கேள்வி : நம் மக்களிடம் உள்ள தவறான சிந்தனைகள் எவை என்று கூறமுடியுமா சார் ..?
பதில் :
இது உளவியல் ரீதியான மனோதத்துவ பதில்! கண்டிப்பாக இதில் அரசியல் கலக்க மாட்டேன். ஒரு பதில், Emotional Intelligence பற்றி எழுத ஆரம்பித்து, ஆரியம் திராவிடம் என்றெல்லாம் எழுதிவிட்டேன்.
ஒரு சகோதரி, என்னை திருத்தினார். நான் ஜாதி மதம் பற்றி எழுதுவது வெறுப்புக்கு அது காரணம், என்பதால்தான். ஆனால் இனி சகோதரி சொன்னது போல், இதுபோன்று பதில்களில் அரசியல் எழுதுவது என்பது, பாயசத்தில் கொத்தமல்லி கருவேப்பிலை போடுவது மாதிரி!
இனி ரசத்தில் மட்டும்தான் கொத்தமல்லி கருவேப்பிலை. இது பாயசம் ( பாய்சன் என்று படிக்காதீர்கள் ) போன்ற பதில்!
என் நண்பன் ஒருவனுக்கு வேலைவாய்ப்புக்கான அழைப்பு 2 இடங்களில் இருந்து வந்தது!
இன்று மிகப்பெரிய பணக்காரர் நடத்தும் கம்பெனி. பல கோடிகளுக்கு அதிபர்! இன்னொரு offer சாதாரண கம்பெனி, கொஞ்சம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி கம்பெனி நடத்தும் Mediacore மனிதர்!
நண்பனிடம் கேட்டேன், எங்கு சேரப் போகிறாய்?
நான் பணக்காரர் கம்பெனியில் சேரப் போகிறேன். அவரிடம் பணம் நிறைய இருப்பதால், எனக்கு பிற்காலத்தில் நிறைய கொடுப்பார்! உழைப்புக்கேற்ற ஊதியம், நானும் பணக்காரனாக முடியும்!
நான் நினைத்தேன், அவன் தவறாக முடிவு எடுக்கிறான் என்று! ஆனால் சொல்லவில்லை.
இது நடந்தது இரண்டு வருடங்கள் முன்பு.
இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவனை சந்தித்தபோது, என்னப்பா நல்ல சம்பளம் வாங்கி ஜாம் ஜாம்னு இருக்கியா?
நீ வேற!! கஞ்ச பிசினாரி, கருமி, அவனிடம் வேலை செய்தால், ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலைமை வந்துரும்! ஒரு வருடம் அவரிடம் வேலை பார்த்து, அடிப்பட்டு நான் இன்று சாதாரண கம்பெனியில் சேர்ந்துவிட்டேன்! இப்போது கொஞ்சம் பரவாயில்லை!
இது தான் நான் சொல்ல வருவது. ஒருவர் நமக்கு எவ்வளவு கொடுப்பார் என்று, நாம் அவர்களின் செல்வத்தைக் கொண்டு, அந்தஸ்தைக் கொண்டு மதிப்பிடுகிறோம்.
ஒரு மனிதன் கொடுப்பதும், வாழ வைப்பது அவனுடைய குணம் மற்றும் மனதைப் பொருத்தது. அவனிடம் இருக்கும் செல்வத்தை பொறுத்தில்லை!
எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், கொடுக்க மனம் இல்லாதவன், பத்து பைசா கூட கொடுக்க மாட்டான்.
நல்ல மனம் கொண்டவன், ஒரு ஏழை தான் சம்பாதிக்கும் 10 ரூபாயில், 1,2 ரூபாய் கொடுப்பான். ஆனால், பணக்காரர்கள், ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தாலும், ஒரு ரூபாய் கொடுப்பதற்கு யோசிப்பார்கள்.
நண்பன் அந்த பணக்காரன் இடம் கேட்டு விட்டான்!
எனக்கு கொடுக்க வேண்டிய ரூபாய மிச்சப்படுத்தி யா நீங்க, கோட்டை கட்டுவீங்க?
அந்தப் பணக்காரன் பதில் சொல்லியிருக்கிறான், இப்படிப் பத்துப் பத்து பைசாவை சேர்த்துதான், நான் இன்று கோடீஸ்வரனாகி இருக்கிறேன்!
அதாவது பலபேர் வயிற்றில் அடித்து, நான் பணம் சேர்த்திருக்கிறேன்.
அதற்காக நான் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
ஒரு Deal என்பது Mutually Beneficial, இரண்டு பக்கமும் லாபம் அடைவது போல் இருக்க வேண்டும்!
நம் நாட்டில், பணக்காரர்கள் ஏழைகள் வயிற்றில் அடித்து பணம் சேர்க்கிறார்கள்!
கடைசியில் மொத்தமாக, மருத்துவமனைகள், சீட்டு கம்பெனி அல்லது பெண்கள் என்று செலவு செய்து நட்டம் அடைகிறார்கள்!
சிறுக சிறுக சேர்த்து, மொத்தமாக வேறொரு இடத்தில் கோட்டை விடுவது!
பெண் கொடுக்கும் போதும் இதனை பார்த்திருக்கிறேன்.
மாப்பிள்ளை பெரிய இடம், மகாராணி மாதிரி வைத்துக் கொள்வார்!
மணமகன் பெரிய இடம் தான், அவர்தான் அதிகமாக வரதட்சிணைக் கேட்பார்கள்!
மாப்பிள்ளை பணக்காரன் என்றால், கட்டிய மனைவிக்கு நகையும் புடவையும் வாங்கிக் கொடுப்பான் என்று நிச்சயமில்லை!
கொடுக்க மனம் இல்லாதவன் கையில், எவ்வளவு பணம் இருந்தாலும், அது நாயிடம் இருக்கும் தேங்காய் மாதிரி!
பணத்தை யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். தன் மனைவியை விட, தன்னை சுற்றியுள்ள மனிதர்களை விட பணத்தை மிகவும் நேசிப்பார்கள்.
கடைசியில் பணத்தை எல்லாம் விட்டுவிட்டு செத்துப் போவார்கள்!
கடைசியாக ஒரு துணுக்குச் செய்தி : நீங்கள் நினைப்பது போல், சினிமாக்காரர்கள் யாருக்கும் வாரி வாரி கொடுத்தது இல்லை. ஆனால் கொடுப்பதுபோல் விளம்பரப் படுத்துவார்கள். ரசிகர்களும் அதை நம்பி ஏமாந்து போவார்கள்!
நான் பணியாற்றிய நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு கிரேன் ஆபரேட்டர் வந்தார்! இது நடந்து 15 வருடங்களுக்கும் மேலிருக்கும்.
முன்னாடி எங்க வேலை செஞ்சிட்டு இருந்தீங்க?
சார் நான்ஸி வீட்டில், கார் டிரைவராக வேலை செஞ்சேன்!
அப்பாடி! நல்ல சம்பாத்தியம், அள்ளி அள்ளிக் கொடுத்து இருப்பார்கள்.
நீங்க வேற, தீபாவளிக்கு போனஸ் கொடுங்கம்மா என்று கேட்டேன்!
எவ்வளவு கொடுத்தாங்க?
50 ரூபாய்! சினிமா நடிகர்களிடம் இனி வேலை செய்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்!
வேறு யாராவது வேலைக்கு கூப்பிட்டார்களா?
மணி வீட்டில் கார் டிரைவர் வேலை கிடைத்தது! ஆனால் நான் போகவில்லை.
ஏன்?
அரசியல்வாதிக்கு கார் டிரைவர்ராக இருப்பது கொடுமை!
ஏன் பணம் சரியாக கொடுக்க மாட்டார்களா?
இல்லை சார், போட்டு அடித்து விடுவார்கள்! மணி பற்றி எனக்கு தெரியும். சின்ன தப்பு செய்தாலும் அடிதான்!
இந்த உரையாடல் நடந்து பல வருடங்கள் கழித்து, பிச்சைக்காரன் என்ற ஒரு திரைப்படத்தில் நான் கேள்விப்பட்ட காட்சியை கண்கூடாக பார்த்தேன் !
நன்றி .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக