சனி, 31 ஜூலை, 2021

 கேள்வி : வாழ்க்கையை பற்றி இன்று நீங்கள் புதிதாக என்ன தெரிந்து கொண்டீர்கள்?


என் பதில் : 


நம்ம மைன்டை கடவுள் கிறுக்குத்தனமாக டிஸைன் பண்ணியிருக்கிறார்ன்னு நினைக்குறேன்.


நிறைய சந்தர்ப்பங்களில் நம்ம மைன்ட் யோசிக்கும். என்னடா வாழ்க்கை வாழறோம். நிம்மதியில்லை, சந்தோஷம் இல்லை. யார் யாரோ நல்லாயிருக்காங்க. எதுக்கு இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு, இறந்துட்டா நிம்மதியாயிருக்கும். இப்படி யாராவது பேசி நாம கேட்டிருப்போம். சில சமயத்துல நமக்கே இப்படியொரு யோசனை வரும்.


நமக்கு லைப்ல சின்ன சின்ன பிராப்ளம் வரும் போது அதை கையாள முடியாமல் இப்படி மைன்ட் நம்மை நெகட்டிவ்வாக யோசிக்க வைக்கும்.


ஆனா உண்மையிலேயே உயிர் போற சிச்சுவேஷன் நமக்கு வரும் போது நம்ம மைன்ட் பாசிட்டிவ்வாக யோசிக்கும். அதான் வேடிக்கை.


நான் வாழனும். வாழ்க்கையில் யாருக்கு தான் பிரச்சனையில்லை. என்னை விட எத்தனையோ பேர் மோசமான நிலையில் இருக்காங்க அவங்களாம் வாழ்க்கையில் போராடுறாங்க. எனக்கு என்ன குறைச்சல். இப்படி பாசிட்டிவ் எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கும்.


நம்ம வாழ்க்கையே முடிய போகுதோன்னு ஒரு நிலை வரும் போது தான் வாழுற வாழ்க்கையோட வேல்யூ தெரியும். இவ்வளவு நாள் எவ்வளவு அலட்சியமாக வாழ்க்கையை எடுத்துக்கிட்டோம்னு நினைச்சு வருத்தப்படுவோம். இன்னும் வாழ்க்கையை முழுமையாக வாழனும்னு தோணும்.


அதனால ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இது தான் வாழ்க்கையின் கடைசி நொடின்னு நினைச்சி வாழ்ந்தால், வாழ்க்கையை பாசிட்டிவாகவும், முழுமையாகவும் வாழலாம்.

நன்றி ...


https://youtu.be/W6zSO7kQZNI


புதன், 28 ஜூலை, 2021

கேள்வி :  நடுத்தர வர்க்கத்தினரால் மட்டுமே அனுபவிக்க முடிந்த எந்த விஷயத்தை, பணக்காரர்களால் அனுபவிக்க முடிவதில்லை ஏன் என்று கூறமுடியுமா ...


என் பதில்:


நடுத்தர வாழ்க்கையில் எதுவுமே எளிதில் கிடைக்காது எல்லாம் ஒரு போராட்டம் மற்றும் காத்திருப்பிக்கு பின்னர் தான் கிடைக்கும்.


சின்ன பயலாக இருக்கும்போது தீபாவளிக்கு முந்தின நாள் அப்பாவோட கடைக்கு சைக்கிள் ல போய் புதுத்துணி பட்டாசு எல்லாம் வாங்கி வெடிக்கிறது, சரம் வாங்கி கொடுத்தா உடனே வெடிச்சிட்டு புள்ள சும்மா நிக்கும்னு அப்பா tricks ah உதிரி வெடி வாங்கி கொடுத்து நாள் முழுக்க ஒவ்வொண்ணா வெடிக்க வைப்பார், தீபாவளி வர்றதுக்கு ஒரு மாசம் முன்னாடி இருந்தே மனசு காத்து கிடக்கும் எப்போ புதுத்துணி பட்டாசு எல்லாம் வாங்கி தருவாரு னு.


பேக்கரி பக்கம் கால் வெச்சது கூட இல்ல, அங்க விற்கும் இனிப்புகளின் பாதி பெயர் தெரியாது, அம்மா செஞ்சு தரும் கம்பு அடை, உளுந்தக்கஞ்சி, அதிரசம், முறுக்கு இது தான் ஸ்னாக்ஸ்  இதெல்லாம் செய்யும் போது அடுப்பை விட்டு நகரமா இருந்து சாப்பிடுற சந்தோசம் இருக்கே இதெல்லாம் மேல் வர்க்கத்திற்கு கிடைக்குமான்னு தெரியல


படிப்பறிவில்லாத அப்பா அம்மா, நாள் முழுக்க காட்டு மேட்டுல வேலை செஞ்சு என்ஜினியரிங் படிக்க வைக்கறதா ஒரு IAS ரேஞ்சுக்கு நினைப்பாங்க, மஞ்சள் கோட்டு போட்டு பட்டம் வாங்கும்போது, வானத்துல பறக்குற பட்டம் மாதிரி அவங்க மனசும் பறக்கும்


இப்படியெல்லாம் படிச்சு முடிச்சு வேலைக்கு போன அங்க எல்லாரும் ட்ரெண்டிங் ah இருப்பாங்க எல்லாமே பிராண்டட்  தான், கொஞ்ச நாளிலேயே மஞ்சப்பை அப்புறம் ஊர்நாட்டானு செல்லமாக கூப்பிடுவாங்க அதெல்லாம் கண்டுக்காம போய்டணும் இல்லனா ஊர்ல பொழைக்க வக்கில்லாம தான இங்க வரீங்க னு சொல்லுவாங்க(ஒரு சிலர்),எங்க கிராமத்துல சும்மா ஊர் சுத்தும்போது நமக்கு இருக்கவே இருக்கு கலர் வேட்டி பிளைன் கலர் சட்டை ,ஏதாச்சும் விஷேசம் னா வெள்ளை வேட்டி அது போதும் நமக்கு


Adidas ,Puma பெயர் வெச்ச எந்த துணியும் போட்டதில்ல (கம்பெனி சீருடை காலனி branded தான் அது இலவசம் எனவே கணக்கில் சேர்க்கவில்லை) சும்மா சொல்ல கூடாது இந்த branded t -shirt போடுற சந்தோசத்தைவிட சும்மா ஜம்முனு வேட்டி கட்டிக்கிட்டு loan போடாம சொந்த காசுல வாங்குன பல்சர் ல போற சந்தோசம் இருக்கே, EMI போட்டு வாங்கின ஆடி  கார் ல போன கூட அந்த சந்தோசம் இருக்காது


இந்த வருஷம் கல்வி கடன் பயிர் கடன் னு எல்லாத்தையும் முடிச்சிட்டு அம்மாவுக்கு ஒரு தங்க சங்கிலி வாங்கி தரணும் அதுக்கு வாய கட்டி வயித்த கட்டி சேர்த்து வெச்ச காசுல எல்லாத்தையும் காத்திருந்து காத்திருந்து முடிக்கும்போது ஒரு கிக் வரும் பாருங்க எளிதில் எல்லாம் கிடைக்கிறவங்களுக்கு அந்த கிக் வராது.


ஒரு சராசரி மனிதனுக்கு ரூபாய் 10000 கடன் வாங்கிட்டா அவன் கடன்காரன், அதே ஒரு நிறுவன முதலாளி 4 OD account அப்புறம் கிடைச்ச வங்கியில் எல்லாம் லோன் வாங்கின கூட அவர் பெயர் MD தான், இங்க எல்லாத்துக்கும் ஒரு பிம்பம் இருக்கு


மேல் வர்க்கமோ, நடுத்தர வர்க்கமோ இல்லை கீழ் வர்க்கமோ யார இருந்தாலும் பத்து பைசா கடன் இல்லாம, நல்லா உழைச்சி, நோய் நொடியில்லாம படுத்த உடனே நிம்மதியா தூங்குற மனிதன் தான் உண்மையான செல்வந்தன்


குறிக்கோளோடு பயணம் செய்யுற சுகமே தனி தான்....


செவ்வாய், 27 ஜூலை, 2021

 கேள்வி : பெண்கள் அணியும் ஆடை விற்பனை கடையைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். கோவையில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கொள்முதல் சந்தை விவரங்களை எனக்கு தெரியப்படுத்த முடியுமா?


என் பதில் : 



கோவை


டவுன் ஹால் பகுதியில் சிம்கோ நைட்டீஸ் என்கிற கடையில் தாங்கள் விரும்பும் ஆடை வகைகளை வாங்கலாம். அங்கு மொத்த விற்பனை கடை கடைசியில் மாடியில் உண்டு. முன்னர் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த பணத்துக்கு அவர்களே அனைத்து ஜவுளி வகைகளையும் நம் கடையில் இறக்கி விடுவார்கள். இப்போது எப்படியென்று தெரியவில்லை. விசாரித்துக் கொள்ளவும்.


உடுமலைப்பேட்டை 


உடுமலைபேட்டையில் ,மலையாண்டிபட்டினம்  அதன் சுற்றியுள்ள பகுதியில் பட்டுப்புடைவைகள் கைத்தறி கல்யாண பட்டுப்புடைவைகள் ..மொத்த விலையில் அதிகம் வாங்கலாம் ...


நெகமம் 

இந்த பகுதியிலும் ஏராளமான சுங்கடி பட்டுப்புடைவைகள் ஏராளமாக மொத்த விலையில் அள்ளலாம் ..


கொடுவாயூர்


(பாலக்காடு அருகில்) உக்கடத்திலிருந்து 65 கிமீ தூரத்தில் உள்ளது. மொத்த விலைக் கடைகள் உண்டு.


(கொஞ்சம் வித்தியாசமாய் 6பார்ட் பாவாடைக்கு 105cm உயரம் வைத்து தைத்து இருப்பார்கள்.)


ஈரோடு


அசோகபுரம் சிடி மார்க்கெட் (திங்கள் காலை 6 - 12மணி வரை மட்டுமே),


சென்டிரல் மார்க்கெட் (திங்கள் மாலை முதல் செவ்வாய் காலை வரை) என்ற இரண்டு பெரிய சந்தைகளும் மேலும் சில வளாகங்களும் உள்ளன.


திருப்பூர்


திருப்பூர் இரயில் நிலையம் அருகில் காதர்பேட்டை.( மிக கவனம் தேவை).


பெங்களூரு


இரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் சிக்பெட் எனும் மார்கெட் உள்ளது. பக்கத்தில் கே ஆர் மார்கெட், மாமுல்பேட் என்ற சந்தைகளும் உள்ளன. வாங்கும் முன் அந்த ஏரியா க்களிலும் சுற்றி பார்க்கவும்.ஜவுளி மட்டுமல்லாது எல்லா வகையான பொருட்களும் கிடைக்கின்றன. புரோக்கர் தொல்லை அதிகம்.


தங்கள் கடை அமைய இருக்கும் பகுதியில் வாடிக்கையாளர் விருப்பங்கள் அறிந்து கொண்டு வாங்கும் ஊரினை தேர்ந்தெடுக்கவும்.


கேரள மக்கள் அதிகம் இருப்பின் அவர்கள் ரசனைக்கேற்ப கொடுவாயூர் செல்லவும்.


நவீன வகை (modern trends) எனில் பெங்களூரு.


எங்கு சென்றாலும் நன்கு விசாரித்து( குறைந்தது 10 கடைகள் - விலை/தரம்) பொருட்கள் தெரிவு செய்யவும்.


வெற்றி நமதே.


வாழ்க நலமுடன்.


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681....


 


கேள்வி : நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்..? 


என் பதில் :..📚📚✍️✍️✍️👍👍🏡🏡🏡🏡🏡

நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக

மக்களுக்கு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின்கீழ் வருகிற து என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.

நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்ப து மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப் படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk ), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக் கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பரா மரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை

2. வருவாய்த்துறை

1. பதிவுத்துறை :

நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நீங்கள் வாங்கவிருக்கும் நிலம், விற்பவரின் அனுபவத்தில் இருக்கும் போது அந்த நிலதின் உரிமை யாளர் யார்? எத்தனை பேர் மற்றும் அந்த நிலம் அட மானத்தில் உள்ளதா? அல்லது அந்த நிலத்தின் மீது வழக்கு எதாவது நடந்து வுருகிறதா?  என்பன போன்ற கேள்விகளுக்கு பத்திர பதிவு அலுவலகத்தில் வில்ல ங்க சான்று (EC-Encumbrance Certificate) கேட்டு மனு செய்து அதில் வில்லங்கங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்

2. வருவாய்த்துறை :

இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க் கண்ட பதிவேட்டில் இருக்கும்.

பட்டா (Patta)

சிட்டா (Chitta)

அடங்கல் (Adangal)

அ’ பதிவேடு (‘A’ Register)

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா (Patta) :

நிலத்தின் உரிமை, நமக்குத்தான் இருக்கிறது என்பதற் கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை, யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-

1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்

2. பட்டா எண்

3. உரிமையாளர் பெயர்

4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Sub division)

5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா

6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட் டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன் பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணு க்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவர ங்கள் இதில் இருக்கும்.

அ’ பதிவேடு (‘A’ Register) :

இப்பதிவேட்டில் . . .

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)

2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),

3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,

4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,

5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,போன்ற விவரங்க ள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :

நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிற து .

கிரையப் பத்திரம் (Sale Deed) :

சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்த க் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரை யப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி

2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி

3. எவ்வளவு அளவு

4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது

5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட் டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

கிரையப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவா ளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவர ங்கள் இருக்கும்.

1. பதிவு எண் மற்றும் வருடம்

2.சொத்து எழுதிக்கொடுப்பவரின்புகைப்படம், கைரே கை, கையெழுத்து, முகவரி

3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்

5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம், சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை

6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி

7. மொத்தம் எத்தனை பக்கங்கள்

8. மொத்தம் எத்தனை தாள்கள்

9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

ஆவணங்கள்:

01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்ப வர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டு ம்முறை அரசால்நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவ ரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங் கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப் படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால்போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால்  குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொ ரு தாளின் பின்புறமும் இந்தக்கிரயப்பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவா ளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந் து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அத னால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யும்போது பதிவி ன் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக் கப்பட்டிருக்கும்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமா க கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரா ர்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட் ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறு த்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ண யம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .

நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதி வாளர்அலுவலகத்தில் தாக்கல்செய்யவேண்டும்.முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியா த நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதி ப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்ப திவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலு வலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்ய ப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமா கவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப்செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார் பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய் வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரி ன் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைக ளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப் பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவ ரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின் புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முக வரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்பட ங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண் டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத் தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீ தைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவ து சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத் திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ண யிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப் பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத் தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செ ய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடு வார்.மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்(Collectoroffice ) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வை யிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடி வு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகை யில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர் ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதி ப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பண மாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத் திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத் தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

சில முக்கிய குறிப்புகள்:-

1.முதலில் நீங்கள் வாங்கவேண்டிய சொத்தில் ஏதாவ து வில்லங்கம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள் ளவேண்டும். இதற்கு, நீங்கள் வாங்கஇருக்கும் இடத்தி ற்கான பத்திரத்தின் ஒரு நகலை எடுத்து சம்மந்தப்பட் ட சர் பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான கட்டணத் தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

2. மிக முக்கியமான விஷயம்: முன்பணம் (அட்வான் ஸ்) மிகக்குறைந்த அதாவது 5000 முதல் 10000 வரை மட்டுமே முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒரு வே லை அதிகமாக முன்பணம் செலுத்த வேண்டி வந்தால் செக் அல்லது டிடி கொடுப்பத்டு சால சிறந்தது. உடன் விற்பனை உடன்படிக்கையையும் பெற்றுகொள்வது முக்கியம்.

3 .சொத்தை பதிவு செய்யும் பொழுது மட்டுமே முழு தொகையையும் கொடுக்க வேண்டும். அதுவும் செக் அல்லது டிடி கொடுப்பது உசிதம்.

4 .பதிவு செய்யும் முதல் நாள் கூட வில்லங்கம் எடுத்து பார்ப்பது நல்லது.

5 .சொத்தை வாங்கி பிறகு பட்டா மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. பட்டா உங்கள் பெயரில் இரு ந்தால் வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ வேறு பிரச்சனைகளோ வருவதற்கு வாப்பு கிடையாது.


நன்றி ...

சிவக்குமார் VK 

நிதி ஆலோசகர் -தேசியமாக்கப்பட்ட வங்கிகள் ,தனியார் நிதி நிறுவனங்கள் -வீட்டுக்கடன் .

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Land Loan...Construction Loan...Purchase Loan...Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.

சிவக்குமார்..V..K....... வீட்டு கடன் பிரிவு இடம் வாங்க ...வீடு கட்ட ...கட்டியவீடு வாங்க ..நிதி ஆலோசகர் -தேசியமாக்கப்பட்ட வங்கிகள் ,தனியார் நிதி நிறுவனங்கள் -வீட்டுக்கடன்   

உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681Email:siva19732001@gmail.com📚📚✍️✍️👍👍👍🏡🏡

திங்கள், 26 ஜூலை, 2021

 கேள்வி : வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை திட்டும் போது எப்படி உணர்வீர்கள்?

என் பதில் :🏡📚📚✍️ நான் இருப்பது வீட்டு கடன் ..விற்பனைத்துறை .நிதி ஆலோசனை துறை யில் இருப்பதால் பொறுமை ..சகிப்புத்தன்மை ...மிக ..மிக முக்கியம் .🥰🏡🏡
ஒருவர் அலுவலக வாழ்க்கையில் இவை அகந்தையை மற்றும் சுயகௌரவத்தை சோதிக்கும் நிகழ்வுகள். இதை நான் சிலமுறை சமாளித்து இருக்கிறேன்.
சில சந்தர்ப்பங்களில் உயர் அதிகாரிகள் மேலிடத்திலிருந்து வரும் அவசரத்தை கீழே உள்ளவர்கள் மேல் காண்பிப்பர். அப்போது அமைதியாக வேலையை செய்ய வேண்டும். எதிர் வார்த்தை பேசுவது நம் அமைதியை கெடுத்து விடும், வேலை இன்னும் தாமதமாகிவிடும். வேலையை குறித்த நேரத்தில் செய்து கொடுத்து அதை மேலதிகாரிக்கு அனுப்பிய பிறகு, அவர்கள் இரத்த அழுத்தம் இறங்கி அவர்களே வந்து நன்றி சொல்லியது உண்டு.
கவனக்குறைவு என்பது சில நேரங்களில் யாராலும் நேரலாம். அப்போது திட்டினால் அதை ஆண்டவன் பிரசாதமாக ஏற்று தொங்கிய முகத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
சில அதிகாரிகள் பிறர் முன்னிலையில் வேறு ஒருவர் தவறுக்காக சாடிவிடுவர். இங்கு அகந்தையும் சுயகௌரவமும் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விடும். இது மோதலில் முடிந்து விடலாம். எனக்கு இருமுறை ஏற்பட்டது. என் தவறு இல்லை என்றால் நான் அதை ஏற்கமாட்டேன். மாற்றலுக்கு விண்ணப்பித்து விட்டேன். என்னை எளிதில் இழக்க விரும்ப மாட்டார்கள். இரண்டு முறையும் விண்ணப்பம் குப்பை தொட்டியில். எனக்கு முன் வெள்ளை கொடி, தேநீர் கோப்பை!😊
இதெல்லாம் அவங்க அவங்க நேரம் காலத்தை பொறுத்தது. சிலசமயம் சிலருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டு விடும். சில அதிகாரிகள் அறையும் வாங்கியுள்ளனர். ஒன்று அவர் வாய் அடைத்து போகும், அல்லது பெரிய வழக்காகிவிடும்.இது எல்லாம் பொறுமை சகிப்பு தன்மை இல்லாததால் ..
அலுவலக அதிக வேலை பளுவின் காரணமாக வீட்டு வேலை செய்யாமல் மறந்து போய்விடும் ...ஹோம் மினிஸ்டர் கேட்டவுடன் தான் நினைவு வரும் ..அன்று தீபாவளி பட்டாசு சரமாரியாக ..பூமாரி பொழியும் ..ஆடாமல் அசையாமல் நின்றுகொள்ளவேண்டும் ..உங்களுக்கு கோபமே வராதா என்று கேள்வி கேட்பார்கள் ...எந்த இடத்திலும் கோபத்தை காட்டினால் இழப்பு நமக்கு தான் ..என்று வாழ்க்கை சூட்சமம் கற்றுக்கொண்டு உள்ளேன் ..இந்த 23 வருட விற்பனை பிரிவில் சாதிக்க முடிந்தது இந்த பொறுமை தான் ..
இப்பொழுதும் என்னை பிரிந்த என் அலுவலக நண்பர்கள் (உயர் பதவியில் தற்பொழுது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டு இருப்பவர்கள் )
நான் எந்த ஊருக்கும் சென்றாலும் முக நூலில் ..வாட்ஸாப்ப் ..ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு ..சார் நம்ம ஊருக்க பயணம் என்று சந்திக்க வந்துவிடுவது நான் சம்பாரித்த சொத்துக்கள் நண்பர்கள் ...அவர்களோடு அந்த நாளில் பேசுவதுஎனக்கும் ..அவர்களுக்கும் ஒரு டானிக் ...
நன்றி ...🏡🙏
சிவக்குமார்..V.K 🏡
வீட்டு கடன் பிரிவு 🏡
உடுமலைப்பேட்டை🌱 ,பொள்ளாச்சி🌱,கோயம்பத்தூர் 🌳
அழைப்பு எண் :9944066681.🥰..WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com👍🏡

ஞாயிறு, 25 ஜூலை, 2021

 கேள்வி : ரூபாய் 20,000 மாத வருமானம் வைத்து கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசிப்பது  போதுமானதா இருக்குமா சார் ?


என் பதில் : 


 எப்படி 20,000-இல் பட்ஜெட் போடலாம், வாழலாம் என்று கூறுகிறேன்.


முதலில் கோவையின் எந்தப் பகுதியில் நீங்கள் வசிக்கபோகிறீர்கள் என்பதைப் பொறுத்தே பட்ஜெட் முடிவெடுக்க முடியும்.


சாய்பாபாகாலனி, RS புரம், town hall, போன்ற நகர எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் வீட்டு வாடகை அதிகம். நீங்கள் வாடகைக்கு வீடு தேடும் பட்சத்தில் இந்த இடங்களில் குடும்பத்துடன் வசிக்க 1 BHK வீடு Rs. 8,000 முதல் Rs. 12,000 வரை இருக்கும். 1 BHK என்றாலும் வீடு 800 square feet மேல் இருந்தால் அதிசயம்.


அதுவே நகருக்கு சற்று வெளியே வடவள்ளி, தொண்டாமுத்தூர்,சரவணம்பட்டி , நரசிம்மநாயக்கன்பாளையம், குரும்பபாளையம்,வடக்குப்பகுதி என்றால் சிங்காநல்லூர் , போன்ற இடங்களில் 5,000 முதல் 8,000 வரை உள்ள வீடுகள் சற்றே பெரியதாக கிடைக்கும். அட்வான்ஸ்-உம் கம்மியாக கேட்கும் வாய்ப்பு உண்டு.


கிட்டத்தட்ட மேற்கூறிய இடங்கள் நகரத்தை விட்டு 10 முதல் 15 கிலோமீட்டர்கள் தான் இருக்கும்.


நீங்கள் வேலைக்கு போகும் இடம் நகரத்தில் இருந்தால் சுமாராக ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் போய் வர வேண்டி இருக்கும். உங்கள் இரு சக்கர வாகனம் 55 முதல் 60 கிலோமீட்டர் மைலேஜ் தருமாயின் 1 நாட்களுக்கு 103 ரூபாய் பெட்ரோல். மாதம் Rs. 3090.


வாடகை 5,000, பெட்ரோல் 3090.


உள்ளூர் மளிகைக் கடையில் பொருள் தினசரி தேவைக்காக மட்டும் வாங்கிக்கொண்டு, கொஞ்சம் பெரிய மளிகை செலவுகளை,காந்திபுரம் ,ஒப்பணக்கார வீதி , டவுன் ஹால் , ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் வாங்கினால் கொஞ்சம் சேமிக்கலாம்.


அங்கேயே உள்ள குமரன் மார்க்கெட், அல்லது சாய்பாபா காலனி காய்கறி மார்க்கெட், RS புரம் உழவர் சந்தை,ஞாயிறு வடவள்ளி வார சந்தை ,சரவணம்பட்டி வார சந்தை  போன்ற இடங்களில் காய்கறி வாங்கினால் மொத்த விலையில் சற்று கம்மியாக கிடைக்கும். சில்லறை வியாபாரிகள் பலர் இந்த மார்க்கெட்களில் இருந்துதான் பொருட்கள் கொண்டு வருகின்றனர்.


4 பேர், இரண்டு பெரியவர் இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டிற்கு மளிகை 3,000 முதல் 5,000 வரை ஆகும். காய்கறி வாரம் Rs. 500 என்று கணக்கு போட்டால் மாதம் 2,000.


9,500 + 7,000 = 16,500


இதில் உங்கள் மொபைல் recharge, கேபிள் TV, கரென்ட் பில், gas சிலிண்டர், இன்டர்நெட் பில் 4,000 ரூபாய் ஆகும்.


16,500 + 4,000 = 20,500


இவையெல்லாம் தேவைக்கு ஏற்ப கூடவோ குறையவோ கணக்கு போட்டு பட்ஜெட் போடுங்கள்.


பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் சாதாரண தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு 15,000 முதல் 20,000 வரை இருக்கும்.


பெரிய தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக சேர்க்க முடியாது. அரசு பள்ளி அல்லது aided பள்ளியாக இருப்பின் இன்னும் செலவு கம்மி.


குறைந்தது 2,500 சேமியுங்கள். RD அல்லது MF-இல் பணத்தை சேமியுங்கள்.


மீதம் இருக்கும் பணம், போனஸ், இன்சென்டிவ் வந்தால் Prozone, Brookefields, Fun Mall போய் window ஷாப்பிங் செய்யுங்கள்.


இல்லையேல் இருக்கவே இருக்கு நம்ம வ. உ. சி பூங்காவில் பட்டாணி சுண்டல், மாங்காய், அவிச்ச கடலை, அப்படியே சாயங்காலம் மைதானத்தில் அமர்ந்து குடும்பத்தோடு பீப்பி, பலூன், சோப்பு bubbles வாங்கி சற்று நேரம் உட்கார்ந்தால் beach-இல் சுற்றிய effect தரும்.


மருதமலை, ஈச்சநாரி, பேரூர், புலியகுளம் church, ஈஷா யோக மய்யம், வெள்ளியங்கிரி, RS புரம் Mr. சோடா, கல்கத்தா chat, சாய்பாபா காலனி ரமேஷ் மெஸ், சாய்பாபா கோவில், Codissia Iskon, race course வாக்கிங், RS புரம் உழவர் சந்தை இட்லி வடை (காலையில் மட்டும்), அன்னபூர்ணா மசால் தோசை, சாம்பார் இட்லி, துடியலூர் ராவுத்தர் பிரியாணி, ஏரியாவுக்கு ஏரியா தள்ளுவண்டி கடை காளான், cauliflower, மசால் பூரி, சோழா ஹோட்டல் பரோட்டா….கொஞ்சம் காசு இருந்தால் புரூக் பீல்ட் ,பன் மால் ,


இன்னும் நெறய இருக்கு. நம்ம கோவைல.


கொஞ்சம் பார்த்து சூட்டிப்பா (நம்ம கோயம்புத்தூர் பாஷைங்கோவ்) இருங்க.


கடனில்லாத வாழ்க்கை என்று நம்பி யாம் எழுதினோம். கடன் இருப்பின் கோவை கொஞ்சம் காஸ்டலி தானுங்க.


விலைவாசி வெஸ்ட் இண்டீஸ் மார்ஷல்  பௌன்சர் போல எகிருவதால் கொஞ்சம் சிக்கனத்தில் சிக்கி தவிப்பதை தவிர வேறு வழியில்லை.


ஆனலும் என்றும் நம்ம கொங்கு கோயமுத்தூர் எப்பொழுதும் அனைத்து நண்பர்களையும் ,சொந்தங்களையும் அரவனைத்து செல்லும் என் உயிர் மூச்சு  நம்ம கோவையுங்க ...நன்றி ...


என்றும் அன்புடன் சிவக்குமார் VK 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சனி, 24 ஜூலை, 2021

 கேள்வி : கடினமான காலம்... கஷ்டப்படாமல் கடந்துவரும் வழிகள் பற்றி கூற முடியுமா சார் ...?


என் பதில் : கொஞ்சம் நீண்ட பதிவு ...நேரம் இருக்கும் பொழுது படித்து பாருங்கள் ..அதற்கான புத்தகத்தை பற்றியும் இதில் கூறி இருக்கிறேன் ...📚📚✍️✍️✍️✍️


 உங்கள் பிரச்னைக்கான தீர்வுகள்


வாழ்க்கை என்பது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக் கின்றனர். ஆனால், நிஜத்தில் வாழ்க்கை என்பது கடினமான ஒன்று என்று நாம் எப்போது முழுமனதாக ஒப்புக்கொள்கிறோமோ அன்றைக்கு தான் நாம் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறோம். ஏனென்றால், அந்த மனநிலையை எட்டியவுடனேயே நாம் எதிர்கொள்ளும் எல்லா விதமான பிரச்னைகளும் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்பதை நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். அப்படிப் புரிந்துகொண்ட பின் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு காரியத்தில் இறங்குகிறோம். அதன் பிறகே, தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி முன்னேறப் பழகிக் கொள்கிறோம்” எனச் சொல்லி ஆரம்பிக்கிறார் ‘லீடிங் இன் டப் டைம்ஸ் (Leading in Tough Times)’ புத்தக ஆசிரியர். .


கஷ்டங்களே வாய்ப்புகள்...


“சிறந்த தலைவர்கள் (மேனேஜர்கள்) அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை களும் சவால்களுமே அவர்களுடைய தலைமைப் பண்பை உயர்த்திக் கொள்ள கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்ட வர்களாகவே இருக்கின்றனர். ஏனென்றால், நமக்கு கஷ்டங்களைத் தருகிற விஷயங்களே நம்முடைய கவனத்தை அதிகமாகப் பெறுகிற விஷயங்களாக இருக்கின்றன.


ஆனால், கஷ்டம் என்பது நீங்கள் தயாராக இல்லாதபோது மட்டுமே வரும். அப்படித் தயாராக இல்லாத சூழலிலும் உடனடியாகத் தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு அதனிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்பவர்கள் முன்னேறவும், கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேங்கி நிற்கவோ, தொலைந்து போகவும் செய்கின்றனர்.


இந்தவித தெளிவான கோணத்தில் கஷ்டத்தைப் பார்க்காமல், ‘என்னடா இது சூழ்நிலை நம்மை இப்படி கஷ்டப்படுத்துகிறதே’ என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்தால் அந்த நிமிடமே நாம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுவோம். நம்மில் பலரும் அந்தக் கோணத்தில் கஷ்டத்தைப் பார்க்கவே பழகியிருக்கிறோம். நமக்கு கஷ்டங்கள் வரும்போது நாம் எந்தவிதமான எதிர்வினைகளை ஆற்றுகிறோமோ, அதைப் பொறுத்தே கஷ்டங்கள் நம்முடைய வரலாற்றுக்கான கதையை எழுதுகின்றன. சாதாரண மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் களின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.


தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர்களே நிறுவனத்தைப் புதிய பல நிலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் முன்னால் நிற்கின்றனர். சிறந்த தலைவர்கள் எப்போதுமே கஷ்டங்களை வாய்ப்புகளாக மட்டுமே பார்ப்பார்கள். ஏனென்றால், தலைவர்களே நிறுவனத்தைத் தெரியாத புதிய பல இடங்களுக்குக் கொண்டு செல்வார்கள். தெரியாத இடங்களுக்குப் (புதிய உச்சங்கள்) பயணிக்கும் பாதை என்பது கஷ்டங்கள் நிறைந்ததாக இருப்பதற் கான வாய்ப்புகளே அதிகம். இந்த இடங்களை அடைய சாதாரணமாக அனைவரும் பயணிக்கும் பாதையில் பயணிக்கக் கூடாது. புதிய முயற்சி களையும், ரிஸ்க்குகளையும், இன்னோ வேஷன்களையும் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கஷ்டங்களைக் கொண்டு வருவதற் கான விஷயங்கள் தான் இல்லையா? இதனாலேயே தலைவர்கள் கஷ்டங்களை வாய்ப்புகளாகப் பார்க்கும் குணாதிசயத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர்..


வழிநடத்தும் தலைவன்...


கஷ்டகாலங்களில் எப்படி ஒரு தலைவனாக நீங்கள் உங்கள் உடன் பணிபுரிபவர்களை வழிநடத்த வேண்டும் என்று கேட்கிறீர்களா? மேனேஜ்மென்ட் குருவான பீட்டர் ட்ரக்கர், ‘கொந்தளிப்பும் குழப்பமும் நிறைந்த கஷ்டகாலங்கள் மிகவும் பயங்கர மானவை. ஏனென்றால், இது போன்ற காலங்களில் நம்மால் உள்ளது உள்ளபடி பார்க்க முடியாமல் போய்விடும்’ என்கிறார். இருக்கும் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போய் விடுவதால் தவறான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புகள் அதிகமாகிவிடுகிறது. இதில் நகைமுரண் என்னவென்றால், உங்களுடைய குழு நிஜமான சூழல் என்னவென்று தெரிந்தால் அதற்கேற்ப சுலபத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் குணாதிசயத்தை முழுமையாகக் கொண் டிருக்கும். ஆனால், அந்தக் குழுவால் நிஜத்தை தாங்களாகவே முழுமையாக உணர்ந்துகொள்ள முடியாது. எனவே, தலைவர்களே சூழ்நிலையின் நிதர்சனத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு குழுவுக்கு விளக்கமாகப் புரியும்படி சொல்ல வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.


தொலைநோக்குப் பார்வை...


“இன்றைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது எவ்வளவு தூரம் தலைவர்களுக்கு அவசியமோ, அதே அளவுக்கு எதிர்காலத்தில் எந்த மாதிரியான சூழ்நிலைகள் உருவாகும் என்பது குறித்த பெரிய அளவிலான தொலைநோக்கு பார்வையும் தலைவர் களுக்கு அவசியம் வேண்டும்.


கஷ்டகாலத்தில் குழுவின் அங்கத்தினர் களுக்கு அவர்கள் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்வதால் எதிர்காலத்தில் என்ன விதமான பலன்கள் நிறுவனத் துக்கும் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதையும் தெளிவுபடுத்தும் திறமை தலைவர்களுக்கு அவசியம் வேண்டும்.


கஷ்ட காலங்களில் எல்லா கேள்விகளுக்கும் விடை தலைவர்களிடம் இருக்காது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கு விடையே இல்லை என்பது இல்லை. விடை இருக்கும். ஆனால், அதைத் தெரிந்துகொள் வதற்கான முயற்சியில் அதிக நேரத்தையும் உழைப்பையும் அதிகமாக செலவிட வேண்டி யிருக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் திறனும் தகுதியும் தலைவர்களுக்கு வேண்டும். இதற்கான முயற்சியில் தலைவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரிய ஆரம்பித்து விட்டாலே அவரின் கீழே இருக்கும் குழு நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்துவிடும்.


தலைவருடன் இருக்கும் குழுவுக்கு ஏற்கெனவே சூழ்நிலையின் நிதர்சனத்தையும், எதிர்காலம் எவ்வாறு இருக்க வாய்ப்புள்ளது என்ற பெரிய அளவிலான தொலைநோக்குப் பார்வையையும் விளக்கிவிட்ட படியால், அவர்களையே என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்துத் திட்டமிடச் சொல்லலாம். இது அவர்களுக்கு சுலபமான விஷயமாக இருக்காது என்றபோதிலும், அதற்கான உதவிகளை தலைமைப் பணியில் இருப்பவர்கள் வழங்குவதன் மூலம் அவர்களையே அந்த வழிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லலாம்.


இந்தவித திட்டமிடுதலின் போது எதிர்காலத்தில் நாம் செல்ல நினைக்கும் இடத்துக்குப் பயணிப்பதற்காகப் பல பாதை களை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். அந்தப் பாதைகளில் அதிக வெற்றிக்கு வாய்ப்புள்ள பாதைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு தலைவராக நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால், ஒரு தலைவனாக நீங்கள் உருவெடுக்க இதுபோன்ற பல சூழ்நிலைகளையும் அந்தச் சூழ்நிலைகளில் பல பாதை களையும் நிச்சயமாய் எதிர் கொண்டிருப்பீர்கள். அவற்றில் சரியானவற்றை பலமுறை தேர்வு செய்த காரணத்தால்தான் நீங்கள் இன்றைக்கு தலைமைப் பதவியில் இருக்கிறீர்கள் இல்லையா? அதனாலேயேதான் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும் எனச் சொல்கிறேன்” என்கிறார் ஆசிரியர்.


டீம் வொர்க்கின் அவசியம்...


“எந்த அளவுக்கு கஷ்டமான சூழ்நிலைகள் நிறைந்துள்ளதோ அந்த அளவுக்கு அதை எதிர்கொள்ள டீம் வொர்க் என்பது மிக அதிக அளவில் தேவைப்படும். எல்லோரும் ஒருமனதாய் ஒருங்கிணைந்து பணிபுரியாவி ட்டால் எந்த ஒரு டீமும் அற்புதமான வெற்றிகளை அடைய முடியாது. எனவேதான், டீம் வொர்க்கை ஊக்குவிக்கும் பொறுப்பு கஷ்ட மான காலகட்டத் தில் தலைமைப் பதவியில் இருப்ப வர்களுக்கு அதிக மாக இருக்கிறது என்று சொல் கிறேன்” என்கிறார் ஆசிரியர்.


இறுதியாக, ஒரு தலைவனின் தலையாய பணி என்பது தன்னுடைய குழுவில் நம்பிக்கை என்பது எப்போதும் நிலைத்திருக்கும் வண்ணமும், எப்போதுமே அது வாடிப்போகாமல் துளிர்த்திருக்கும் வண்ணமும் செயல் படுவதே. என்னதான் மலையளவு கஷ்டத்தில் இன்றைக்கு நாம் இருந்தாலும், அந்தக் கஷ்டத்தால் நம்முள்ளே தோன்றும் அழுத்தம் நம்மைத் தளர்வடையச் செய்தாலும், நம்மை முழுமூச்சுடன் செயல்படவிடாமல் பல முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், நம்முடைய மனம் என்ன நடக்கப் போகிறதோ என்று அலைபாய்ந்து கொண்டிருந்தாலும் நம்மால் இந்தச் சூழ்நிலையை வெற்றிகர மாகக் கடந்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை துளிரைத் தொடர்ந்து வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


குழுவின் மன உறுதி என்பது நம்பிக்கை என்ற இந்த அடித்தளத்தில் இருந்தே உருவாகி செழித்து வளர்வது. மன உறுதியே கஷ்டகாலத்தில் அவர்களை நிலைநிறுத்தி செயல்படவைத்து இறுதியில் வெற்றியடையச் செய்வது. அதனாலேயேதான் நம்பிக்கை என்பது எப்போதும் குழுவின் மத்தியில் தழைத்திருக்கும்படி தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்கிறார் ஆசிரியர்.


சமகால சூழ்நிலையில் நம் அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் அறிவுரைகள் பலவற்றையும் ஆய்வுகள், உதாரணங்கள், மேற்கோள்கள் போன்ற வற்றின் மூலம் வெகு இலகுவான நடையில் சொல்கின்ற இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.


நன்றி .🙏.வாசிப்பை 📚..நேசிப்போம் ..🥰.நடைமுறை வாழக்கையுடன் ..🥰🙏🤝📚📚✍️✍️✍️.

சிவக்குமார் |||VK 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

வியாழன், 22 ஜூலை, 2021

  ...நீங்க கற்று கொடுத்ததை அடுத்தவர்களிடத்தில் பிரயோகித்தால் உங்களின் பலம்.

அத உங்ககிட்ட காண்பித்தால் உங்களின் பலவீனம்.
ஏன்னா அவர் சண்டைக்கு பழக்கி விட்ட சேவல் மாதிரி நிக்கறாரு.

 வெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....


ஆம்! 


வெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.


போரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.


ஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்!


அவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்! 


அங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்காரனின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.


ஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்  வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.


அப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்! 


அப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர்  வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.


அவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்! 


அந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.


அந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது. 


சமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது. 


அந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.


அந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன!


முதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது. 


இரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது. 


மேலும் பலவலுவான காரணங்கள் :  


அந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு) 


அந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.


கல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது. 


ஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்?....


எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது!..


வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்! 


வெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்!


அந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.


ஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று  கல்வெட்டு இருக்கிறது!...


அந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும். 


அந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்!..


பலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது!....


சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.


அதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும். 


அங்கு எடுக்கப்பட்ட படங்கள்.....📚📚✍️✍️



இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை ஆவணப்படுத்தி கடந்த 2018 ஆண்டு மே 19 .உடுமலையில் நகராட்சி திருமண மண்டபத்தில் .உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்  மூலம் .கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ,செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் தலைமையில் "தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர்" என்ற நூல் வெளியிட பட்டது ... 

புதன், 21 ஜூலை, 2021

 கேள்வி :  வாழ்க்கையை ரசித்து வாழத் தெரியாதவர்கள் யார்?


என் பதில் 


15 வருடங்களுக்கு முன்னாள் நடந்தது ,எனக்கு தெரிந்த நல்ல மனிதர் அவர். பொறியாளர். வெளிநாட்டில்பணிசெய்துவிட்டு  வந்து சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் ஆரம்பித்தார்.


கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் முன்னேறியது. ஒரு நல்ல நிலைக்கு முன்னேறினார். ஆனாலும் தானே முன்னின்று எல்லா வேலையும் செய்தார். அவர் அலுவலகத்தை விரிவு படுத்தி பல நல்ல ஒப்பந்தங்களை கையக படுத்தினார். லாபம் பல மடங்கு வந்தது.


தன் லாபத்தில் கோவை மத்திய பகுதியில்   ஒரு நல்ல இடம் வாங்கி அதில் தங்குமிடம் கட்டினார். செம்ம வாடகை. மாத வருமானம் 1 லட்சம். பின்பு இங்கே வரும் மாத வருமானம் 5 லட்சம். ஆனாலும் மனிதர் பயங்கர வேலைக்காரர். ஓய்வு சுத்தமாக இல்லை.


என்னிடம் கடைசியாக பேசிய போது, வீடு கட்டி விட்டதாகவும், அதில் தற்போது தான் பாரின் சோபா வாங்கி போட்டிருக்கேன் என்றார்.


ஒருநாள் என்னிடம் வந்து தனக்கு தலை சுத்துவது போல் இருக்கிறது என்றார்.


BP 170/110


இது மிக அதிகம் என்று நான் கூறி, வாழ்க்கை முறையை மாற்றுவது உடனடியாக செய்ய வேண்டும் என்றேன். உங்களுக்கு ஒரு உதவியாளர் தேவை எனவும், உணவு மாற்றம் முதல் வாழ்க்கை மாற்றம் வரை கூறினேன். சரியாக கேட்கவில்லை. அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.


இப்போது அவர் இல்லை. திடீரென்று அட்டாக். வயது 46 தான். இவ்வளவு நாள் கடுமையாக உழைத்தது எல்லாம் எதற்காக? அந்த பாரின் சோபா யார் இப்போது உபயோகிக்கிறார்கள்?


வாழ்க்கையை நாளைக்கு நாளைக்கு என்று ஒத்தி போடுபவர்கள் தான், ரசிக்க வாய்ப்பு இருந்தும், வாழ தெரியாதவர்கள்.


இந்த அடிப்படையில் கூடுதல் நேரம் உழைப்பவர்கள், அலுவலகத்தை கட்டி கொண்டு அழுபவர்கள், பாவபட்ட ஜென்மங்கள். எல்லாவற்றையும் நாளைக்கு என்று ஒத்தி வைத்து வாழ்கிறார்கள்.


ஒரு நல்ல நிகழ்ச்சியோ, மகிழ்ச்சி தரும் சம்பவங்களோ, ஒரு மனதிற்கு இனிய நேரமோ, யாருக்கும் காத்திருப்பதில்லை. அது கடந்து சென்று கொண்டுதான் இருக்கும்.


நீங்கள் ரசிக்க உங்களின் குழந்தை, குழந்தையாகவே இருக்க போவதில்லை. 5 வயதுக்கு மேல், "நான் என் வேலையை செய்து கொள்வேன்' என சொல்லிவிடும்.


நீங்கள் ரசிக்க உங்கள் அன்புக்குரிய நண்பர்கள் எப்பொழுதும் உங்களுடனே இருக்க போவதில்லை. ஒரு நாள் அவருடன் தேநீர் குடிப்பதில் தவறு இல்லை.


நீங்கள் ரசிக்க உங்கள் சகோதரர் எப்பொழுதும் உங்கள் வீட்டிலேயே இருக்க போவதில்லை.


உங்கள் வீட்டுக்கு இராகம் பாட வரும் குயில், காகம் மறுபடியும் வருமா?


விட்டுப்போன எந்த நிகழ்வும் மறுபடி வராது.


வாழ்க்கையை ரசிக்க தெரியாதவர்கள், வாழ சரிவர நேரம் ஒதுக்காதவர்கள் தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே ..நன்றி ....


நண்பேண்டா.....

 நண்பேண்டா.....

👍🎂🎂🎂
வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஆறுதல்சொல்லும் நண்பர்கள் கிடைத்தால் ...அதுவரம்..அதுவும் பிரதிபலன் பாராமல் கிடைக்கும் நண்பன் கிடைத்தால் வரமோ வரம் .
மகிழ்ச்சியில் மட்டும் பங்கு கொள்ளும் நண்பர்களை விட கஷ்டகாலங்களில் ,துக்க காலங்களில் கூடவே இருக்கும் நண்பர்களால் தான் வாழ்க்கை சக்கரம் உருண்டுகொண்டு இருக்கிறது ...அந்த நண்பர்களில் ஒருவரில் இந்த நண்பனும் ஒருவர் ....என் இனிய நண்பன் ..என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🎂👍👍
Friend ... .. Comfortable friends in the difficult times of life ...
Life is rolling with friends who are in difficult times, even in times of grief, than friends who share in happiness ... This is one of those friends. This is my sweetheart...Many More Happy returns of the day...👍👍🎂🎂🌱🌳💦💦
Afzal Noor MBA, SOCPA
Founder Member & Founding President - BNI Oscar, Coimbatore Co-Founder at kre8ive tekcepts private limited
Coimbatore, Tamil Nadu, India ......👍🌱🌱🌳🌳☔☔🎂🎂

செவ்வாய், 20 ஜூலை, 2021

 கேள்வி : மன நிலையை சிறப்பாக வைத்திருப்பதற்கான தந்திரங்கள் என்னென்ன?


என் பதில் : 


இந்த கேள்விக்கான பதிவில் ஒருவர் கழுதை படத்தை வைத்து எழுதியிருந்தார்..கழுதையை பார்த்ததும் கேள்வியை பார்த்ததும் எங்கோ கேள்விப்பட்ட சில நல்ல கருத்துக்கள் எனக்கு தோன்றியது.


மனநிலையை சரியாக வைத்திருப்பதற்கான தந்திரங்கள் என்ன என்பதே கேள்வி…


அதற்கான ஒரு தந்திரத்தை நாம் கழுதையிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.


அழுக்கு நிறைந்த துணிகளை, கழுதையின் முதுகில் ஏற்றிவிட்டு, துணிகளை துவைப்பதற்காக ஆற்றிற்கு அழைத்து செல்கிறான் முதலாளி.

கழுதையை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, துணிகளை எல்லாம் நன்றாக துவைத்துவிட்டு, மாலையில் சுத்தமான வெண்மையான துணியை கழுதையின் முதுகில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான் முதலாளி.

என்னடா திரும்ப திரும்ப, முதலாளி என்கிறானே என்று பார்க்கிறீர்களா?…கழுதைக்கு அதை மேய்ப்பன் தானே முதலாளி…

உங்களை யார் மேய்க்கிறார்…உங்களுக்கு யார் முதலாளி…என்பதை எல்லாம் நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்..! குறிப்பு: நான் யாரையும் கழுதைனு சொல்லலிங்கோ..!

இப்படி காலையில் அழுக்குத்துணிகளை தூக்கி வரும்போது கழுதை அழுக்குத் துணிகளை தூக்குகிறோமே என்று விரக்தியும் அடையவில்லை.

மாலையில் வெண்மையான சுத்தப்படுத்தப் பட்ட துணிகளையும் தூக்கி வரும்போது, குதூகலமும் அடையவில்லை..!

மனிதர்களான நாமும், கழுதையை போல கஷ்டமான பல சூழ்நிலைகளை வாழ்க்கையில் கடந்து வரும்போது நமது மனநிலையை மிகவும் விரக்தியாகவும் வைத்துக் கொள்ளக்கூடாது…


அதே பல வெற்றி கனிகளை சுவைக்கும் போதும், நமது மனநிலையை வானளவு உயர்த்தியும் வைத்துக்கொள்ளக்கூடாது…


கழுதையை போல வாழ்வில் கஷ்டம் வந்தாலும் மகிழ்ச்சி வந்தாலும், அதை சுமக்கப்போகிற கழுதை நாம் தான் என்று நம் மனநிலையை பக்குவமாக அடக்கி வைத்துக்கொள்வது சிறந்தது…!


நமக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எவரிடமும் எதிர்ப்பார்க்காமல் வாழலாம்.


எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாத வாழ்க்கையே எதார்த்தமான வாழ்க்கை..!

தற்பொழுது கழுதை அரிதான இனமாகவும் வெகுவிரைவாக அழிந்து வரும் இனமாகவும் உள்ளது ...

நன்றி.


இனிய நண்பர் சிவக்குமார்-க்கு  என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

திங்கள், 19 ஜூலை, 2021

கேள்வி :  ஜனாதிபதியே ஆனாலும் டாக்டர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவார், மக்கள் அனைவரும் வணங்கும் ஒரே நபர் டாக்டர் மட்டுமே என்ற பேச்சு உண்டு, +2 மாணவர்கள் மருத்துவம் படிக்க ஆசைபட காரணம் டாக்டர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதையா அல்லது பணமா?


என் பதில் : 


டாக்டர் என்ற சொல்லுக்கு a person who holds highest degree அதாவது மெத்தப் படித்தவர்கள் என்று பொருள்..


எந்த துறையிலும் பிஎச்டி என்ற ஆய்வுப் படிப்பை படித்தால்.. அவர்கள் பெறுவது டாக்ட்டரேட் என்ற அந்தஸ்தை தான்..


அது வைத்தியம் பார்க்கும் மருத்துவ தொழில் மட்டுமே அல்ல.. பொறியியல் துறை வணிகம் கலைத்துறை போன்ற அனைத்து துறைகளிலும் உபயோகப்படும்.


இதை விட படிக்கவே இல்லை என்றால் கூட அரசியல்வாதிகள்…நடிகர்கள் தொழிலதிபர்கள்.. கவுரவ டாக்டர் பட்டம் பெற்று கொள்கின்றனர்..


அது மட்டும் அல்ல.. பத்து நாள் ஆன்லைன் க்ளாஸில் சான்றிதழ் வாங்கி வைத்து கொண்டு அக்குபஞ்சர்.. அக்கு ப்ரஷர்.. ரெய்கி.. ப்ராணிக் ஹீலர் என்போரும் டாக்டர் பட்டம் போட்டு கொள்கின்றனர்..


அதனால்.. இந்த பட்டம்.. தற்காலத்தில் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக கருத முடியாத நிலைமை தான் உள்ளது..


மருத்துவம் படிப்பது அவரவர் விருப்பம் மட்டுமே.. இந்தியா போன்ற நாடுகளில் மக்களின் வாழ்வியல் கஷ்டங்களை எவ்வளவு தூரம் தெரிந்து கொள்கிறாரோ அவர்களே மருத்துவர்களாக மக்கள் மத்தியில் வியாபித்து இருக்க முடியும்..


ஒரு மருத்துவர் சம்பாதிக்கும் பணம் என்பது மற்ற தொழிலில் உள்ளவர்கள் போல FIXED SALARY கிடையாது.. அவர் எவ்வளவு மணி நேரம் ப்ராக்டீஸ் செய்கிறார்களோ அவ்வளவு சம்பாதிக்க முடியும்.. அரசு வேலையில் வாங்கும் சம்பளம் போதவில்லை என்றால் வேலையை விட்டு விட்டு ப்ரைவேட் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.


வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வார்கள்.. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் எவ்வளவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் படித்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்க படும்..அதுவும் சீஃப் டாக்டர் அனுபவம் பெற்ற பிறகு தான் நல்ல சம்பளம் கிடைக்கும்…


எனது நண்பரின் குடும்பத்தினர்  இரண்டு தலைமுறையாக மருத்துவ தொழிலில்   இருப்பதால் சொல்கிறேன்.. சர்க்கரை நோய் மருத்துவரான   குடும்ப நண்பரின் தந்தையை கம்பேர் செய்யும் போது.. பாதி அளவு கூட சம்பாதிக்க தெரியாத அறுவை சிகிச்சை நிபுணரை..  தந்தையின் நண்பர்களை அறிவேன்..அவரவர் அமைத்து கொள்ளும் வேலை முறைகள் தான் காரணம்..


இந்த படிப்பை படிப்பதற்கு போதிய உழைப்பு தான் முக்கியமாக தேவை..


மற்ற படி.. மரியாதை எல்லாம் இன்றைய காலத்தில்  யாரும் எதிர்பார்ப்பது இல்லை..  வேலையை மருத்துவ சட்டதிட்டங்களை மதித்து செய்ய வேண்டும்.. நோயாளிக்கு எது நன்மையோ அவற்றை.. நோயரின் சம்மதத்துடன் proper medico legal consent உடன் சிகிச்சை செய்வது மட்டுமே நல்லது..


பல இடங்களில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடக்கும் போது. நினைப்பதெல்லாம் நம்மால் இந்த மக்களை மாற்ற முடியாது .. நாம் செய்யும் சிகிச்சையை சட்டப்படி செய்து எங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான்…


நீட் தேர்வு எழுதப்போகும் குழந்தைச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் ..

நன்றி ....


 மாலிக் திரைப்படம் - மலையாளம்

https://www.pdisk.net/share-video?videoid=nv2gsh002mzr 


மணிரத்தினத்தின் வேலுநாயக்கரை (நாயகன்) மலையாள அலியக்காவாக மாற்றியுள்ளார் இயக்குனர் மகேஷ் நாராயணன். 


ஒரு கதாநாயகன் இன்ட்ரோ இல்லை.5 பாடல்கள் இல்லை.100 ரவுடிகளை பறந்து அடிக்கும் ஹீரோயிசம் இல்லை.கமர்சியல் படத்திற்காக சாயல் துளியும் இல்லை. சரி நாயகியாச்சும் பளபளனு வடக்கில் இருந்து வந்த ஆளானா அதுவும் இல்லை.இவ்வளவு இல்லை களையும் தாண்டி என்னா நடிப்புய்யா..

ஞாயிறு, 18 ஜூலை, 2021

திருக்கோயில்களில் 'பரிவட்டம்' கட்டுதல்

.தமிழர் பாரம்பரியம் ...

திருக்கோயில்களில் 'பரிவட்டம்' கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு. உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும். கோயில் வரவேற்பு மங்கல நிகழ்வாகப் பெருய தக்கார்க்குச் செய்வதாய் அமைகின்றது. முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது🥰🥰🥰📚📚📚✍️✍️✍️✍️


ஆற்றல் நிறைந்தவனாக

இருப்பதைக் காட்டிலும்

நேர்மையானவனாக இருப்பது

மேலானது..........!


துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும்.


எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள்.


உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.


அப்போது தான் வாழ்க்கை  பயணம் சிறக்கும்!...!...!!.!!

கேள்வி : உண்மையான மகிழ்ச்சி என்று நீங்கள் எதை கூறுவீர்கள்  சிவா சார் ?


என் பதில் : 


 நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம்? என்பதில் மகிழ்ச்சி இல்லை, அந்தப் பணத்தை எப்படி செலவு செய்கிறோம்? என்பதில்தான் மகிழ்ச்சியின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

நீங்கள் ஒரு லட்ச ரூபாய் அதிகமாக சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பது மகிழ்ச்சியில்லை! ஒரு லட்ச ரூபாயை என்ன செய்ய போகிறீர்கள்?

ஒரு இரண்டாவது கார் வாங்கப் போகிறேன், என்றால் அது சொத்து என்றாலும் உங்களுக்கு மட்டும் தான் மகிழ்ச்சி.

தன் குடும்பத் கூட்டிக்கொண்டு அல்லது குடும்ப நண்பர்களுடன் , இந்தியாவில் உள்ள கோவில்கள் சுற்றுலாத்தலங்கள் செல்வேன். அவர்கள் விரும்பும் இடம் உணவு ஏற்பாடு செய்து எல்லாருக்கும் பல ஊர்களை சுற்றி காட்டுவேன். இதுதான் ஒரு லட்ச ரூபாய்க்கு என் செலவு, என்று நீங்கள் சொன்னால், அதுதான் உண்மையான மகிழ்ச்சி.

காரணம் உங்கள் பணத்தை, சொத்து வாங்க பயன்படுத்தாமல், ஒரு புதிய அனுபவம் கிடைக்க, அதுவும் பிறருக்காக நாம் செலவுகள் செய்யும் போது, அது கடைசியில் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. என்னை பொருத்தவரை மிகவும் முக்கியமான உளவியல் உண்மை.

நாம் எதை நம்ப விரும்புகிறோமோ அதைத்தான், நாம் நம்புவோம்.

ஆங்கிலத்தில் இதை Confirmation Bias என்று சொல்லுவார்கள். எளிதில் புரிந்து கொள்ளலாம்.....


நன்றி ...