புதன், 7 ஜூலை, 2021

 கேள்வி : தற்போது உள்ள நிலையில் முதலீடு பற்றிய சிறந்த 10 யோசனைகள் என்னென்ன என்று கூற முடியுமா  சிவா சார் ...?


என் பதில் : 


முதலீடுகளை இரண்டாக பிரிக்கலாம். ரிஸ்க் மற்றும் டீ-ரிஸ்க் என்று அவைகளை வைத்துக்கொள்ளலாம். அதாவது நிச்சயம் பணம் திரும்ப கிடைத்துவிடும் முதலீடுகள் மற்றும் சந்தை நிலவரம் பொறுத்து பணம் கிடைப்பது போன்ற முதலீடு.

1. பிக்சட் டெபாசிட் தான் இருப்பதிலேயே சிறந்த பாதுகாப்பான முதலீடு. நீங்கள் உங்கள் போனிலேயே இதனை செய்துகொள்ளலாம். ஆனால் வட்டி விகிதம் குறைவு. அதிலும் இந்த கொரோனா காலத்தில் மிகவும் குறைவு. 3 - 5% வரை மட்டுமே கிடைக்கிறது. வேண்டியபோது இதனை முடித்துக்கொள்ளலாம், நமது வசதிக்கு ஏற்ப

2. தங்கம் வாங்குதல். தங்கத்தை போன்று சிறந்த முதலீடு இல்லை. எப்போதும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டே உள்ளது. 5 வருடங்களுக்கு முன்னர் 1 கிராம் தங்கத்தின் விலை என்ன என்று யோசித்து பாருங்கள். விளங்கும். குன்றிய கால முதலீட்டை விட, நெடுங்கால முதலீட்டிற்கு தங்கம் சிறந்த முதலீடு.

3. நிலம். மனைகள் தான் என்றும் எப்போதும் சிறந்த முதலீடு. நமது முதலீடு நம் கண் முன்னேயே இருக்கும். பத்திரங்களை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். மனைகளும் காலத்திற்கு ஏற்ப, நகரமயக்களுக்கு ஏற்ப நல்ல விலை ஏற்றம் காணும்.

4. க்ரிப்டோ நாணயங்கள் - இவை இன்னும் இந்தியாவில் அந்த அளவுக்கு மக்களிடம் சென்று சேரவில்லை என்றாலும், அதிக முதிர்வு தொகை கிடைக்கும். அதே அளவுக்கு ரிஸ்க் அதிகம்.

5. காப்பீடு திட்டங்கள். பல வங்கிகள்,காப்பீடு நிறுவனங்கள் நல்ல திட்டங்கள் வைத்துள்ளன. அவை நல்ல முதிர்வு தொகை கொடுக்கின்றன. ஆனால் இவை நெடுங்கால முதலீட்டுக்கு தன ஏற்றது.

6. SIP எனப்படும் முதலீடு. சிறு சிறு தொகையை மாத மாதம் கட்ட, அவை சில பல வருடங்களில் நல்லதொரு முதிர்வு தொகை தரும். இது சந்தை நிலவரத்தை பொறுத்தது. ஆனாலும் mutual முதலீடு போல ஆபத்து குறைவு.

7. Mutual Fund - நேரடியாக நாம் இதில் முதலீடு செய்யும் போது நல்ல விகிதங்கள் திரும்ப கிடைக்கின்றது. ஆனால் சந்தை மதிப்பை பொறுத்தது. நல்லதொரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது, நல்லதை செய்யும்.

8. வர்த்தக முதலீடு - உங்களுக்கு வர்த்தகம் புரிந்தால் இதில் முதலீடு செய்து, நல்லதொரு சம்பாத்தியத்தை பெறலாம். ரிஸ்க் அதிகம் என்றாலும், சந்தையை பற்றி புரிந்து வைத்திருந்தால் நன்றாக சம்பாதிக்கலாம். ஷேர், கம்மோடிட்டி கரன்சி என்று எதிலும் சம்பாதிக்கலாம். இதை மட்டுமே தொழிலாக இருப்பவர்களும் உண்டு.

9. வாகனங்கள். இது முழுக்க முழுக்க சேவை வகையில் செய்யப்படும் முதலீடு. வாடகைக்கு ஓட்டி சம்பாதிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் உங்களால் போட்ட பணத்தை எடுக்க முடிந்தால், வாகனத்தின் அன்றைய மதிப்பு உங்களது லாபம். ஆனால் நிச்சயம் தேர்ந்த அறிவும் உழைப்பும் வேண்டும்.

10. தமிழ்நாடு மின்சார முதலீடு. இந்த முதலீட்டில் 8% வரை சம்பாதிக்க இயலும். வங்கியில் போடும் பிக்சட் டெபாசிட் போன்றதே இது. Tamilnadu Power finance என்று தேடிப்பாருங்கள்.

எனக்கு தெரிந்த சிலவற்றை கூறி உள்ளேன். இதற்கு மேலும் சிறந்த முதலீடுகள் இருக்கலாம். அவற்றை ஆராய்ந்து செயல்படுங்கள்.


நன்றி ..

சிவக்குமார்  VK 
Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,
Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com.....நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக