கேள்வி : வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை திட்டும் போது எப்படி உணர்வீர்கள்?
என் பதில் :


நான் இருப்பது வீட்டு கடன் ..விற்பனைத்துறை .நிதி ஆலோசனை துறை யில் இருப்பதால் பொறுமை ..சகிப்புத்தன்மை ...மிக ..மிக முக்கியம் .


ஒருவர் அலுவலக வாழ்க்கையில் இவை அகந்தையை மற்றும் சுயகௌரவத்தை சோதிக்கும் நிகழ்வுகள். இதை நான் சிலமுறை சமாளித்து இருக்கிறேன்.
சில சந்தர்ப்பங்களில் உயர் அதிகாரிகள் மேலிடத்திலிருந்து வரும் அவசரத்தை கீழே உள்ளவர்கள் மேல் காண்பிப்பர். அப்போது அமைதியாக வேலையை செய்ய வேண்டும். எதிர் வார்த்தை பேசுவது நம் அமைதியை கெடுத்து விடும், வேலை இன்னும் தாமதமாகிவிடும். வேலையை குறித்த நேரத்தில் செய்து கொடுத்து அதை மேலதிகாரிக்கு அனுப்பிய பிறகு, அவர்கள் இரத்த அழுத்தம் இறங்கி அவர்களே வந்து நன்றி சொல்லியது உண்டு.
கவனக்குறைவு என்பது சில நேரங்களில் யாராலும் நேரலாம். அப்போது திட்டினால் அதை ஆண்டவன் பிரசாதமாக ஏற்று தொங்கிய முகத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
சில அதிகாரிகள் பிறர் முன்னிலையில் வேறு ஒருவர் தவறுக்காக சாடிவிடுவர். இங்கு அகந்தையும் சுயகௌரவமும் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விடும். இது மோதலில் முடிந்து விடலாம். எனக்கு இருமுறை ஏற்பட்டது. என் தவறு இல்லை என்றால் நான் அதை ஏற்கமாட்டேன். மாற்றலுக்கு விண்ணப்பித்து விட்டேன். என்னை எளிதில் இழக்க விரும்ப மாட்டார்கள். இரண்டு முறையும் விண்ணப்பம் குப்பை தொட்டியில். எனக்கு முன் வெள்ளை கொடி, தேநீர் கோப்பை!
இதெல்லாம் அவங்க அவங்க நேரம் காலத்தை பொறுத்தது. சிலசமயம் சிலருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டு விடும். சில அதிகாரிகள் அறையும் வாங்கியுள்ளனர். ஒன்று அவர் வாய் அடைத்து போகும், அல்லது பெரிய வழக்காகிவிடும்.இது எல்லாம் பொறுமை சகிப்பு தன்மை இல்லாததால் ..
அலுவலக அதிக வேலை பளுவின் காரணமாக வீட்டு வேலை செய்யாமல் மறந்து போய்விடும் ...ஹோம் மினிஸ்டர் கேட்டவுடன் தான் நினைவு வரும் ..அன்று தீபாவளி பட்டாசு சரமாரியாக ..பூமாரி பொழியும் ..ஆடாமல் அசையாமல் நின்றுகொள்ளவேண்டும் ..உங்களுக்கு கோபமே வராதா என்று கேள்வி கேட்பார்கள் ...எந்த இடத்திலும் கோபத்தை காட்டினால் இழப்பு நமக்கு தான் ..என்று வாழ்க்கை சூட்சமம் கற்றுக்கொண்டு உள்ளேன் ..இந்த 23 வருட விற்பனை பிரிவில் சாதிக்க முடிந்தது இந்த பொறுமை தான் ..
இப்பொழுதும் என்னை பிரிந்த என் அலுவலக நண்பர்கள் (உயர் பதவியில் தற்பொழுது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டு இருப்பவர்கள் )
நான் எந்த ஊருக்கும் சென்றாலும் முக நூலில் ..வாட்ஸாப்ப் ..ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு ..சார் நம்ம ஊருக்க பயணம் என்று சந்திக்க வந்துவிடுவது நான் சம்பாரித்த சொத்துக்கள் நண்பர்கள் ...அவர்களோடு அந்த நாளில் பேசுவதுஎனக்கும் ..அவர்களுக்கும் ஒரு டானிக் ...
நன்றி ...

சிவக்குமார்..V.K 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை
,பொள்ளாச்சி
,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681.
..WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக