ஞாயிறு, 4 ஜூலை, 2021

கேள்வி : பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? எது செல்லுபடி ஆகும்?

 கேள்வி : பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? எது செல்லுபடி ஆகும்?


என் பதில் : 


பத்திரம் வைத்திருப்பது நீங்கள் தான் அந்த இடத்தின் உரிமையாளர் என்பதை தனிநபர் சாட்சியுடன் எழுதி தருவது. நமது பாதுகாப்பிற்க்காக வைத்திருக்கலாம். பட்டா இல்லாத சொத்துக்களில் மட்டுமே பத்திரத்துக்கு அதிகாரம் உண்டு. அதுவும் நீங்கள் சொத்து வாங்கும்போது அந்த சொத்தின் தாய் பத்திரத்தையும் சேர்த்துவாங்கணும். இல்லையென்றால் உங்கள் பத்திரம் செல்லாது.


பட்டா என்பது


நீங்கள் தான் அந்த இடத்தின் உரிமையாளர் என்று அரசு ஆவணங்களில் உள்ள குறிப்பு, பத்திரம் முக்கியம் தான் ஆனால் அதைவிட பட்டா தான் ரொம்ப முக்கியம், உங்களது இடத்தை வைத்து அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி வாங்குவதற்கு, கடன் வாங்குவதற்கு, அடமானம் வைப்பதற்க்கெல்லாம் பட்டா அவசியம். இல்லையென்ற அந்த சொத்துமதிப்பு குறைவாக காட்டப்படும்


எங்களது உறவினர் ஒரு 70 சென்ட் இடத்தை வாங்கினார், அதை விற்றவர் பட்டா இல்லாத இடமென்றுதான் விற்றார் அதற்கு பத்திரமும் எழுதி கொடுத்தார் . ஆனால் அதற்க்கு பட்டா இருக்கிறது இப்போது தான் எனது உறவினருக்கு தெரியும். இந்தமாதிரி சூழலில் அந்த இடத்தை நான் விற்கவேயில்லையென்று அந்த நபர் சொன்னால். என் உறவினருக்கு ஒன்றுமே செய்யமுடியாது.


பட்டா என்றால் என்ன? அதன் அவசியங்கள் 


பத்திரம் மட்டும் இருக்கும் நிலம் புறம்போக்கு நிலம் மாதிரி , அரசாங்கம் கையக படுத்தினால் ஒன்றும் செய்யமுடியாது. பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் இந்த மாதிரி  நிலங்களை நோக்கியே இருக்கும்


பட்டா இருக்கிற நிலம் சட்டப்பூர்வமான நிலம், அதை அரசாங்கம் கையக படுத்தினால் நஷ்டஈடு கொடுக்கும்

இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டும் இல்லாமல், சொத்து பரிமாற்றம் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக மாறியிருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சொத்துப் பரிமாற்றங்களை ஆவணப்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. விற்பவற்கும் வாங்குபவர்க்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, , அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி பத்திரப்பதிவு தொடர்பான பணிகளை முறைப்படுத்தி வருகின்றனது.


பட்டா என்றால் என்ன?

அவ்வாறு முறை படுத்தப்பட்ட, வருவாய் துறை நிருவகித்து வரும், நில உடைமை தகவல்களை பாதுகாக்கும் துறையில் இருந்து, ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளதென்று பெறப்படும் ஆவணத்தகவலே பட்டா. இத்தகவலானது பெரும்பாலும், “நிரந்தர நிலப் பதிவிலிருந்தும்’’ , “டவுன் சர்வே லேண்ட் பதிவேட்டிலிருந்தும்’’ பெறப்படும். பட்டாவில் பல வகைகள் உள்ளன, மேற்கூறப்பட்ட, ”நிரந்தர நிலப் பதிவிலிருந்தும்’’ , “டவுன் சர்வே லேண்ட் பதிவேட்டிலிருந்தும்’’ பெறப்படும் பட்டாவைப்பற்றியது இப்பதிவு.


ஏன் பட்டா ?

பட்டா – பெரும்பாலான சமயங்களில், சட்டப்பூர்வமான உடைமை என்பதை நிறுவ முக்கிய ஆவணமாக கருதப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, ஒருவரின் பெயரிலோ (தனிப்பட்டா) அல்லது சிலரின் பெயரிலோ (கூட்டுப்பட்டா) பட்டா வழங்குதல்/உள்ளது என்பது, அவர் அல்லது அவர்கள்  அந்த நிலத்தின் உரிமையாளர் என்பதை குறிக்கும். ஆனால், பட்டாவினை மட்டுமே கொண்டு ஒருவர் நிலத்தின் உரிமையாளர் என்று உறுதி செய்தல் தவறு.


யார் பட்டா வழங்குவது ?

அரசு, வழக்கமாக அரசு ஊழியர்களான தாஸில்தார்கள் மூலமாக பட்டா வழங்கும். சூழ்நிலைகளை பொறுத்து, மற்ற அரசு அதிகாரிகளும் பட்டா வழங்க அதிகாரம் அளிக்கப்படுகிறார்கள். உதாரணமாக சிலமாவடங்களில் VAO பட்டா வழங்க அதிகாரம் பெற்றுள்ளார்.


எந்த சொத்திற்க்கு பட்டா அவசியம் ?

உங்கள் சொத்தினில் நீங்கள் குடியிருப்பின், இடம் உங்கள் பாத்தியத்தில்  உள்ளது என்பதை உறுதி கூறலாம், இருப்பினும் மிகவும் அங்கீகரிகப்பட்ட முறை பட்டா வைத்திருப்பதே. காலி இடங்களாக இருப்பின், உங்கள் பாத்தியத்தை நிரூபிக்க இயலாது, ஆகையால் இடம் உங்கள் வசம் உள்ளது என்பதை உறுதி செய்ய பட்டா மிகவும் அவசியம் (வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கவனத்திற்கு). அணைத்து சொத்திற்கும் பட்டா வைத்திருப்பது இல்லையெனின் பெற்றுக்கொள்வது பாதுகாப்பான வழிமுறை.

நன்றி ...


Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக