வெள்ளி, 29 நவம்பர், 2019

சம்பாதிக்கும் அனைத்து பணமும் செலவழிந்துவிட்டால் நம்முடைய கடைசி காலத்தை எவ்வாறு சமாளிப்பது? உங்கள் யோசனைகளைக் கூறவும்....

அமெரிக்காவில், 18.8% அல்லது 90 லட்சம், 65 வயதைத் தாண்டிய மக்கள் இன்னும் முழு நேரமாகவோ, அல்லது பகுதி நேரமாகவோ வேலைபார்த்து வருகின்றனர். இது 2015ம் ஆண்டில், 12.8% அல்லது 40 லட்சத்திலிருந்து, அதிகரித்துள்ளது.

More older Americans are working than in recent years

This may be why Americans are so bad at saving for retirement

சரியான ஓய்வு கால திட்டமிடல் இல்லாமை, அதிக செலவுகள் நிறைந்த பகுதிகளில் வாழ்வது, அதிகமாக செலவழித்து வாழ்வது, ஓய்வு கால நிதியினை நடுவிலேயே எடுத்துவிடுவது என்ற பல காரணங்களால், மக்கள் தங்களது தங்கமாக ஓய்வு காலத்தில் வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, கடைசி காலத்தினை யார் கையையும் ஏந்தாமல், நிம்மதியாக வாழ்வதற்கு ஓய்வுகால திட்டமிடல் என்பது மிகவும் அவசியமானது. வங்கி சேமிப்பு, பரஸ்பர நிதி சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி என்று எவ்வளவுக் எவ்வளவு சேமிக்க முடியுமோ, சேமித்து முதலீடு செய்வது நல்லது.

ஆனால், எல்லாப் பணமும் தீர்ந்துவிட்டால், கடைசி காலத்தினை எவ்வாறு கழிப்பது என்பதற்கு பின்வரும் ஆலோசனைகள் எனக்குத் தோன்றுகின்றன.

நீங்கள் ஏதேனும் ஒரு தொழிலில் திறமையானவராக இருப்பீர்கள். அந்த தொழிலில் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ சில காலம் மறுபடி வேலையில் சேருங்கள். இப்போது, சேர்க்கும் பணத்தை கடன் பத்திரம் சார்ந்த நிலையான வருமானம் கொடுக்கும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யுங்கள். இப்போது, ஈவுத் தொகை அவ்வப்போது அளிக்கும் பங்குகளில் முதலீடு செய்தால், இது அடிக்கடி உங்களது சேமிப்பு கணக்கில் பணம் கொடுத்து, உங்களுக்கு உதவி செய்யும். மாதா மாதம் பணம் தரும், ஓய்வுகால வருடாந்திர திட்டங்களில் (Annuity Scheme) முதலீடு செய்யுங்கள்.

அதிகம் செலவு இல்லாத கிராமங்கள் அல்லது நகரங்களுக்கு குடியேறுங்கள். சென்னை நகரத்தின் செலவை விட, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் செலவு குறைவு. இன்னும் சிறிய ஊர்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கோவில்பட்டி,உடுமலைப்பேட்டை ,திண்டுக்கல் கிராமங்கள் ..தேனீ ..போடி  போன்ற ஊர்களில் இன்னும் செலவு குறைவு. கிராமங்களில் வாழ்ந்தாலோ, இன்னும் செலவு குறைவு.

உங்களுக்கு ஏதேனும் சொத்து இருந்தால், அதை விற்று விட்டு, அதை முதலீடு செய்து, அதை நிரந்தரமான வருமானத்திற்கு உதவுமாறு மாற்றிக் கொள்ளுங்கள். உதாரணமாக, சொந்த வீடு இருந்தால் விற்றுவிட்டு, நகரத்திலிருந்து விலகி, சிறிய வீட்டிற்கு மாறி விடுங்கள். நகைகள் போன்றவற்றை விற்று, வைப்பு நிதிகளில் முதலீடு செய்யுங்கள்.

வீடு என்பது அத்தியாவசியமான ஒன்று. அது முதலீடு அல்ல. சிறிய வீட்டிற்கு குடிபுகுந்து, சேர்ந்த பணத்தினை முதலீடு செய்யுங்கள். இவ்வளவு நாட்கள் இருந்த வீடு என்று யோசிக்காதீர்கள். யாரையும் கையேந்தாமல் வாழ்வது தான் முக்கியம். மற்ற எதுவும் முக்கியமல்ல.

உங்களிடம் உள்ள அவசியமற்ற எல்லா பொருட்களையும் விற்று விட்டு, முதலீடு செய்து விடுங்கள். பொருட்கள் உங்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்காது. முதலீடுகள் பணம் சம்பாதித்துக் கொடுக்கும்.

உங்களது வாழ்க்கைத் துணையும் வேலை , முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ முடியுமா என்று பாருங்கள். இருவரும் சம்பாதிக்கும் போது, அதிகமாக முதலீடு செய்ய முடியும்.

எங்கெங்கெல்லாம், முதியோருக்கு சலுகைகள் உள்ளனவோ, அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, ரயில் பயணங்கள், வங்கிகளில் வைப்பு நிதி கணக்குகளில் அதிக வட்டி விகிதம், அதிக வரிச்சலுகை என்று எங்கெங்கெல்லாம் அதிக பணத்தை மிச்சம் பிடிக்க முடியுமோ, பாருங்கள்.
உங்களுடைய செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு குறைவாக செலவழிக்க முடியுமோ பாருங்கள். உங்களுடைய அனாவசிய செலவுகளை நிறுத்துங்கள். அதிக பணத்தை சேமிப்பதன் மூலம், நீங்கள் அதிகமாக முதலீடு செய்து, அதிகமாக பணத்தை பெருக்க முடியும்.

நல்ல ஒரு காலவரையுள்ள காப்பீட்டு திட்டத்தில்(Term insurance) அல்லது அரசு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்கள் (உதாரணமாக, வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா, varisha pension Bhima Yojana) போன்ற திட்டங்களில் பயன் பெறுங்கள்.
அரசு மருத்துவமனை மற்றும் அரசு சார்ந்த மருந்தகங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களது மகனோ அல்லது மகளோ, உங்களுடன் இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்றால், அவர்களுடன் சேர்ந்து வாழத் தொடங்குங்கள். உங்களுடைய செலவுகளை அது பெருமளவில் குறைக்க உதவும்.

பங்கு சந்தை சார்ந்த எந்த ஒரு முதலீட்டையும் தவிருங்கள். அவற்றின் ஏற்ற இறக்கங்கள், உங்களுடைய முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்கும். வங்கி வைப்பு கணக்கு போன்ற குறிப்பிட்ட வருமானம்சார்ந்த திட்டங்களில் (Fixed Income Schemes) முதலீடு செய்யுங்கள்.

உங்களுக்கான பொருட்களை, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு நிரப்ப பாருங்கள். olx.in, Freecycle.org, quikr.com ,amzon.alibaba,போன்ற இணையதளங்களில் ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், நீங்கள் செலவைக் குறைத்து, அதிகம் முதலீடு செய்ய முடியும்.

இவ்வாறு, சிக்கனமாக வாழ்க்கை அமைத்துக் கொண்டுவிட்டால், எதிர்காலத்தை நன்றாக நிர்வகிக்கும் அளவிற்கு உங்களுக்கு முதலீடு உதவத் தொடங்கியவுடன், நீங்கள் நிஜமாகவே ஓய்வு பெறத் தொடங்கலாம். உங்களது ஓய்வு காலத்தை, சமூகத்தின் சேவைக்காக, உங்களது உடலாலும், அறிவாலும் செலவழியுங்கள். ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக