.
பெரிய தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக சேர்க்க முடியாது. அரசு பள்ளி அல்லது aided பள்ளியாக இருப்பின் இன்னும் செலவு கம்மி.
குறைந்தது 2,500 சேமியுங்கள். RD அல்லது MF-இல் பணத்தை சேமியுங்கள்.
மீதம் இருக்கும் பணம், போனஸ், இன்சென்டிவ் வந்தால் Prozone, Brookefields, Fun Mall போய் window ஷாப்பிங் செய்யுங்கள்.
இல்லையேல் இருக்கவே இருக்கு நம்ம வ. உ. சி பூங்காவில் பட்டாணி சுண்டல், மாங்காய், அவிச்ச கடலை, அப்படியே சாயங்காலம் மைதானத்தில் அமர்ந்து குடும்பத்தோடு பீப்பி, பலூன், சோப்பு bubbles வாங்கி சற்று நேரம் உட்கார்ந்தால் beach-இல் சுற்றிய effect தரும்.
மருதமலை, ஈச்சநாரி, பேரூர், புலியகுளம் church, ஈஷா யோக மய்யம், வெள்ளியங்கிரி, RS புரம் Mr. சோடா, கல்கத்தா chat, சாய்பாபா காலனி ரமேஷ் மெஸ், சாய்பாபா கோவில், Codissia Iskon, race course வாக்கிங், RS புரம் உழவர் சந்தை இட்லி வடை (காலையில் மட்டும்), அன்னபூர்ணா மசால் தோசை, சாம்பார் இட்லி, துடியலூர் ராவுத்தர் பிரியாணி, ஏரியாவுக்கு ஏரியா தள்ளுவண்டி கடை காளான், cauliflower, மசால் பூரி, சோழா ஹோட்டல் பரோட்டா….கொஞ்சம் காசு இருந்தால் புரூக் பீல்ட் ,பன் மால் ,
இன்னும் நெறய இருக்கு. நம்ம கோவைல.
கொஞ்சம் பார்த்து சூட்டிப்பா (நம்ம கோயம்புத்தூர் பாஷைங்கோவ்) இருங்க.
கடனில்லாத வாழ்க்கை என்று நம்பி யாம் எழுதினோம். கடன் இருப்பின் கோவை கொஞ்சம் காஸ்டலி தானுங்க.
விலைவாசி வெஸ்ட் இண்டீஸ் மார்ஷல் பௌன்சர் போல எகிருவதால் கொஞ்சம் சிக்கனத்தில் சிக்கி தவிப்பதை தவிர வேறு வழியில்லை.
ஆனலும் என்றும் நம்ம கொங்கு கோயமுத்தூர் எப்பொழுதும் அனைத்து நண்பர்களையும் ,சொந்தங்களையும் அரவனைத்து செல்லும் என் உயிர் மூச்சு நம்ம கோவையுங்க ...நன்றி ...
என்றும் அன்புடன் சிவக்குமார் VK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக