கேள்வி : மன நிலையை சிறப்பாக வைத்திருப்பதற்கான தந்திரங்கள் என்னென்ன?
என் பதில் :
இந்த கேள்விக்கான பதிவில் ஒருவர் கழுதை படத்தை வைத்து எழுதியிருந்தார்..கழுதையை பார்த்ததும் கேள்வியை பார்த்ததும் எங்கோ கேள்விப்பட்ட சில நல்ல கருத்துக்கள் எனக்கு தோன்றியது.
மனநிலையை சரியாக வைத்திருப்பதற்கான தந்திரங்கள் என்ன என்பதே கேள்வி…
அதற்கான ஒரு தந்திரத்தை நாம் கழுதையிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
அழுக்கு நிறைந்த துணிகளை, கழுதையின் முதுகில் ஏற்றிவிட்டு, துணிகளை துவைப்பதற்காக ஆற்றிற்கு அழைத்து செல்கிறான் முதலாளி.
கழுதையை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, துணிகளை எல்லாம் நன்றாக துவைத்துவிட்டு, மாலையில் சுத்தமான வெண்மையான துணியை கழுதையின் முதுகில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான் முதலாளி.
என்னடா திரும்ப திரும்ப, முதலாளி என்கிறானே என்று பார்க்கிறீர்களா?…கழுதைக்கு அதை மேய்ப்பன் தானே முதலாளி…
உங்களை யார் மேய்க்கிறார்…உங்களுக்கு யார் முதலாளி…என்பதை எல்லாம் நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்..! குறிப்பு: நான் யாரையும் கழுதைனு சொல்லலிங்கோ..!
இப்படி காலையில் அழுக்குத்துணிகளை தூக்கி வரும்போது கழுதை அழுக்குத் துணிகளை தூக்குகிறோமே என்று விரக்தியும் அடையவில்லை.
மாலையில் வெண்மையான சுத்தப்படுத்தப் பட்ட துணிகளையும் தூக்கி வரும்போது, குதூகலமும் அடையவில்லை..!
மனிதர்களான நாமும், கழுதையை போல கஷ்டமான பல சூழ்நிலைகளை வாழ்க்கையில் கடந்து வரும்போது நமது மனநிலையை மிகவும் விரக்தியாகவும் வைத்துக் கொள்ளக்கூடாது…
அதே பல வெற்றி கனிகளை சுவைக்கும் போதும், நமது மனநிலையை வானளவு உயர்த்தியும் வைத்துக்கொள்ளக்கூடாது…
கழுதையை போல வாழ்வில் கஷ்டம் வந்தாலும் மகிழ்ச்சி வந்தாலும், அதை சுமக்கப்போகிற கழுதை நாம் தான் என்று நம் மனநிலையை பக்குவமாக அடக்கி வைத்துக்கொள்வது சிறந்தது…!
நமக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எவரிடமும் எதிர்ப்பார்க்காமல் வாழலாம்.
எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாத வாழ்க்கையே எதார்த்தமான வாழ்க்கை..!
தற்பொழுது கழுதை அரிதான இனமாகவும் வெகுவிரைவாக அழிந்து வரும் இனமாகவும் உள்ளது ...
நன்றி.
இனிய நண்பர் சிவக்குமார்-க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக